என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரபு நாட்டில் மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் வாலிபர்
- அரபு நாட்டில் மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பெரம்பலூர் வாலிபர் சென்னை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது
- தொண்டையில் ஓட்டை போடப்பட்டு அதன் மூலம் திரவ உணவு வழங்கப்படுகின்றன.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ஷபியுல்லா அப்துல். இவர் கடந்த 2018-ம் ஆண்டில் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த மே மாதம் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதற்கு அங்கேயே சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் அவரை மீட்டு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று குடும்பதினர் பெரம்பலூர் கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கும் கோரிக்கை மனு அளித்தனர்.அதன்பேரில் தமிழக அதிகாரிகள் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் ஷபியுல்லாவை சென்னைக்கு அழைத்து வந்தனர்.விமான நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டு அவசர சிக்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.ஷபியுல்லாவுக்கு தொண்டையில் ஓட்டை போடப்பட்டு அதன் மூலம் திரவ உணவு வழங்கப்படுகின்றன. அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






