

பெரம்பலூர்:
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ரா (வயது 50).
இவர் பெரம்பலூர் போலீஸ் நிலைத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் இந்திய தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையத்தை சேர்ந்த பி.ஆர்.ஈஸ்வரன்(42) என்பவர் பணம் தேவை இருப்பதாககூறி கேட்டதால், நான் ரூ.8 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். மேலும் 8 பவுன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். மேலும் ஈஸ்வரனின் மகனிடம் ரூ.1 லட்சம் கொடுத்தேன். பணம் மற்றும் நகை கொடுத்து 3 ஆண்டுகள் ஆகியும் பலமுறை திருப்பி கேட்டு ஈஸ்வரன் தரவில்லை.
இந்நிலையில் அண்மையில் பணத்தையும், நகையையும் திருப்பிதருமாறு கேட்டதற்கு என்னை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.