என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
- பெரம்பலூர் கோர்ட் முன்பாக வக்கீல்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் வக்கீல்கள் இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்து தாக்கல் செய்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நேற்று ஒரு நாள் கோர்ட் பணியை புறக்கணிப்பு செய்தனர். இக்கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் கோர்ட் வளாகம் முன்பு சங்க தலைவர் மணிவண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார் அசோசிஷேசன் சார்பில் வக்கீல் பேராமுருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






