என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்
- குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது
- கலெக்டர் தலைமையில் நடந்தது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் தலைமையில், மாவட்ட நிலை அலுவலர்களுடன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்திடவும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, பாதுகாப்பு முறைகள் மற்றும் கல்வி குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கிடவும், குழந்தைகள் அனைவரும் உரிய கல்வியினை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் அறிவுறுத்தினார்.
குழந்தை இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் வகையில் மருத்துவத்துறையின் மூலமாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளவும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிகள் திட்டத்தின் சார்பில் செயல்படு த்தப்படும் செல்ல ப்பிள்ளை திட்டம் மூலமாக கருவுற்ற தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிடவும், கர்ப்பக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் குறித்தும், உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும், அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் குழந்தைகளிடையே போதைப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடத்தி தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும் எதிர்கால செல்வங்களாகிய குழந்தைகளை ஆரோக்கி யமான முறையில் வளர்த்து நாட்டிற்கும், வீட்டிற்கும் நற்பெயரை ஈட்டித் தரும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா ரமேஷ் கிருஷ்ணன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) ராமு, வருவாய் கோட்டாட்சியர்கள் சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி), குழந்தைசாமி (இலுப்பூர்), துணை இயக்குநர்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), கலைவாணி (அறந்தாங்கி), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






