என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடையின் பூட்டை உடைத்து திருட்டு
- செல்வகுமார் நான்கு ரோடு செல்லும் சாலையில் பால் பண்ணை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 37). இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு செல்லும் சாலையில் பால் பண்ணை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.
இவர்சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கொண்டு செல்வகுமார் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அதிகாலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஆனால் கடையின் உள்ளே இருந்து சத்தம் கேட்டு கொண்டிருந்தது. இதையடுத்து செல்வகுமார் தனது நண்பர்கள் உதவியுடன் கடையின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையின் உள்ளே ஒருவர் கல்லாவில் இருந்த பணத்தை திருடி கொண்டிருந்தார்.
இதனை கண்ட செல்வகுமாரும், அவரது நண்பர்களும் அந்த நபரை கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் பெரம்பலூர் அருகே கல்பாடி தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி (50) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். முத்துசாமி மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






