search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாடபுரம் ஆனைகட்டி அருவியில் வெள்ளப்பெருக்கு
    X

    லாடபுரம் ஆனைகட்டி அருவியில் வெள்ளப்பெருக்கு

    • லாடபுரம் ஆனைகட்டி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
    • பச்சை மலைத்தொடரில் பலத்த மழை பெய்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நகரில் நேற்று மாலை 6 மணி அளவில் மழை பெய்து தொடங்கியது சிறிது நேரம் பரவலான மழை பெய்தது. பெரம்பலூர் சுற்று வட்டார பகுதி கிராமங்களிலும் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கு எல்லையாக திகழும் பச்சை மலை தொடரில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் லாடபுரம் அருகே பச்சை மலை உச்சியில் செக்காத்தி பாறையில் அமைந்துள்ள ஆனைகட்டி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆனைகட்டி அருவி நீர் வெளியேறும் வாய்க்காலை ஒட்டி கரையோர பகுதிகளில்அமைந்துள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    நேற்று பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை விவசாயிகள், கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளர்கள் மற்றும் லாடபுரம் கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைகட்டி அருவியில் ஒரே நாளில் இதுபோன்று வெள்ளம் கரை புரண்டு ஓடியதாக கூறி வியப்படைந்தனர்.

    மேலும் பச்சை மலையில் லாடபுரம் அருகே உள்ள மயிலுற்று அருவியிலும் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. பச்சைமலை தொடரில் இதுபோன்று வெள்ளப்பெருக்கு மேலும் சில நாட்களுக்கு தொடர்ந்தால் லாடபுரம் அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, குரும்பலூர் மற்றும் பாளையம் செஞ்சேரி, அரணாரை, நீலி அம்மன் ஏரி, பெரம்பலூரில் உள்ள 2, துறைமங்கலம் பெரிய ஏரி மற்றும் கவுள்பாளையம் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி விடும் என்பதால் பெரம்பலூர் பகுதி விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பச்சை மலைத் தொடரில் மழை தொடர வேண்டும் என்று ஆர்வத்துடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×