என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் பனை விதைகள் மற்றும் கன்றுகள் விநியோகம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்
- மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல்
பெரம்பலூர்,
தமிழகத்தில் மாநில மரமான பனைமரம் தமிழர்களின் வாழ்வோடும், வரலாறோடும் இணைந்த மரமாக இருக்கிறது. பனைமரம் நிலத்தடி நீரை அதிகரித்தல், மண் அரிப்பை தடுத்தல் என மண்ணிற்கு உகந்த மரமாக திகழ்வதுடன் அடிமுதல் நுனிவரை பயனளித்து பலருக்கும் வாழ்வா தாரமாக விளங்கு கிறது. பெரம்பலூர் மாவட்ட த்தில் பனை சாகு படியை ஊக்குவி ப்பதற்கா கவும், பனை சாகுபடி செய்துவரும் விவசா யிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்து வதற்காகவும் நடப்பு நிதியாண்டில் பெர ம்பலூர் மாவட்ட தோட்ட க்கலை துறைக்கு இலக்காக 30,000 பனை விதைகள் மற்றும் 125 பனை கன்றுகள் மானி யத்தில் விநியோகம் செய்ய ரூ.1,02,500- நிதி ஒதுக்கீடு பெறப்ப ட்டுள்ளது.
இத்திட்ட த்தின்கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் மற்றும் 10 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்க ப்பட உள்ளன. பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் ,ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகள், 30 கன்றுகள் 100% மானியத்தில் வழங்க ப்படும். இத்திட்டத்தில் பய னடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவ லகத்தை அணுகியோ அல்லது https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணை யதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.
- அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.
- மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
பெரம்பலூர்,
மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கி விடும். இதன் விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவைைய கருதி ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக துவரம் பருப்பு விலை கடந்த வாரத்தில் கிலோ ரூ.120 அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பை பொறுத்தவரையில் மராட்டியத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது.
இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் மிளகாய் தூள், சீரகம், சோம்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. போக்குவரத்து, வண்டி -ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
அரியலூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கூறும் போது:- விலை உயர்வால் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறி விளையும் உயர்ந்துள்ள நிலையில், முக்கிய உணவுப் பொருளான அரிசி விலையும் உயர்திருப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் வழக்கமாக வாங்கும் ெபாருட்களின் அளவைவிட குறைவாக வாங்கி செல்கின்றனர். இந்த திடீர் விலை உயர்வை கட்டுப்படுத்தி அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலைகளை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
- குரும்பலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கண் புரை நோய் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சூர்யா தெரிவித்துள்ளார்.
- பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
பெரம்பலூர் :
பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பெரம்பலூரை அடுத்த பேரளியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, கே.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- ராணுவத்திற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 4-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
- இன்றுடன் (புதன்கிழமை) இந்த பணிகள் நிறைவடைகிறது.
பெரம்பலூர்:
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ஏற்கனவே கணினி வாயிலாக எழுத்து தேர்வு நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. இன்றுடன் (புதன்கிழமை) இந்த பணிகள் நிறைவடைகிறது.
- குன்னம் அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஜமீன் பேரையூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் பிரபு (வயது 29). இவர்கள் இருவரும் சிங்கபூரில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் பிரபுவிற்கு திருமணம் செய்வதற்காக பெரியசாமி மற்றும் பிரபு ஆகிய இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இந்நிலையில் பிரபு அப்பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் மது அருந்திவிட்டு கூத்தூர்-அரியலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் தொண்டபாடி பிரிவு பாதை அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக மைல் கல் மீது மோதினார். இதில் இரத்த காயம் ஏற்பட்ட பிரபுவை அங்கிருந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து பெரியசாமி குன்னம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் போரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குன்னம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு போனது
- மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் ஆனந்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த கோவிலில் வழக்கம் போல் பூஜை நடத்துவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பூசாரி தர்மலிங்கம் என்பவர் கோவிலை திறந்துள்ளார். அப்போது கோவிலில் உள்ள தகர டப்பாவினால் ஆன உண்டியல் உடைக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.மேலும் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றறை பவுன் நகைகளை காணவில்லை.
உண்டியலில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றறை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பூசாரி தர்மலிங்கம் குன்னம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம ஆசாமிகள் கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிசென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெரம்பலூரில் ரோவர் கல்வி குழும தலைவர் டாக்டர் வரதராஜனின் 80 வது பிறந்தநாள் விழா
- வைகோ எம்.பி. சிறப்பு மலரை வெளியிட்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் ரோவர் கல்வி குழும தலைவர் டாக்டர் வரதராஜனின் 80 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.ரோவர் கல்வி நிறுவன வளாக கூட்டரங்கில் நடந்த விழாவிற்கு ரோவர் கல்வி குழும துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன் தலைமை வகித்தார். தூய யோவான் சங்க அறக்கட்டளை இயக்குநர் மகாலெட்சூமி, இயக்குநர்கள் பவானி, ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக பொதுசெயலாளர் வைகோ ரோவர் வரதராஜனின் 80-வது பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார். அமைச்சர்கள் நேரு, சிவசங்கர், எம்பி பாரிவேந்தர், எம்எல்ஏக்கள் பிரபாகரன், சின்னப்பா, கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்தின், தனலட்சூமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசூப்ரமணியம், கிறிஸ்டியன் கல்வி நிறுவன தலைவர் கிறிஸ்டோபர், செயலாளர் மித்ரா உட்பட பலர் பேசினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் அட்சயகோபால், காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் ராஜேந்திரன், மாநில செயலாளர் வக்கீல் தமிழ்செல்வன், அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், திமுக பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் பரமேஷ்குமார், வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாநில பொருளாளர் செந்திலதிபன், மாநில துணை பொதுசெயலாளர் ரொக்கையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரோவர் கல்விநிறுவன அலுவலக மேலாளர்கள் ஆனந்தன், சேகர், ஜெயசீலன், ஒருங்கிணைப்பாளர் சக்தீஷ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் சாய்ந்து வரும் மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
- உயிர் பலி ஏற்படும் முன் சீர்செய்ய வலியுறுத்தல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா புதுக்குறிச்சி துணை மின் நிலைய எல்லைக்குப்பட்ட நாரணமங்கலம்-புதுக்குறிச்சி செல்லும் ஏரி பாதையில், கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம். கீழே விழுந்து உயிர்பலி ஏற்படும் முன்பாக அதனை சரி செய்யவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மின்சாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிணற்றில் முதியவர் பிணமாக மிதந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது கிணற்றில் முதியவர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் மிதந்த முதியவரின் உடலை மீட்டு, விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் வெங்கலம் கிராமத்தை சேர்ந்த கணபதி (வயது 80) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கணபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாலை முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டே நிறைவேற்றிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட இணை பொருளாளர் மீனா நன்றி கூறினார்.
- வெடி பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- பாடாலூர் போலீசில் ஒப்படைத்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்படி, பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில், வனத்துறையினர் சம்பவத்தன்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போத பெரம்பலூர்-துறையூர் சாலையில் மட்டப்பாறை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருச்சி மாவட்டம், துறையூர் சிலோன் காலனி, திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 50), துறையூர் அம்பலக்காரர் தெருவை சேர்ந்த ஜெயராமன் (63) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கைப்பையை வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் நாட்டு துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்களான 100 கிராம் எடையுள்ள பால்ரஸ் குண்டுகள் மற்றும் 50 கிராம் எடையுள்ள கரி மருந்து ஆகியவை டப்பாக்களில் வைத்திருந்தது.
இதையடுத்து அவர்களை வனத்துறையினர் பாடாலூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வனவர் பிரதீப்குமார் கொடுத்த புகாரின்பேரில், பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து கணேசன், ஜெயராமன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






