என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களிடம் தாலி செயின் பறித்த பெரம்பலூர் வாலிபர்கள்
    X

    பெண்களிடம் தாலி செயின் பறித்த பெரம்பலூர் வாலிபர்கள்

    • கடலூர், சேலம் பகுதிகளில் பெண்களிடம் தாலி சங்கிலி பறிக்கும் பெரம்பலூரை சேர்ந்த 2 வாலிபர்கள் சிக்கினர்
    • போலீசாரிடம் சிக்கிய வாலிபர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மீட்பு

    பெரம்பலூர்,

    அரியலூர் மாவட்டம் அம்மாகுளம் பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு ஏரிக்கரையை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 22), பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு எளம்பலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த அஜீத் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 2 சங்கிலி பறிப்பு சம்பவங்களிலும், அரியலூர், சேலத்தில் தலா ஒரு சங்கிலி பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெரம்பலூரை சேர்ந்த வெங்கடேஷ், அஜீத்தை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டனர்.

    Next Story
    ×