என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை அன்னவாசல் அருகே பரிதாபம்
    • உடல்கூறு ஆய்விற்கு பிறகு செத்த மானை, வனத்துறையினர் புதைத்தனர்

    விராலிமலை,

    அன்னவாசல் அருகே 1500-ஏக்கர் பரபப்பளவில் அரசுக்கு சொந்தமான அண்ணாபண்ணை உள்ளது. இங்கு அதிக அளவில் மான்கள் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் அங்கிருக்கும் மான்கள் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியேறும் போது வாகனங்களில் அடிபட்டும் நாய்களிடம் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வயலோகம் அருகே உள்ள குறும்பக்குளம் பகுதியில் மான் ஒன்று சுற்றி திரிந்தது. இதைபார்த்த நாய்கள் துரத்தி சென்று அந்த புள்ளிமானை கடித்து குதறியது. இதில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, வருவாய்த்துறை, கால்நடைத்துறை அலுவலர்கள் புள்ளிமானை உடற்கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர்.

    • மீன்களை உற்சாகமாக அள்ளி சென்ற கிராமமக்கள்
    • அன்னவாசல் அருகே புதூர் பெரியகுளத்தில் நடைபெற்றது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் அருகே உள்ள புதூர் பெரிய–குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து குளம் நிறைந்து விவசாயம் செழிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண் டுதல். இந்தநிலையில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் இந்த குளம் நிரம்பியது.மேலும் அந்த குளத்தில் மீன்களும் அதிக அளவில் இருந்தன. இதனையடுத்து குளத்தில் தண்ணீர் வற்றியதால், குளத்தில் இருக்கும் மீன்களை பிடித்து கிராமமக்கள் சேர்ந்து திருவிழா–வாக கொண்டாடி மகிழ்வதும் வழக்கம்.இதனையடுத்து இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசிய உடன், குளத்து கரையில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கொண்டு வந்த கச்சா, தூரி, வலை, சேலை என அவற்றை குளத்தில் வீசி ஒவ்வொருவரும் மீன் பிடிப்பதும், தங்களுக்கு கிடைக்கும் மீன்களை எடுத்து சென்று சமைத்து சாப்பிடுவதும் கிராம மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி ஆகும்.இந்த மீன்பிடி திருவிழா சகோதரத்துவத்தையும் கிராம மக்களின் ஒற்றுமையையும் ஜாதி, இன பாகுபாடு அற்ற தன்மையையும் தரும் ஒரு உன்னத நிகழ்ச் சியாகும். இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்று வட் டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை, விரால் ஆகிய மீன்களை பிடித்தனர். பின்னர் பிடித்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அதிகாலை முதலே கூடியிருந்தனர். ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி மீன்பிடித்த சம்பவம் அனைவருக்கும் மகிழ்ச் சியை ஏற்படுத்தியது.

    • ராகுல் எம்.பி.பதவி பறிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஏராளமான கம்யூனிஸ்ட்டுகள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை,

     ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு மற்றும் திரிபுரா மாநிலத்தில் பயங்கரவாத செயலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில், கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், மாவட்டக்குழு உறுப்பின ர்கள் க.முகமதலிஜின்னா, ஆர்.வி.ராமையா, நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்த னன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சி. ஜீவானந்தம், வி.ரெத்தி னவேல், தென்றல் கருப்பையா, அ.மணவாளன், பி.வீரமுத்து, டி.சலோமி, பி.சுசிலா, சி.மாரிக்கண்ணு, எஸ்.பாண்டிச்செல்வி, என். பக்ருதீன், கே.தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். 

    • புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து முத்துகுடா வரையிலும் 32 மீனவ கிராமங்கள் உள்ளன.
    • இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் இருந்து முத்துகுடா வரையிலும் 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மீன் பிடித்தொழிலுக்காக கடலுக்குள் சென்று வருகின்றன.

    அதே போன்று ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லுகின்றன. இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் கரை பகுதியிலிருந்து 5 நாட்டிக்கல் வரையிலும், 5 நாட்டிக்கலுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வரையறுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கின்ற கரை பகுதியிலிருந்தே விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவ்வப்போது இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

    ஏனெனில் விசைப்படகுகளில் அரிவலை போன்ற வலைகளை பயன்படுத்துவதால் மீன் வளர்ச்சிக்கு ஆதாரமான கடல்பாசி, பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் அனைத்தும் அரிக்கப்படுவதால் எதிர் காலத்தில் கடலில் மீன் இனமே இருக்காது எனக் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்களின் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புதுக்குடி பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனர்வர்கள், அத்துமீறிய கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளனர்.

    அப்போது இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து தங்கள் பகுதியிலுள்ள வலைகளை சேதப்படுத்தி மீன்பிடித்ததாகக் கூறி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 3 விசைப்படகுகள் மற்றும் அதில் சென்ற 12 மீனவர்களையும் புதுக்குடி நாட்டுப் படகு மீனவர்கள் சிறைபிடித்தனர்.

    இதற்கிடையில் படகுகளையும் மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சென்ற மீன்வளத்துறையினர், காவல்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தைக்கு பிறகு 12 மீனவர்கள் மட்டும் காவல்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்னர். மேலும் சிறை பிடிக்கப்பட்ட விசைப்படகுகள் புதுக்குடி கடல் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடலில் வலை விரித்து மீன்பிடிப்பதில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் நடைபெற்றுவருவது தொடர்கதையாகி உள்ளது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே இருதரப்பு மீனவர்களின் கோரிக்கையாகும்.

    • அன்னவாசல் அருகே மது விற்றவர் கைது செய்யபட்டார்
    • விற்பனைக்காக வைத்திருந்த 72 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை

    அன்னவாசல் அருகே உள்ள மாங்குடியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் அன்னவாசல் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்ட போலீசார் மாங்குடி ரேஷன்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட மாங்குடி விளாப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 72 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.




    • ஊராட்சி செயலகம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • ஊராட்சி செயலகம் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஒரே இடத்தில் அமையும் வகையில் ஊராட்சி செயலகம் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன், துணைத்தலைவர் பாப்பாத்தி காசிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் திருஞானம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • புதுக்கோட்டை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சன்ன ரக நெல்லை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்
    • பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பேசும்போது, புதுக்கோ ட்டை மாவட்டத்தில் நெல் 97854 ெஹக்டேர் பரப்பளவிலும், சிறுதானி யங்கள் 1985ெஹக்டேர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 4438 ெஹக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 13345 ெஹக்டேர் பரப்பிலும், கரும்பு 2182 ெஹக்டேர் பரப்பளவிலும், பருத்தி 374 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12550 ெஹக்டேர்பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.

    மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 51.291 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 35.188 மெ.டன் பயறு விதைகளும், 4.830 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.786 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.206 மெ.டன் எள் விதைகளும் 0.611 மெ.டன்கள் பசுந்தாள் உர விதைகளும் இருப்பில் உள்ளன.

    விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் நெல் சாகுபடியில் சன்ன ரகங்களை அதிக அளவில் சாகுபடி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தழைச்சத்து உரம் தேவையான அளவு கிடைப்பதோடு மணிச்சத்து அதிகளவில் கிடைப்பதனால் பயிர் வளர்ச்சி சீராகவும், பூச்சிநோய் தாக்குதல் குறைவாகவும், அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்பு ள்ளதால், விவசாயிகள் எம்ஏபி உரத்தினை வாங்கி பயன்பெறுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர்.

    2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1100ெஹக்டேர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 2716 பயனாளிகளுக்கு 2988 ெஹக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7 கோடியே 24 இலட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ள ப்படுகிறார்கள்.

    இந்த ஆண்டு மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு பின் உளுந்து சாகுபடி பரப்பினை அதிகப்படுத்திட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.400 மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்பட உள்ளது.கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 72,000 தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பெ.வே.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், சரக துணைப் பதிவாளர் சதீஸ்குமார் மற்றும் அலுவலர் கள், விவசாயிகள் கலந்துகொண்டனர் .








    பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய ஒன்றிய குழு தலைவரின் கணவரை கைது செய்ய கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பாஜக தெற்கு ஒன்றிய தலைவராக சக்திவேல் உள்ளார். ஒப்பந்ததாரரான இவர் ஒப்பந்த பணிகள் தொடர்பாக அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒன்றியக்குழுத் தலைவரின் கணவர் சண்முகநாதனுக்கும், சக்திவேலுக்கும் ஒப்பந்த பணிகள் தொடர்பாக வாக்குவாதம் மூண்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஒன்றியக்குழு தலைவரின் கணவர் சண்முகநாதன், சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சக்திவேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஒன்றியக்குழு தலைவரின் கணவரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்ட த்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கி டையில் சம்மந்தப்பட்ட சக்திவேல், சண்முகநாதன் ஆகிய இருவர் மீதும் காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பாஜக தெற்கு ஒன்றிய தலைவராக சக்திவேல் உள்ளார். ஒப்பந்ததாரரான இவர் ஒப்பந்த பணிகள் தொடர்பாக அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒன்றியக்குழுத் தலைவரின் கணவர் சண்முகநாதனுக்கும், சக்திவேலுக்கும் ஒப்பந்த பணிகள் தொடர்பாக வாக்குவாதம் மூண்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஒன்றியக்குழு தலைவரின் கணவர் சண்முகநாதன், சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சக்திவேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஒன்றியக்குழு தலைவரின் கணவரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்ட த்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கி டையில் சம்மந்தப்பட்ட சக்திவேல், சண்முகநாதன் ஆகிய இருவர் மீதும் காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • சேகர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
    • 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார். அதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

    அப்போது அவருக்கு கே.புதுப்பட்டி அருகேயுள்ள போசம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் ராஜா (வயது 35) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் சேகரிடம் லண்டன் அல்லது பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்காக உடனடியாக ரூ.15 லட்சம் பணத்தையும் வாங்கியுள்ளார்.

    ஆனால் காலம் கடந்த பின்னரும் அவரை லண்டன் நாட்டிற்கு அனுப்பாமல் கிர்கிஸ்தான் நாட்டிற்கு அனுப்பியுள்ளார். இவரை போலவே சீனிவாசன், சுப்பையா மற்றும் சிலரிடம் சுமார் ரூ.92 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு சரியான வேலையை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் சந்தோஷ் ராஜாவிற்கு துணையாக கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஆதில்வினோ என்பவரது மனைவி நிவேதா (26), கேரளாவை சேர்ந்த ஜோஸ்வா நிதின், மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ராஜ்கமல் மற்றும் சிலர் உதவியுள்ளனர். சேகர் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் மோசடியில் ஈடுபட்ட சந்தோஷ்ராஜா, மதுரையை சேர்ந்த ராஜ்கமல், கன்னியாகுமரியை சேர்ந்த நிவேதா ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய சலுகைகள் அறிவிக்கப்பட வில்லையெனக்கூறி தமிழகம் முழுவதும் அந்தந்த அரசு பேருந்து பணிமனை முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

    அறந்தாங்கியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிஐடியு மத்திய சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    அப்போது 2022ம் ஆண்டு மே மாதம் முதல் ஓய்வு பெற்றோருக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான நிலுவை தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் கொரொனா காலத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்பாட்டத்தில் கிளை பொறுப்பாளர் சுப்பிரமணியன், கிளைத் தலைவர் மகேந்திரன், கிளை செயலாளர் காமராஜ், கிளை பொருளாளர் சுந்தரம் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நகை, பணம் திருடுப்பட்டுள்ளது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் கமலம் நகர் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் பூலாங்குறிச்சியில் அரசு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவர் பணிக்கு சென்றவுடன் இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு குழந்தையின் பள்ளி விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 14 கிராம் மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் ரூ.2000 ரொக்கம் திருடப்பட்டுள்ளதையறிந்து காவல்துறையினர்க்கு தகவல் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×