என் மலர்
பெரம்பலூர்
- இன்னொரு மாணவ நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை
- பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், திருச்சி உறையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை பெரம்பலூர் கிளையில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (வயது 18) என்ற மகனும், அபர்ணா என்ற மகளும் உள்ளனர். முகேஷ் செட்டிகுளம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து அரசு பொதுத் தேர்வு எழுதியுள்ளார்.இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் நித்திஷ் (13) பாடாலூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். முகேஷ், நித்திஷை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பெரம்பலூர் நோக்கி சென்றுள்ளார். அவர்கள் பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி சென்ற போது, முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்றனர். அப்போது முகேசின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அரசு பஸ்சின் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த முகேஷ், நித்திஷ் ஆகிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நித்திசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்ட நவீன குற்றப்புலனாய்வு துறை அதிரடி
- ரேசன் அரிசிகள் கடத்தப்படுவது தடுக்கும் பொருட்ட்டு சோதனை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, பின்னர் நவீன அரிசி ஆலைகள் மூலம் ரேசன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும், நவீன அரிசி ஆலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கும் பொருட்டு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி. சுதர்சன் தலைமையிலான போலீசார், புதுக்குறிச்சி, தேனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் அரிசியின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் ரேசன் அரிசி பாலிசி செய்து வேறு எங்கும் கடத்தப்படுகிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்றது
- நகராட்சி ஆணையர் கலந்து கொண்டார்
பெரம்பலூர்,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான தையல் கலை பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இதில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராதா கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறும்போது, அரசாங்க பணிக்கான வாய்ப்பு தற்போதைய கால கட்டத்தில் மிக குறைவு. எனவே மாற்று வழியாக இருக்க கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி பெறுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிப்பட்ட திறமை ஒன்று இருக்கும். அதை கண்டறிந்து, முறையான பயிற்சி பெற்று, நம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்,அடிபடை தேவைகளை பூர்த்தி செய்யவும் இப்பயிற்சி மையத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் உதவி பொதுமேலாளர் அவினாஷ், முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு
- மாத்திரை, மருந்து, ஊசிகள் பறிமுதல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் வி.கைகாட்டி பகுதியில் பெரம்பலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோகன் மருந்து கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது வி.கைகாட்டி, ஆதித்யா கிராமம் குடியிருப்புக்கு எதிரே உள்ள அம்மன் மருந்து கடையில் போலீசார் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அந்த கடையை நடத்தி வந்த வெற்றியூர் அண்ணா நகர் காலனி தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி கலைச்செல்வி (வயது 34) என்பவர், உரிய அங்கீகாரம் இல்லாமலும், மருத்துவ படிப்பு படிக்காமலும், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்து, மாத்திரை மற்றும் ஊசி ஆகியவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து, கலைச்செல்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இதேபோல தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாஜி (47) என்பவர் சிவப்பிரியா என்ற பெயரில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். அங்கு ஆய்வு நடந்த போது அவர், பொதுமக்களுக்கு ஊசி போட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கி வருவதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்த மருந்து, மாத்திரை, ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ராஜாஜி மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து உள்ளனர்.
- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் நடைபெற்றது
- ஒன்றிய செயலாளர் கர்ணன் படிவத்தை கொடுத்து தொடங்கி வைத்தார்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக தீவிர உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் கொளக்காநத்தத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்வில் ஒன்றிய அவைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஆலத்தூர் சேர்மன் வெண்ணிலா, மாவட்ட பாசறை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய துணை சேர்மன் சுசீலா, ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிமுத்து, ஒன்றிய இளைஞரணி நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் மோகன் கண்ணன், கெளக்காநத்தம் நிர்வாகிகள் துரைராஜ், கதிர்வேல், இளங்கோவன், வக்கீல் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- வழக்கு பதிய புகார் அளிக்கப்பட்டது
குன்னம்,
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நரிக்குறவ சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நரிக்குறவ சமுதாயத்தை பற்றி இழிவாக பேசியதாகவும், இதனால் நாங்கள் மனவேதனை அடைந்ததாகவும், சீமான் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நரிக்குறவர் குருவிக்காரர் நல பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பாடாலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டுமென ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் வழங்கினார்
- மொத்தம் ரூ.11 கோடி வழங்கப்பட உள்ளது
அரும்பாவூர்,
பூலாம்பாடி பேருராட்சி பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தருமாறு பன்னாட்டு தொழிலதிபரும் மண்ணின் மைந்தருமான டத்தோ எஸ்.பிரகதீஸ்குமாரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.அதன்படி பொதுமக்களின் சிரமங்களை கேட்டறிந்த அவர், பொதுமக்கள் பங்களிப்பு தொகையுடன் நமக்குநாமே திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்தார். அதற்கான முயற்சிகளை முழுவீச்சில் செய்த டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் அரசு அதிகாரிகளிடம் கூறி பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறியசொல்லி அதற்கான செலவினங்களையும் கேட்டறிந்தார்.
இதனை செய்து முடித்தால் பூலாம்பாடி பேரூராட்சி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறும் என்பதால், அடிப்படை வசதிகளை நமக்குநாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.33 கோடி மதிப்பீட்டில் செய்து தர முடிவு செய்யப்பட்டது. டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் சார்பில் ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த்கேர் பவுண்டேசன் சார்பில் ரூ.11 கோடி பங்களிப்பு தொகையாக தரப்படஉள்ளது. அதன் மூலம்
பூலாம்பாடி பேரூராட்சியில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய், உயர்மட்ட பாலம் அமைத்தல், குடிநீர் கிணறு அமைத்தல் பணிகள் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார் பங்களிப்பு தொகையாக அவரது ப்ளஸ்மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேசன் சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ந்தேதி முதற்கட்ட நிதியாக ரூ.90 லட்சத்திற்கான வரைவோலையையும், அக்டோபர் 28-ந்தேதி இரண்டாம் கட்டநிதியாக ரூ.74லட்சத்து 8 ஆயிரத்துக்கான வரைவோலையையும் வழங்கியிருந்தார்.இந்தநிலையில் நேற்று (10.04.2023) மூன்றாம் கட்டநிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் டத்தோ எஸ்.பிரகதீஸ்குமார், ரூ.26லட்சத்து 98 ஆயிரத்துக்கான வரைவோலையைபூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம் வழங்கினார். பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், கவுன்சிலர்கள் பூங்கொடி மணி, மாணிக்கம், ராமதாஸ், ராஜலட்சுமி செல்வக்குமார், கஸ்தூரி வீராசாமி, பரகத்நிஷா அப்துல்ரஹீம், சுதாகர், ஜெயந்தி பெருமாள், செல்வராணி ராமர் தொழிலதிபர்கள் மணிகவுண்டர்,இசைபாலு, மண்மணி, பூலாம்பாடி சதிஷ், மணி, செங்குட்டுவன் மற்றும் பூலாம்பாடி டத்தோ இளைஞர் நற்பணி மன்றத்தினர் கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்றது
- உறுப்பினர்களை அதிகளவு சேர்க்க தீர்மானம்
குன்னம், ஏப்.11-
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் கொளக்காநத்தத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கிளைக் கழகங்களுக்கும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கும் விழா, ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஆலத்தூர் சேர்மன் வெண்ணிலா, மாவட்ட பாசறை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய துணை சேர்மன் சுசீலா, ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிமுத்து, ஒன்றிய இளைஞரணி நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், கண்ணன், கெளக்கா நத்தம் நிர்வாகிகள் துரைராஜ், கதிர்வேல், இளங்கோவன், வக்கீல் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அதிகமாக புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, கிழக்கு ஒன்றியத்தில் தீவிரமாக கட்சியை வளர்ப்பது உள்பட பல்வேறு கருத்துக்களை ஒன்றிய செயலாளர் கர்ணன் கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
- பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது
- பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை உதவித்தொகை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடந்தது. முகாமினை மாவட்ட திறன்மிகு இந்தியா பயிற்சி மைய உதவி இயக்குநர் செல்வம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-பிரதம மந்திரி தொழிற் பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் மாதாந்திர உதவி தொகையுடன் கூடிய தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் மாதம் 2 நாட்களில் (திங்கட்கிழமைகளில்) நடைபெறுகிறது. இதில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெற்று பயிற்சியில் தேர்ச்சி அடைந்தவர்கள், 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், மகளிர் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சியை இலவசமாக பெற்று பயபெறலாம் என தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறையை சார்ந்த பல முன்னணி சர்க்கரை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலார்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநர்களை தேர்வு செய்தனர்.தொழில்பழகுநர் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டோருக்கு சேர்க்கை ஆணை தொழில் நிறுவனங்களால் வழங்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு, பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை உதவித்தொகை தொழில் நிறுவனத்தால் வழங்கப்படவுள்ளது.
- 18ம்தேதி நடைபெறும் என்று அறிவிப்பு
- மாவட்ட கலெக்டர் அழைப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 18 ம்தேதி அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து முதல்வரின் ஒப்பம் பெற்று கல்லூரி மூலமாக adtamildept@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9. மணிக்கு வருகை புரிந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும். ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று போட்டிக்கும் மூன்று மாணவர்கள் மட்டும் ஒரு கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் படி கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் முதல் பரிசுப் பெற்றவர்கள் மட்டும் மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநிலப் போட்டிகள் தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த வாய்ப்பினைக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாநில அணிகளுக்கு பரிசு
பெரம்பலூர்,
தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பு, மாநில பாரா வாலிபால் சங்கம், ஈரோடு மாவட்ட வாலிபால் சங்கம், உணர்வுகள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சேம்பியன்ஷிப்-2023 போட்டி பெரம்பலூரில் 2 நாட்கள் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டிக்கான தொடக்க விழாவில், ஆல்மைட்டி பள்ளி தாளாளர் ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தேசிய பாரா ஒலிம்பிக் வாலிபால் கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், மாநில தலைவர் மக்கள்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல் நாள் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கன்னி துவக்கி வைத்தார். இதில் ஜார்கண்ட், ராஜஸ்தான், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஹிரியானா, இமாச்சலபிரதேசம், தெலுங்கனா உட்பட 20 மாநிலங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.ஆண்கள் பாராவாலி போட்டியில் கர்நாடகா முதல் இடமும், ராஜஸ்தான் 2ம் இடமும், தமிழ்நாடு 3ம் இடமும், ஹரியானா 4ம் இடமும் பெற்றன. பெண்கள் பாரா வாலி போட்டியில் ராஜஸ்தான் முதலிடமும், ஜார்கண்ட 2-ம் இடமும், கர்நாடகா 3-ம் இடமும், ஹரியானா 4-ம் இடமும் பெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கேடயங்களும், பெரம்பலூர் ஐஓபி, அஸ்வின்ஸ் குழுமம், உதவியுடன் வழங்கப்பட்டது. பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தமிழ்நாடு பாரா வாலி சங்க துணைசெயலாளர்கள் ஜெயபிரபா, கண்ணன், மாநில நடுவர்குழு தலைவர் ஜாபர், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், பாராவாலி பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரஞ்சித்குமரன், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் சீனீவாசன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி துணைத்தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார், சங்கீதா கோபிநாத், பள்ளி முதல்வர் ஹேமா, ஆசிரியர்கள் சந்திரோதயம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நாய் குறுக்கே ஓடியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(வயது 65). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் காருகுடி மெயின் ரோட்டில் உள்ள தனது வயல்காட்டிற்கு சென்று விட்டு, பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால், சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி வடிவேல் கீழே விழுந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே அதே ஊரை சேர்ந்த துரைராஜின் மகன் சத்யா(26) ஓட்டி வந்த டிராக்டர், வடிவேல் மீது ஏறி இறங்கியது.இதில் வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த மங்களமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






