பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் பனை விதைகள் மற்றும் கன்றுகள் விநியோகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் பனை விதைகள் மற்றும் கன்றுகள் விநியோகம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் பனை விதைகள் மற்றும் கன்றுகள் விநியோகம்
Published on

பெரம்பலூர்,

தமிழகத்தில் மாநில மரமான பனைமரம் தமிழர்களின் வாழ்வோடும், வரலாறோடும் இணைந்த மரமாக இருக்கிறது. பனைமரம் நிலத்தடி நீரை அதிகரித்தல், மண் அரிப்பை தடுத்தல் என மண்ணிற்கு உகந்த மரமாக திகழ்வதுடன் அடிமுதல் நுனிவரை பயனளித்து பலருக்கும் வாழ்வா தாரமாக விளங்கு கிறது. பெரம்பலூர் மாவட்ட த்தில் பனை சாகு படியை ஊக்குவி ப்பதற்கா கவும், பனை சாகுபடி செய்துவரும் விவசா யிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்து வதற்காகவும் நடப்பு நிதியாண்டில் பெர ம்பலூர் மாவட்ட தோட்ட க்கலை துறைக்கு இலக்காக 30,000 பனை விதைகள் மற்றும் 125 பனை கன்றுகள் மானி யத்தில் விநியோகம் செய்ய ரூ.1,02,500- நிதி ஒதுக்கீடு பெறப்ப ட்டுள்ளது.

இத்திட்ட த்தின்கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் மற்றும் 10 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்க ப்பட உள்ளன. பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் ,ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகள், 30 கன்றுகள் 100% மானியத்தில் வழங்க ப்படும். இத்திட்டத்தில் பய னடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவ லகத்தை அணுகியோ அல்லது https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணை யதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com