என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
- முதல்வர்கள், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில்,அளிக்கிறது. ஓணம் என்பது பண்டிகை மட்டுமல்ல, இது கலாச்சாரம், பாரம்பரியம், ஒற்றுமை மற்றும் ஒற்றுமை உணர்வின் கொண்டாட்டம். கேரள மாநிலத்தில் அபரிமிதமான விளைச்சலைக் கொண்டாடவும், புகழ்பெற்ற மன்னன் மகாபலிக்கு மரியாதை செலுத்தவும் குடும்பங்கள் ஒன்று கூடும் நேரம் இது. ஒன்றுபட்ட சமூகமாக ஒன்றிணைவோம். மன்னன் மகாபலி செய்தது போல், தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்.இந்த திருவிழாவானது சடங்குகள், சுவையான விருந்துகள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்களுடன், வேற்றுமையில் ஒற்றுமையை பறைசாற்றப்படுகிறது. கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகையின் அருமை பெருமைகள் பல உண்டு. அதில் குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று, "அத்தப்பூ" கோலம் போட்டு இந்த பண்டிகை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார்.விழாவில் செண்டை மேளம் முழங்க, கதகளி நடனத்துடன், யானை ஊர்வலத்துடன் கலைநிகழ்ச்சிகள், கேரளா பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், மாணவிகளின் திருவாதிரை களி நடனம் ஆகியவை நடந்தது. நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும செயலாளர் நீலராஜ், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவகல்லூரி நிர்வாக இயக்குனர்கள் நிவானி , நிர்மல் மற்றும்முதல்வர்கள், டீன்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.






