என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் மங்களமேடு, குன்னம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக உதவி செயற்பொறியாளர் தகவல்

    பெரம்பலூர்,

    மங்களமேடு: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி. சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைப்பாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது
    • 2584 பேர் தேர்வெழுதிய நிலையில், 571 பேர் தேர்வெழுத வரவில்லை

    பெரம்பலூரில்

    தமிழக காவல்துறையில் 750 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவதற்கான எழுத்து தேர்வு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. இதில் நேற்று காலையில் முதன்மை எழுத்து தேர்வும், மாலையில் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வும் நடந்தது. அதன்படி இந்த தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் 6 தேர்வு மையங்களில் 158 அறைகளில் நடந்தது. இந்த தேர்வினை எழுதுவதற்காக பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2,311 ஆண் தேர்வர்களும், 844 பெண் தேர்வர்களும் என மொத்தம் 3,155 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    காலை, மாலை நடந்த தேர்வினை 1,920 ஆண்களும், 664 பெண்களும் என மொத்தம் 2,584 பேர் எழுதினர். 391 ஆண்களும், 180 பெண்களும் என மொத்தம் 571 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வினை சென்னை தலைமையிட போலீஸ் ஐ.ஜி. (நலன்) நஜ்மல் ஹோடா, மதுரை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜீத்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் மொத்தம் 375 போலீசார் ஈடுபட்டனர்.

    • பெரம்பலூரில் பணமோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • வீட்டுக்கடன் வாங்கி தருவதாக பலரிடம் மோசடி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் பட்டணங்குறிச்சியை சேர்ந்த பரமசிவத்தின் மகன் மணிவேல். இவர் செந்துறை மேலப்பட்டி சிறுகளத்தூரை சேர்ந்த இளவரசனிடம்(வயது 53) அவரது தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி, கடந்த 9.1.2022 அன்று ரூ.80 ஆயிரம் பெற்றுள்ளார். இளவரசன், பார்வதி, பிரியா, ஆண்டாள், ராமச்சந்திரன், ராஜா உள்ளிட்ட 12 பேரிடம் வீட்டுக்கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியபடி கடன் பெற்றுத்தரவில்லை என்று தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளவரசன் இது குறித்து அரியலூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் ஈரோடு மாவட்டத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மணிவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பெரம்பலூரில் நடந்த கூட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
    • நிர்வாகிகளாக தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி வருவாய் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. பெரம்பலூர் முத்து நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருணாநிதி தேர்தல் ஆணையாளர் அரியலூர் கல்வி மாவட்ட செயலாளர் கருணாநிதி தேர்தல் ஆணையாளராகவும், தேர்தல் இணை ஆணையராக செந்துறை கல்வி மாவட்ட செயலாளர் ராமநாதன் ஆகியோர் பணியாற்றினர். ஐபெட்டோ அகில இந்திய பொதுசெயலாளர் அண்ணாமலை, மாநில தலைவர் நம்பிராஜ் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் மாவட்ட தலைவராக செல்வராஜ், மாவட்ட செயலாளராக துரைராஜ் , மாவட்ட பொருளாளராக செல்வதுரை, மாவட்ட மகளிரணி செயலாளராக அமிர்தம், தலைமை நிலைய செயலாளராக துரைராஜ், மாவட்ட துணை தலைவர்களாக சீனிவாசன், மாலாரோஸ்லின், மாவட்ட துணை செயலாளர்களாக சந்திரகுமார், அகிலா, தணிக்கைகுழு உறுப்பினராக முருகேசன், தங்கதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் தேர்தல் வெற்றிப்பெற்றவர்களுக்கு ஐபெட்டோ பொதுசெயலாளர் அண்ணாமலை சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.இதில் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூரில் கணவரை சேர்த்து வைக்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல் நடைபெற்றது
    • மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம், பங்களா பஸ் நிறுத்தம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். சிவில் என்ஜினீயர். இவரது மனைவி மங்கையற்கரசி (வயது 32). இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும் அவர்கள் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு, ரோஸ் நகரில் உள்ள வினோத்குமாரின் தங்கையான செல்வி என்பவரது வீட்டிற்கு சென்று, தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி திடீரென்று வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கிருந்தவர்களுடன் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது மங்கையற்கரசியை கல்லால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மங்கையற்கரசியின் தலையின் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து மங்கையற்கரசி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • முதல்வர்கள், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில்,அளிக்கிறது. ஓணம் என்பது பண்டிகை மட்டுமல்ல, இது கலாச்சாரம், பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் ஒற்றுமை உணர்வின் கொண்டாட்டம். கேரள மாநிலத்தில் அபரிமிதமான விளைச்சலைக் கொண்டாடவும், புகழ்பெற்ற மன்னன் மகாபலிக்கு மரியாதை செலுத்தவும் குடும்பங்கள் ஒன்று கூடும் நேரம் இது. ஒன்றுபட்ட சமூகமாக ஒன்றிணைவோம். மன்னன் மகாபலி செய்தது போல், தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.இந்த திருவிழாவானது சடங்குகள், சுவையான விருந்துகள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்களுடன், வேற்றுமையில் ஒற்றுமையை பறைசாற்றப்படுகிறது. கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையின் அருமை பெருமைகள் பல உண்டு. அதில் குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று, "அத்தப்பூ" கோலம் போட்டு இந்த பண்டிகை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார்.விழாவில் செண்டை மேளம் முழங்க, கதகளி நடனத்துடன், யானை ஊர்வலத்துடன் கலைநிகழ்ச்சிகள், கேரளா பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், மாணவிகளின் திருவாதிரை களி நடனம் ஆகியவை நடந்தது. நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும செயலாளர் நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவகல்லூரி நிர்வாக இயக்குனர்கள் நிவானி , நிர்மல் மற்றும்முதல்வர்கள், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது
    • பெரம்பலூரில் 6 தேர்வு மையங்களில் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்புவதற்கான தேர்வுகள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் இன்று  நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கண்ட தேர்வினை எழுத 3 ஆயிரத்து 155 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களுக்கான தேர்வுகள் பெரம்பலூரில் 6 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வும், மதியம் 3.30 முதல் 5.10 வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற்றது. பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 6 தேர்வு மையங்களில், 158 அறைகளில் தேர்வுகள் நடைபெற்றது. 

    • பெரம்பலூர் கோர்ட் முன்பாக வக்கீல்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் வக்கீல்கள் இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்து தாக்கல் செய்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நேற்று ஒரு நாள் கோர்ட் பணியை புறக்கணிப்பு செய்தனர். இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் கோர்ட் வளாகம் முன்பு சங்க தலைவர் மணிவண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார் அசோசிஷேசன் சார்பில் வக்கீல் பேராமுருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அரபு நாட்டில் மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் வாலிபர் சென்னை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது
    • தொண்டையில் ஓட்டை போடப்பட்டு அதன் மூலம் திரவ உணவு வழங்கப்படுகின்றன.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ஷபியுல்லா அப்துல். இவர் கடந்த 2018-ம் ஆண்டில் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த மே மாதம் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதற்கு அங்கேயே சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் அவரை மீட்டு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குடும்பதினர் பெரம்பலூர் கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கும் கோரிக்கை மனு அளித்தனர்.அதன்பேரில் தமிழக அதிகாரிகள் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் ஷபியுல்லாவை சென்னைக்கு அழைத்து வந்தனர்.விமான நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டு அவசர சிக்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.ஷபியுல்லாவுக்கு தொண்டையில் ஓட்டை போடப்பட்டு அதன் மூலம் திரவ உணவு வழங்கப்படுகின்றன. அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • இரு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நடைபெறுகிறது
    • நாளை மறுநாள் நடைபெறும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்

    பெரம்பலூர், 

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவின்படி, தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு வருகை த ருகிறார்.அரியலூரில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.பின்னர் பெரம்பலூரில் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ள ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் பாலக்கரை அருகே கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு அந்த கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. நேற்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பிரபாகரன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், பரமேஸ்குமார் (பொறியாளர் அணி), மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஹரிபாஸ்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • செல்வகுமார் நான்கு ரோடு செல்லும் சாலையில் பால் பண்ணை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர் 

    பெரம்பலூரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 37). இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு செல்லும் சாலையில் பால் பண்ணை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவர்சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கொண்டு செல்வகுமார் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அதிகாலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    ஆனால் கடையின் உள்ளே இருந்து சத்தம் கேட்டு கொண்டிருந்தது. இதையடுத்து செல்வகுமார் தனது நண்பர்கள் உதவியுடன் கடையின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையின் உள்ளே ஒருவர் கல்லாவில் இருந்த பணத்தை திருடி கொண்டிருந்தார்.

    இதனை கண்ட செல்வகுமாரும், அவரது நண்பர்களும் அந்த நபரை கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் பெரம்பலூர் அருகே கல்பாடி தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி (50) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். முத்துசாமி மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • டால்மியா காலனியில் சிறார் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • மருத்துவர் உமாதேவி மாணவர்களுக்கு சிறார் வன்கொடுமை குறித்து சிறப்புரையாற்றினா

    டால்மியாபுரம் 

    திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் டால்மியா காலனியில் சிறார் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    டால்மியா சிமெண்ட் ஆலய தலைவர் விநாயகமூர்த்தி உத்தரவின் பேரில் டால்மியா ரோட்டரி சங்கம் சார்பில் டால்மியா மேல்நிலைப்பள்ளி, டால்மியா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் இணைந்து சிறார் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியினை டால்மியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

    டால்மியா ரோட்டரி சங்கத் தலைவர் பழனியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    கல்லக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் உமாதேவி மாணவர்களுக்கு சிறார் வன்கொடுமை குறித்து சிறப்புரையாற்றினார்.

    பேரணியில் டால்மியா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மனோகர், ரவிக்குமார் ,கோபி மற்றும் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் சுந்தர்ராஜன், ரோட்டரி சங்க பொருளாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    டால்மியா ரோட்டரி சங்கத் தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    ×