என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
புதுக்கோட்டை:
தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய சலுகைகள் அறிவிக்கப்பட வில்லையெனக்கூறி தமிழகம் முழுவதும் அந்தந்த அரசு பேருந்து பணிமனை முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிஐடியு மத்திய சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
அப்போது 2022ம் ஆண்டு மே மாதம் முதல் ஓய்வு பெற்றோருக்கான பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான நிலுவை தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் கொரொனா காலத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்பாட்டத்தில் கிளை பொறுப்பாளர் சுப்பிரமணியன், கிளைத் தலைவர் மகேந்திரன், கிளை செயலாளர் காமராஜ், கிளை பொருளாளர் சுந்தரம் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






