என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் சோதனை
- பெரம்பலூர் மாவட்ட நவீன குற்றப்புலனாய்வு துறை அதிரடி
- ரேசன் அரிசிகள் கடத்தப்படுவது தடுக்கும் பொருட்ட்டு சோதனை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, பின்னர் நவீன அரிசி ஆலைகள் மூலம் ரேசன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும், நவீன அரிசி ஆலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கும் பொருட்டு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி. சுதர்சன் தலைமையிலான போலீசார், புதுக்குறிச்சி, தேனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் அரிசியின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் ரேசன் அரிசி பாலிசி செய்து வேறு எங்கும் கடத்தப்படுகிறதா என பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.






