என் மலர்
பெரம்பலூர்
- பெட்ரோல் பங்க் ஊழியரிடம் செல்போன் திருட்டு
- அவர்கள் 2 பேரையும் மங்களமேடு போலீசார் கைது செய்தனர்
அகரம்சீகூர்
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகேயுள்ள வல்லாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33), இவர் கடந்த இரண்டு வருடங்களாக பெட்ரோல் பங்க் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தார். அப்போது 2 மர்ம ஆசாமிகள் ராஜ்குமாரின் செல்போனை திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை குறித்து மங்களமேடு போலீசில் ராஜ்குமார் தெரிவித்தார். விசாரணையில் அவர்கள் அன்னமங்கலம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (23), செஞ்சேரியை சேர்ந்த வெற்றிவேல் (23) என்பதும், இவர்கள் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மங்களமேடு போலீசார் கைது செய்தனர்.
- வேப்பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- விபத்தில்லா தமிழ்நாடு எங்கள் பொறுப்பு" என்ற சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி
அகரம்சீகூர்
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வேப்பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு மற்றும் விழுப்புரம் சாலை பாதுகாப்பு அலகு சார்பில் "விபத்தில்லா தமிழ்நாடு எங்கள் பொறுப்பு" என்ற சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் கோட்ட பொறியாளர் கலைவாணி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மணி மேகலை வரவேற்புரை ஆற்றினார்.
விழுப்புரம் கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், குன்னம் உட்கோட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் தமிழ் அமுதன் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றினர்கள். தோழன் அமைப்பு ஜெகதீஸ்வரன், நந்தகுமார் கோவிந்தன் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழிமுறை களை எடுத்து கூறினார்கள்.
மேலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதல் உதவி செய்வது குறித்து நேரடியாக மாணவிகளுக்கு செயல் முறை விளக்கம் காட்டி னார்கள். மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமு றைகள் குறித்த துண்டு பிரசு ரங்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த வினாடி வினா, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சா ன்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள்,
கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இயற்பியல் பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.
- பூலாம்பாடியில்உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு அலுவலகத்தைதொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் திறந்துவைத்தார்
- வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
அரும்பாவூர்
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் தலைவாசலில் இருப்பது போன்று மிகப்பெரியஅளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் என்பதால் டத்தோபிரகதீஸ்குமார் இந்த முயற்சியை சேவைநோக்குடன்
முன்னெடுத்துவருகிறார். இதுதொடர்பாக இரண்டு ஆலோசனை கூட்டங்களும் நடந்து முடிந்துள்ளது.இந்த நிலையில் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு அலுவலகத்தின் திறப்பு வி ழாநடைபெற்றது.அதில் டத்தோ பிரகதீஸ்குமார் கலந்து கொண்டுஅலுவலகத்தை திறந்துவைத்தார்.பின்னர் அவர் பேசும் போது,அனைவரின் கூட்டு முயற்சியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில் மலேசியா மணிவாசகம், டத்தோ நேர்முக உதவியாளர் மணி,பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி செங்கு ட்டுவன்,கவுன்சிலர்கள் ராமதாஸ்,மாணிக்கம் மற்றும் கடம்பூர் பாலு, அருண்,ஆறுமுகம்,அக்ரி நவநீதன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் தி.மு.க. மகளிர் அணியினர், எடப்பாடி பழனிச்சரி மீது புகார் மனு அளித்துள்ளனர்
- முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து பாடல் பாடியது குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.யிடம் மனு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான மகாதேவி தலைமையில், மகளிர் அணியினர் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், கடந்த 20-ந்தேதி மதுரையில் நடந்த அ.தி.மு.க.வின் பொன்விழா மாநாட்டில் நவரசம் கலைக்குழு சார்பாக பாடல்களை பாடிய பன்னீர் என்பவர் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினையும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினையும், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.யையும், தி.மு.க. துணை பொது ச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யையும் தவறாக சித்தரித்து அவதூறான பாடல் ஒன்றை பாடினார். எனவே நவரசம் கலைக்குழு பாடகர் பன்னீர் மீதும், மதுரை அ.தி.மு.க. மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மீதும், இந்த சட்ட விரோத செயலுக்கு துணையாக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவினை பெற்று கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட முத்து நகர் பெரம்பலூர் கிழக்கு, மேற்கு ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளிகளில் தொடங்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளிக்கு விரிவுப்ப டுத்தப்பட்டது. இதனால் அந்த பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 180 மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் பயனடைந்து வருகின்றனர். தற்போது விரிவுப்ப டுத்தப்பட்ட முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மீதமுள்ள 263 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகளுக்கு நாளை முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கான சோதனை முயற்சி பெரம்பலூர் மாவட்டத்தில் விரிவுபடுத்தப்படவுள்ள பள்ளிகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது
- ஜப்பான் காக்னவி பிரைவேட் மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் மிட்சு டாக்கா செகினோவும், கல்லூரி முதல்வர் வெற்றிவேலன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் சீனிவாசன் கலைக்கல்லூரியும், ஜப்பான் காக்னவி பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு,தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் சீனிவாசன் முன்னிலையில் ஜப்பான் காக்னவி பிரைவேட் மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் மிட்சு டாக்கா செகினோவும், கல்லூரி முதல்வர் வெற்றிவேலன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.பின்னர் வேந்தர் சீனிவாசன் பேசுகையில், இக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாணவர்கள் யாரும் வேலை தேடி அலையக் கூடாது என்பதற்காகத்தான் இது போன்ற பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் வைத்துக் கொண்டு உங்களின் முன்னே ற்றத்திற்கு முதல் படியை ஏற்படுத்தித் தருகிறோம். அதை நீங்கள் சரியான வழியில் பயன்படுத்தி முன்னேறவேண்டும். இந்த நிறுவனத்துடன் கல்லூரி வைத்துக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமானது மாணவர்களுடைய அறிவுத்திறன்களை பரிசோதித்து அதை மேம்படுத்துவதில் முதன்மை பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.தொடர்ந்து ஜப்பான் காக்னவி பிரைவேட் மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் மிட்சு டாக்கா செகினோ பேசுகையில், மாணவர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது, மாணவர்களின் திறனை வளர்க்கும் பொருட்டு மொழி திறன் பயிற்சி அளித்தல், வேலை வாய்ப்பு வழங்குதல் பற்றி எடுத்துரைத்தார்.சிறப்பு விருந்தினர் பெங்கர் காக்னவி மனித வள மேம்பாட்டு வணிகம் மற்றும் மேலாண்மையின் நிறுவன தலைவர் வரு ண்மோட்கில் மேலாண்மை மூத்த மேலாளர் மஞ்சுநாத் ரோடகி , பிராங்களின் ஜெகதீசன் பொறியியல் கல்லூரி இளங்கோவன், திறன் மேம்பாட்டு அலுவலர் சசிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக சீனிவாசன் கலைக்கல்லூரி மனித வள மேம்பாட்டு அலுவலர் சந்திரசவுத்ரி வரவேற்றார். வணிக மேலாண்மையியல் துறை இயக்குநர் மகேஷ் நன்றி கூறினார்.
- பெரம்பலூரில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர் கற்பகம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட திருமாந்துறை ஊராட்சி டி.கீரனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம்,தலைமையில் நடைபெற்றது,அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில், உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளரச்சித் திட்டம், தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.பின்னர், அரசுத்துறைகளின் சார்பில் மக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களால் பயன்பெற எந்த அலுவலரை அணுக வேண்டும், எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என அனைத்து துறைகளின் அலுவலர்கள் திட்ட விளக்க உரை ஆற்றினார்கள்.
- கடலூர், சேலம் பகுதிகளில் பெண்களிடம் தாலி சங்கிலி பறிக்கும் பெரம்பலூரை சேர்ந்த 2 வாலிபர்கள் சிக்கினர்
- போலீசாரிடம் சிக்கிய வாலிபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மீட்பு
பெரம்பலூர்,
அரியலூர் மாவட்டம் அம்மாகுளம் பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு ஏரிக்கரையை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 22), பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த அஜீத் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 2 சங்கிலி பறிப்பு சம்பவங்களிலும், அரியலூர், சேலத்தில் தலா ஒரு சங்கிலி பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெரம்பலூரை சேர்ந்த வெங்கடேஷ், அஜீத்தை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டனர்.
- பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
- 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான குறுவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான கபடி போட்டியும், பெண்களுக்கான கால்பந்து போட்டியும் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் 11, 14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு களரம்பட்டி, அரசு ஆதிராவிடர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், குறுவட்ட ஒருங்கிணைப்பு குழு செயலாளருமான ஆறுமுகம் மற்றும் பள்ளி உடற்கல்வி இயக்குனரும், குறுவட்ட போட்டிக்கான இணை செயலாளருமான பாஸ்கர் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
- பெரம்பலூரில் வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலியாகி உள்ளனர்
- விபத்து குறித்து வழக்குகள் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, சிறுகளம்பூரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் பிரபாகரன் (வயது 29). இவர் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான மோகனுடன் (37) ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூருக்கு வந்தார். பின்னர் அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரபாகரன் ஓட்டினார்.
பாடாலூர் டாஸ்மாக் கடையை தாண்டி தெரணி சாலையில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பாடாலூர் அருகே உள்ள ஸ்ரீதேவிமங்கலத்தில் இருந்து சென்னைக்கு சின்ன வெங்காயம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி பிரிவு சாலையில் சென்றபோது, சிறுவாச்சூரில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும், டிராக்டரும் மோதிக்கொண்டன.
இதில், மோட்டார் சைக்கிளில் வந்த பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மனோகரன் (45), அதே கிராமத்தை சேர்ந்த படையப்பா (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்குசென்று 2 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மனோகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து, டிராக்டர் டிரைவர் செட்டிகுளத்தைச் சேர்ந்த சரத்குமாரை (22) கைது செய்தனர்.வெற
- மாநிலத்தில் முதன் முதலாக தீயணைப்போர்களுக்கான தடைகளை தகர்க்கும் பயிற்சி களம் பெரம்பலூரில் தொடங்கப்பட்டது
- பயிற்சி களத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ் குமார் திறந்து வைத்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் மாநிலத்தில் முதன் முதலாக தீயணைப்போர்களுக்கான தடைகளை (அப்ஸ்டகல்ஸ்) தகர்க்கும் பயிற்சி களம் தொடங்கப்பட்டது. இதனை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ் குமார் திறந்து வைத்து, பயிற்சியாளர்களுக்கான பயிற்சியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் வருகிற வடகிழக்கு பருவமழைைய முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் நிலையில் உள்ள சிறப்பு தளவாடங்கள், உபகரணங்கள் மற்றும் ஊர்திகளை ஆய்வு செய்தார். தீயணைப்பு வீரர்களின் பிரமீடுகளை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து சிறந்த பயிற்சியாளர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும் அதிகாரி ஆபாஷ்குமார், நிருபர்களிடம் கூறுகையில், இந்த தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மாநிலத்திலேயே முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்போர்களுக்கான பயிற்சி களத்தை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வரும் நிதி ஆண்டில் தீயணைப்பு துறைக்கு அதிக நீதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதன்மூலம் அதிகளவு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கான வாகனங்கள் வாங்கப்படவுள்ளது. தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு வளாகம் கட்டப்படும். தேவைப்படும் இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கவும், புதிய தீயணைப்பு வீரர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல துணை இயக்குனர் கல்யாணகுமார், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர்கள் கோமதி, வீரபாகு மற்றும் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள், அனைத்து நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூரில் வங்கி அதிகாரி மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
- வங்கி அதிகாரி உடலை கைப்பற்றி மருவத்தூர் போலீசார் விசாரணை
குன்னம்,
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காந்தி நகர், வல்லாய் தெருவை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 44). இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.விஜயராமன் பெரம்பலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஆயுள் காப்பீடு பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.நிலக்கோட்டையில் இருந்து தினந்தோறும் ெபரம்பலூருக்கு வர முடியாததால், அய்யலூர் ஜீவா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அலுவலகம் சென்று வந்தார்.இந்த நிலையில் நேற்று அவர் பணிக்கு செல்லவில்லை, எந்த தகவலும் தரவில்லை. இதனால் அலுவலகத்தில் இருந்து அவரது செல் போனுக்கு தொடர்பு கொண்ட போது செல்போனையும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள், உடனடியாக விஜயராகவன் வீட்டிற்கு வந்தனர்.அப்போது விஜயராமன் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் விஜயராமன் தங்கியிருந்த அறையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.வங்கி அதிகாரி மர்மமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






