என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாட்டு நல பணி முகாம்
- அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலதிட்ட பணி முகாம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது
- தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்
கந்தர்வகோட்டை,
தொந்தரவு கோட்டை அருகே அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நடப்பனி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த புதுப்பட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் நாட்டு நல பணி திட்ட முகாம் மட்டங்கால் கிராமத்தில் நடைபெற்றது. மட்டங்கால் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில், கருப்பு கோவில், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப்படுத்தி வர்ணம் அடித்து அழகுப்படுத்தினர்.. மேலும் கிராம மக்களிடம் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் முத்தையன் கலந்து கொண்டு பேரிடர் விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அசோக் ராஜன், முகாம் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் சையது ஆலம், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






