என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களுக்கு தையல் கலை பயிற்சி
    X

    பெண்களுக்கு தையல் கலை பயிற்சி

    • ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்றது
    • நகராட்சி ஆணையர் கலந்து கொண்டார்

    பெரம்பலூர்,

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான தையல் கலை பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. இதில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராதா கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறும்போது, அரசாங்க பணிக்கான வாய்ப்பு தற்போதைய கால கட்டத்தில் மிக குறைவு. எனவே மாற்று வழியாக இருக்க கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி பெறுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிப்பட்ட திறமை ஒன்று இருக்கும். அதை கண்டறிந்து, முறையான பயிற்சி பெற்று, நம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும்,அடிபடை தேவைகளை பூர்த்தி செய்யவும் இப்பயிற்சி மையத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் உதவி பொதுமேலாளர் அவினாஷ், முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×