என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (17ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின்விநியோகம் இருக்காது
பெரம்பலூர்
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (17ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும்பகுதிகளான பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், எஸ்.குடிக்கடு, கீ, புதூர், வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின்விநியோகம் இருக்காது
இத்தகவலை மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
- சுங்கச்சாவடியில் ஆட்குறை–ப்பு நடவடிக்கை–க்காக 53 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இன்றுடன் 16-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டம் நீடித்தது.
பெரம்பலூர்,
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை மற்றும் உளுந்தூர் பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்காக 53 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, அந்த பணியாளர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களும் கடந்த 1-ந்தேதி முதல் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் போராட்ட களத்தில் பல்வேறு விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் 16-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டம் நீடித்தது. அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள், இரண்டு சுங்கச்சாவடிகளிலம் தற்போது என்ன நிலவரம் உள்ளதோ அதன்படியே வாகனங்கள் சென்று வர வேண்டும். நிர்வாகம் புதிய ஆட்களை பணியமர்த்தக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் அமைதி வழியிலேயே போராட்டத்தை தொடரலாம் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- ஆசிரியர் தகுதி தேர்வினை 237 பேர் எழுதினர்.
- 2 மையங்களில் நடந்தது.
பெரம்பலூர்
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் கணினி வழி தேர்வு நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. காலை, மதியம் ஆகிய 2 வேளைகளில் தேர்வு நடந்தது. ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் நாள் கணினி வழி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் 370 பேரில், 237 பேர் தேர்வு எழுதினர். 133 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.
- லாடபுரம் ஆனைகட்டி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
- பச்சை மலைத்தொடரில் பலத்த மழை பெய்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகரில் நேற்று மாலை 6 மணி அளவில் மழை பெய்து தொடங்கியது சிறிது நேரம் பரவலான மழை பெய்தது. பெரம்பலூர் சுற்று வட்டார பகுதி கிராமங்களிலும் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கு எல்லையாக திகழும் பச்சை மலை தொடரில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் லாடபுரம் அருகே பச்சை மலை உச்சியில் செக்காத்தி பாறையில் அமைந்துள்ள ஆனைகட்டி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆனைகட்டி அருவி நீர் வெளியேறும் வாய்க்காலை ஒட்டி கரையோர பகுதிகளில்அமைந்துள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நேற்று பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை விவசாயிகள், கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளர்கள் மற்றும் லாடபுரம் கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைகட்டி அருவியில் ஒரே நாளில் இதுபோன்று வெள்ளம் கரை புரண்டு ஓடியதாக கூறி வியப்படைந்தனர்.
மேலும் பச்சை மலையில் லாடபுரம் அருகே உள்ள மயிலுற்று அருவியிலும் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. பச்சைமலை தொடரில் இதுபோன்று வெள்ளப்பெருக்கு மேலும் சில நாட்களுக்கு தொடர்ந்தால் லாடபுரம் அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, குரும்பலூர் மற்றும் பாளையம் செஞ்சேரி, அரணாரை, நீலி அம்மன் ஏரி, பெரம்பலூரில் உள்ள 2, துறைமங்கலம் பெரிய ஏரி மற்றும் கவுள்பாளையம் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி விடும் என்பதால் பெரம்பலூர் பகுதி விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பச்சை மலைத் தொடரில் மழை தொடர வேண்டும் என்று ஆர்வத்துடன் தெரிவித்தனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர்
பெரம்பலூர்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு நடந்த இந்த நூதன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பெரம்பலூர் ஒன்றிய தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் சாந்தப்பன் (வேப்பூர்), வேலு (வேப்பந்தட்டை) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன், செயலாளர் பால்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் வாழ்த்துரை வழங்கினார். இதில் கலந்து கொண்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் காலி தட்டை ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையும், சமூக நலம் மகளிர் உரிமைத்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி சமூக நல இயக்குனர் பரிந்துரைத்துள்ள சட்ட பூர்வ ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்கிட வேண்டும். 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கையில் காலி தட்டேந்தியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முத்துசாமி வரவேற்றார். முடிவில் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்."
- லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
- 60 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர்- ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் உள்ளே புகுந்து அலுவலக கதவினை உட்புறமாக தாழிட்டு கொண்டு சோதனை செய்தனர். அப்போது பணியிலிருந்த துணை தாசில்தார் சிலம்பரசன் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு 11மணி வரையிலும் நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து டிஎஸ்பி சத்தியராஜ் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையால் வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
- பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்தவரை சிறையில் அடைத்தனர்.
- தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ரா (வயது 50).
இவர் பெரம்பலூர் போலீஸ் நிலைத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் இந்திய தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையத்தை சேர்ந்த பி.ஆர்.ஈஸ்வரன்(42) என்பவர் பணம் தேவை இருப்பதாககூறி கேட்டதால், நான் ரூ.8 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். மேலும் 8 பவுன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். மேலும் ஈஸ்வரனின் மகனிடம் ரூ.1 லட்சம் கொடுத்தேன். பணம் மற்றும் நகை கொடுத்து 3 ஆண்டுகள் ஆகியும் பலமுறை திருப்பி கேட்டு ஈஸ்வரன் தரவில்லை.
இந்நிலையில் அண்மையில் பணத்தையும், நகையையும் திருப்பிதருமாறு கேட்டதற்கு என்னை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
- மருந்து துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள்
பெரம்பலூர்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் எட்டியுள்ளதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டியினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அந்த துறையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கோ-கோ, கிரிக்கெட், கபடி, பூப்பந்து. எறிப்பந்து, ஹேண்ட்பால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. அவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கோலப்போட்டி, சிறு சிறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை அந்தந்த வட்டார மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. பரிசளிப்பு விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது."
- காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- களத்தூரில் குடிநீர் வராததை கண்டித்து
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட டி.களத்தூர் கிராம ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் நேற்று காலை துறையூர்-மண்ணச்சநல்லூர் ரோடு டி.களத்தூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஆலத்தூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், டி.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
- உற்சாகமாக வாங்கி சென்றனர்
பெரம்பலூர்
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளி திறந்த முதல் நாளிலேயே பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய மேற்கு தொடக்கப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன. அதனை மாணவர்கள் உற்சாகமாக வாங்கி சென்றனர்
- 3 தனியார் உரக்கடைகளின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டது.
- அதிக விலைக்கு உரம் விற்றதால்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வேளாண்மை துறையின் மூலம் சிறப்பு பறக்கும் படை அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டார். அதன்படி வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி தலைமையில் சிறப்பு பறக்கும் படை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் வேப்பந்தட்டை வட்டார வேளாண்மை அலுவலர்கள் வேப்பந்தட்டை வட்டாரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் 3 தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் அந்த கடைகளின் விற்பனை முடக்கம் மற்றும் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டனர்."
- சுங்கச்சாவடி பணியாளர்கள் 13-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்
பெரம்பலூர்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்காக 28 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, அந்த பணியாளர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களும் கடந்த 1-ந்தேதி முதல் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் போராட்ட களத்தில் பல்வேறு விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 13-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டம் நீடித்தது. அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது."






