search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
    X

    பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

    • பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், நடைபெற்ற 'மாபெரும் தமிழ்க் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

    பின்னர்மாவட்ட கலெக்டர் பேசியதாவது,

    தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாகக் கடத்துவதற்கு, 'மாபெரும் தமிழ்க் கனவு" என்னும் இந்தப் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்த வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால் விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும்.

    நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர்மரபும் நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெ டுப்புகள், கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள் மற்றும் அதனைச் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு 'மாபெரும் தமிழ்க் கனவு" சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் இந்த நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறுவது நமக்கு பெரிய மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் கருத்தூன்றிப் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் உரையாற்ற உள்ள இரு சிறந்த ஆளுமைகளின் உரைகளைக் கேட்டு நீங்கள் பயனடைவதுடன், சக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கிக் கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் பல காட்சி அரங்குகளும், புத்தகக் காட்சி அரங்கும் அமைக்க ப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்கவிதா ராமு பேசினார்.

    Next Story
    ×