என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகன திருடர்கள் கைது
- தொடர் இரு சக்கர வாகனத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்
- 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
பொன்னமராவதி,
பொன்னமராவதி மற்றும் சுற்றுக்கிராமங்களில் இரு சக்கர வாகனங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து திருடப்பட்டு வந்தத நிலையில் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெள்ளையாண்டிபட்டி விளக்கு சாலை அருகே போலீசார் வாகனச்சோதனையின் போது சந்தேகத்திற்குரிய இரு நபர்களை விசாரித்தபோது அவர்கள் தொடர் வாகனத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. ஒருவர் பட்டுக்கோட்டையை சார்ந்த காளிதாஸ்( என்ற விஜய் 28) என்பதும், மற்றொருவர் திருச்சி மாவட்டம் பொருவாய் பாலக்குறிச்சி வடக்கு சொக்கநாதபட்டியை சார்ந்த முத்துப்பாண்டி(19) என்பதும் தெரியவந்தது. காளிதாஸ் என்ற விஜய் பொன்னமராவதி அம்மாநகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தொடர்ந்து பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமையில், காவல் ஆய்வாளர் தனபாலன், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் முன்பும் ,நாட்டுக்கல் , பொன்னமராவதி சந்தைவீதி, தொட்டியம்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட இடங்களில் நான்கு இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்ததது. மேலும் நடத்திய விசாரணையில் பொன்னமராவதி சுற்றுக்ராமங்களில் மேலும் 6 இரு சக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து விஜய் என்ற காளிதாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 இரு சக்கர வாகனங்களை போலீசார் கைபற்றி , குற்றவாளிகள் காளிதாஸ் என்ற விஜய் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்து திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது






