என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • வேப்பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • விபத்தில்லா தமிழ்நாடு எங்கள் பொறுப்பு" என்ற சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி

    அகரம்சீகூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வேப்பூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு மற்றும் விழுப்புரம் சாலை பாதுகாப்பு அலகு சார்பில் "விபத்தில்லா தமிழ்நாடு எங்கள் பொறுப்பு" என்ற சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் கோட்ட பொறியாளர் கலைவாணி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மணி மேகலை வரவேற்புரை ஆற்றினார்.

    விழுப்புரம் கோட்ட பொறியாளர் ஸ்ரீகாந்த், குன்னம் உட்கோட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் தமிழ் அமுதன் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றினர்கள். தோழன் அமைப்பு ஜெகதீஸ்வரன், நந்தகுமார் கோவிந்தன் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழிமுறை களை எடுத்து கூறினார்கள்.

    மேலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு எவ்வாறு முதல் உதவி செய்வது குறித்து நேரடியாக மாணவிகளுக்கு செயல் முறை விளக்கம் காட்டி னார்கள். மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிமு றைகள் குறித்த துண்டு பிரசு ரங்களும் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த வினாடி வினா, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சா ன்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள்,

    கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இயற்பியல் பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    Next Story
    ×