என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய ஒன்றிய குழு தலைவரின் கணவரை கைது செய்ய கோரி முற்றுகை போராட்டம்
அறந்தாங்கி:
அறந்தாங்கி பாஜக தெற்கு ஒன்றிய தலைவராக சக்திவேல் உள்ளார். ஒப்பந்ததாரரான இவர் ஒப்பந்த பணிகள் தொடர்பாக அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒன்றியக்குழுத் தலைவரின் கணவர் சண்முகநாதனுக்கும், சக்திவேலுக்கும் ஒப்பந்த பணிகள் தொடர்பாக வாக்குவாதம் மூண்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஒன்றியக்குழு தலைவரின் கணவர் சண்முகநாதன், சக்திவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சக்திவேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஒன்றியக்குழு தலைவரின் கணவரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்ட த்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கி டையில் சம்மந்தப்பட்ட சக்திவேல், சண்முகநாதன் ஆகிய இருவர் மீதும் காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






