என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
- மீண்டும் பாதிப்பு தலைதூக்கி உள்ளது
பெரம்பலூர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது 2 மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்க தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும் வீட்டு தனிமையிலும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
- பெரம்பலூரில் 8-வது புத்தக திருவிழா கோலாகலமாக தொடங்கியது
- 3ம் தேதி வரை நடைபெறுகிறது
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 8 வது புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது.பெரம்பலூர் நகராட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள புத்தகத்திருவிழா தொடக்க விழாவிற்கு கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார். திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, எஸ்பி ஷ்யாம்ளாதேவி, எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் "கற்கை நன்றே" என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அயலி என்ற இணைய தொடரில் நடித்துள்ள அபி நட்சத்திராவிற்கு பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் சார்பாக "பெண்மையை போற்றுவோம்" சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இதில் 100 அரங்குகளில் 100க்கு மேற்பட்ட தலைப்பு களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட புத்தங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 14 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறைச்சாலை கைதிகளுக்கு பயன்படும் வகையில் புத்தகம் வழங்க விரும்பும் நபர்கள் புத்தகங்களை வாங்கி பரிசளிக்க ஏதுவாக சிறைத்து றையின் சார்பில் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கியுள்ளன.விழாவில் நகராட்சி தலைவர் அம்பிகா, யூனியன் சேர்மன்கன் மீனாம்பாள், பிரபா, ராமலிங்கம், மக்கள் பண்பாட்டு மன்ற தலைவர் சரவணன், செயலாளர் அரவிந்தன், நகராட்சி ஆணையர் (பொ) ராதா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரநிதிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டிஆர்ஓ அங்கையற்கண்ணி வரவேற்றார். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லலிதா நன்றி கூறினார்.இரண்டாம் நாளான இன்று (26ம்தேதி) பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா "புத்தகம் என்ன செய்யும்?" என்ற தலைப்பிலும், பாவலர் அறிவுமதி "போர் என்ன செய்யும்" என்ற தலைப்பிலும், கவிஞர் ஆண்டன்பெனி "இன்னொரு தாய்வீடு" என்ற தலைப்பிலும் கருத்துறை யாற்றவுள்ளனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெறகிறது. இந்த புத்தகத்திருவிழா வரும் 3ம்தேதி வரை நடைபெறுகிறது.
- சொத்து தகராறில் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார்
- தலைமறைவான மகனுக்கு, போலீசார் வலைவீச்சு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 45). சினிமா தியேட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்த இவருக்கு மலர்கொடி என்ற மனைவியும், வெங்கடேஷ்(வயது 24) என்ற மகனும் உள்ளனர். ராமகிருஷ்ணன் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால், மனைவி மலர்கொடியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 6 மாதமாக அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக மகன் வெங்கடேசிடமும் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சொத்தை தனது பெயருக்கு மாற்றி தர அவர் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் வெங்கடேஷ் கடந்த 2 மாதத்திற்கு முன்பாக ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர பூலான்குடியில் தனிகுடித்தனம் இருந்து வந்துள்ளார். இருப்பினும் அவ்வப்போது தந்தை பார்ப்பதற்கு அவர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். வழக்கம் போல நேற்றிரவு அவர் வீட்டிற்கு வந்த போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே சொத்து குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் குடிபோதையில் இருந்த ராமகிருஷ்ணன் தனது மகனை தகாத வார்த்தையால் திட்டி உள்ளதாக தெரிகிறது. இதனால் தந்தை, மகனிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டிருந்துள்ளனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மகன் வெங்கடேஷ் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தையை தாக்கி உள்ளார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி வெங்கடேஷை அனுப்பி வைத்துள்ளனர். காயம் அடைந்த வெங்கடேஷ் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து உள்ளார். ஆனால் மகனின் தாக்குதலுக்கு உள்ளான ராமகிருஷ்ணன், குடிபோதையில் இருந்ததால், மருத்துவமனைக்கு செல்லாமல், அப்படியே வீட்டில் படுத்து தூங்கி உள்ளார். ஆனால் விடிந்து வெகு நேரமாகியும் எழுந்திருக்காததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்து உள்ளனர். அப்போது அவர் இறந்து போனது தெரிய வந்தது. இது குறிதது பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான ராமகிருஷ்ணனின் மகன் வெங்கடேஷ், மனைவி மலர்கொடி ஆகியோரை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்து றையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் "கிராம காவல்" என்ற புதிய திட்டத்தை எஸ்பி ஷ்யாம்ளாதேவி தொடங்கி வைத்து அவர் பேசுகையில்:-பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் "கிராம காவல்" திட்டம் ஏற்படு த்தப்பட்டு தொடங்க ப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தாய்க்கிராமம் அதன் சேய்கிராமம் என மொத்தம் 146 கிராமங்களுக்கும் தலா ஒரு போலீசாரை நியமித்து அந்த போலீசார் வாரம் ஒருமுறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று அந்தந்த கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களது கோரிக்கைகளை எனது (எஸ்பி ) பார்வைக்கு கொண்டு செல்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் சந்தேகப்ப டும்படியான நபர்கள் யாரேனும் சுற்றித்திறிந்தால் உடனடியாக காவல்து றையினருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டு குற்றங்கள் தடுக்கவும், குற்ற ச்செயல்களில் ஈடுபடு வோரின் தகவல்களை சேகரிப்பதன் மூலம் நடந்த குற்றங்களை கண்டறியவும், குற்றம் நடக்காமல் தடுக்கவும் ஏதுவாக இருக்கும்.ஒவ்வொரு கிரா மத்திற்கும் காவல்துறையினர் கிராம பொதுமக்கள் என அனைவரும் இணைத்து ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு தகவல்கள் அனைத்தும் அதில் சேகரிக்கபட்டு குற்ற செயல்களை தடுப்பது இதன் மற்றுமொரு நோக்கமாகும். மேலும் இத்திட்டதின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், மருவத்தூர், அரும்பாவூர், குன்னம், மங்களமேடு, வ.களத்தூர், கை.களத்தூர் ஆகிய 8 போலீஸ் ஸ்டேசன்கள் எல்லை க்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 146 வாட்ஸ்அப் குழுக்கள் தொடங்க ப்பட்டு தகவல்கள் பரிமா ற்றப்படும்.இந்த ஒவ்வொரு வாட்ஸ்அப் குழுவிலும் அந்தந்த கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட போலீசார், போலீஸ் ஸ்டேசன் அதிகாரிகள் கிராமத்தில் முக்கிய நபர்கள் மற்றும் தன்னா ர்வலர்கள் மாணவர்கள், பொது மக்கள் என அனைவரும் இடம்பெறுவர்.இத்திட்டம் குற்ற சம்பவங்களை குறைக்கும் நோக்கத்தோடும், பொது மக்களையும் காவல்துறை யினரையும் இணைக்கும் பாலம் போல் இத்திட்டம் செயல்படும். மேலும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான இடைவெளி குறைக்கப்பட்டு ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாகும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் மதியழகன் (தலைமையிடம்), பாண்டியன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெ க்டர்கள் கலந்து கொண்டனர்.
- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு விஏஒ அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 15 பெண்கள் உட்பட 65 பேர் கலந்துகொண்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
- நுாற்றுக்கணக்கானோர் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.பெரம்பலூர் வெங்கடேசபுரம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன் தலைமை நடைபெற்றது.இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தம், செயலாளர் மரியதாஸ், ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கி கூறி நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். பின்னர் மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறு திகளை நிறைவேற்ற வேண்டும் அரசுத்து றைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியி டங்களை உடனே நிரப்பிட வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு வரைய றுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தரவேண்டிய 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும், அகவிலைப்படி உயர்வை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு அறிவித்த உடனேயே வழங்கிடவேண்டும்தனியார்மயத்தினை ஊக்குவிக்கும் இளைஞ ர்களின் வேலைவாய்ப்பை பறித்திடும் அரசாணைகளை ரத்து செய்யவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் 125 பெண்கள் உட்பட 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மழையினால் பெரும் நஷ்டம் என்று விவசாயிகள் வேதனை
- நுாற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் சாய்ந்து நீரில் மூழ்கின
அகரம்சீகூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட அகரம்சீகூர் பகுதிகளில் கோடை காலத்தில் வழக்கமான அளவைவிட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதன் காரணமாக அகரம்சீகூர் பகுதிகளில் விவசாய பொதுமக்கள் பொதுவாக நெல் சாகுபடியையே அதிகம் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 120 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கின. மேலும் நெற்பயிர்கள் நன்கு முதிர்ச்சி அடை ந்துள்ளதால் தேங்கி நிற்கும் மழை நீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மேலும் இப்பகுதியில் அறுவடை செய்தவர்களும் வைகோலை தங்களின் வயல்வெளியில் குவியலாக வைத்திருந்தனர். அதுவும் தற்போது வீணாகிவிட்டது. தொடர் மழையின் காரணமாக அகரம்சீகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் நெல் மூட்டைகளை வயல் பகுதியிலேயே வைத்து மூடி பாதுகாத்து வருகிறோம்.இந்நிலையில் நேற்று வானம் மேகமூட்டத்துடனே காணப்படுவதால் அறுவடை பணியை மேற்கொள்ளாமல் உள்ளோம். இதே நிலை நீடித்தால் நெற்பயிர்கள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்படும்.நாங்கள் கடன் வாங்கி பயிரிட ப்பட்டுள்ளோம் தற்போது பெய்த கனமழை எங்களுக்கு பெரும் அளவில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாய பொதுமக்கள் கூறினார்கள்.
- விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
- விவசாயிகள் மனு மீது உடனடி நடவடிக்க எடுக்க உத்தரவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துக்கூறி நிறைவேற்ற வலியுறுத்தினர். பின்னர் கலெக்டர் கற்பகம் பேசுகையில், தோட்டக்கலை துறையின் மூலமாக தமிழ்நாடு நீர் பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தில் பாரம்பரியத்திலிருந்து தோட்டக்கலை பயிர்களுக்கு பல்வகைப்படுத்தும் இனத்தில் மிளகாய், கத்தரி, முருங்கை மற்றும் சொட்டு நீர் பாசனம் ஆகிய இனங்களில் பொருள் இலக்காக 13 எக்டர் பொருள் மற்றும் நிதி இலக்காக ரூ.4.20 லட்சமும் பெறப்பட்டு பொருள் இலக்கில் 13 எக்டர் பொருள் மற்றும் நிதி இலக்கில் ரூ.4.20 லட்சமும் சாதனை எய்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 290 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையினை, அடுத்து விவசாயிகள் கூட்டம் துவங்குவதற்கு ஒரு வார காலம் முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும் இனிவரும் காலங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட துறையின் முதல் நிலை அலுவலர்கள் மட்டுமே வர வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில் டிஆர்ஓ அங்கையற்கண்ணி, வேளாண்மை இணை இயக்குநர் சங்கர நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி
பெரம்பலூர்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான அலுவலர்கள், சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துகுமார் தலைமையில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடன் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவிகளின் பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் செய்யப்பட்ட அலுவலர்களின் பாதிப்புகளை தவிர்த்து பதவி உயர்வினை உறுதி செய்து உரிய ஆணைகளை வெளியிட வேண்டும்.
அரசு மட்டத்தில் 2 கடிதங்கள் வழங்கப்பட்ட நிலையில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வருவாய் நிர்வாக ஆணையர் உடன் கடிதம் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தாமதம் செய்யப்படும் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பெயர் மாற்றம் மற்றும் விதித்திருந்த அரசாணையை உடன் வழங்கிட வேண்டும். கடந்த ஆகஸ்டு மாதம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய காலக்கெடுவிற்குள் ஆணைகள் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்க வேலை அளிப்பவர், தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் விவரம் வருமாறு:- பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் வேலை அளிப்பவர்கள் மற்றும் ெதாழிலாளர்கள் இடையே தொழில் அமைதியையும் நல்ல தொழில் உறவையும் பேணிப்பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு ெதாழில் நல்லுறவு பரிசுத்திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
நல்ல தொழில் உறவை பேணிப் பாதுகாக்கும் வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் http/www.labour.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
- வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது
- சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகரில் பாரதி நகர் 2-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பானுமதி (வயது 55). கணவர் இறந்துவிட்டார். மகன் கரூரில் பணிபுரிந்து வருகிறார். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 16-ம் தேதி சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்ற பானுமதி நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த ேபாது பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.
- வளாக நேர்காணலில் 370 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது
- தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில்
பெரம்பலூர்:
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஆசியுடன் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் வருடந்தோறும் சிறந்த பன்னாட்டு நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு 100 சதவீத வேலைவாய்ப்பு மாணவ, மாணவியர்களுக்கு பெற்றுதருவதை முதல் கடமையாக கொண்டு இயங்கிவருகிறது.
இந்த கல்வி ஆண்டிலும் இக்கல்லூரி மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக அண்மையில் நடத்திய வளாக நேர்காணல்களில் 22 நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டன.
இறுதியாண்டு பயிலும் 370 மாணவ மாணவியர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் பணிநியமன ஆணைகளை வழங்கியதோடு, அனைவரும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் சிறந்து வேலை செய்பவர்களாக திகழ்ந்து விரைவில் தொழில்முனைவோராக மாறி மற்றவர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்று வாழ்த்தினார்.
வரவிருக்கும் நாட்களில் இன்னும் 15 - க்கும் மேற்பட்ட கம்பெனிகள் வளாக நேர்காணலில் பங்குபெற இருப்பதால், இதில் மற்ற கல்லூரி மாணவர்களும் பங்கேற்று பயன்பெறலாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் உடனிருந்தனர்






