என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது
    • இரண்டாவது நாளாக நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நேற்று இரண்டாவது நாளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 652 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதன்படி பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மரியஅந்தோனியம்மாளிடம் பெயர் சேர்த்தலுக்கான படிவம் - 6ஐ வழங்கி பெயர் சேர்க்க கோரினர்.‌ இப்பணியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, உதவி ஆசிரியர் அருட்செல்வி மற்றும் தன்னார்வலர் குமார்அய்யாவு ஆகியோர் ஈடுபட்டனர்.

    • விவசாய சங்க மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வேலை அறிக்கை வாசித்தார். மாநில துணை தலைவர் ஸ்டாலின்மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் வரும் 26ம்தேதி சென்னை கவர்னர் மாளிகையின் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது, டிசம்பர் 7ம்தேதி மாலை 3 மணி அளவில் பெரம்பலூரில் தொடங்கும் அகில இந்திய ஜோதி பயணம் குழுவினருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது. பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்கயாம், நெல் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்க பயிர்காப்பீடு தொகை வழங்கவேண்டும் என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பொறுப்பாளர்கள் மகாதேவன், விநாயகம், கனகராஜ், ராஜா, சத்தியசீலன், செந்தில்குமார், செல்லதுரை, சின்னசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சிறுவாச்சூர், பேரளி, எசனை, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரையில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர், பேரளி, எசனை, கிருஷ்ணா புரம் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (15ம்தேதி) மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமபகுதிகளான சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம்,செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர்.

    எசனை

    கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர்.

    பேரளி

    பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், வாலிகண்டபுரம் மற்றும் செங்குணம்.

    கிருஷ்ணாபுரம்

    கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமதுபட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், நெற்குணம், நூத்தப்பூர், கை.களத்தூர், பிள்ளையார்பாளையம், தொண்டபாடி, சிறுநிலா, ஈச்சங்காடு, பெரியவடகரை, வெண்பாவூர், பூம்புகார், பாலையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை விரைவாக வழங்க கோரிக்கை விடுத்தனர்
    • பெரம்பலூரில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட மாநாடு

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயராமன், முத்துசாமி, மகாலெட்சுமி, ராஜாங்கம், தனராஜ், கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் வேணுகோபால் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். மாநில கட்டுப்பாட்டக்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக ஏஐடியுசி மாநில செயலாளர் சந்திரக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மாநாட்டில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ. 18 ஆயிரம் வழங்கவேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழக சுமைத்தூக்கும் பணியாளர்களை நிரந்தரம் செய்து தொகுப்பூதியம் நிர்ணயம் செய்யவேண்டும் , திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

    நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி, குறைந்த பட்ச கூலி ரூ.281-ஐ முழுமையாக வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குடும்ப உதவிதொகை மற்றும் ஓய்வூதியத்தை காலதாமதம் செய்யாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    நடப்பாண்டில் பாதிக்கப்பட்டுள்ள மானா வாரி பயிர்களான பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பயிர் காப்பீடு தொகையை விரைவாக வழங்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.

    • பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி நடை பெற்றது.
    • மன்ற பேராசிரியர் சுந்தர் மற்றும் நிஷா ஆகியோர் யோகா பயிற்சி மற்றும் தியான பயிற்சி குறித்து விளக்கம் அளித்து செய்முறை பயிற்சி அளித்தனர்


    பெரம்பலூர்

    பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் பெரம்பலூரில் உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது.

    பயிற்சி தொடக்க நிகழ்ச்சி பள்ளி தலைவர் பூமப்பிரியா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் ராஜேந்திரன் யோகா பயிற்சியை தொடங்கிவைத்து பேசினார்.

    மன்ற பேராசிரியர் சுந்தர் மற்றும் நிஷா ஆகியோர் யோகா பயிற்சி மற்றும் தியான பயிற்சி குறித்து விளக்கம் அளித்து செய்முறை பயிற்சி அளித்தனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.





    • செல்வம்அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்
    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.


    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் ( வயது 38). விவசாய கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள ஒருவரது தோட்டத்தில் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மீண்டும் குடும்பம் நடத்த அழைத்த பின்னரும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் சறுக்கு பாறை பாலம் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்து தோட்டக்காரர்கள் இன்று பாடாலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.





    • பழமையான ஆவணங்களை பாதுகாத்திட பொதுமக்கள் ஒத்துைழப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த

    பெரம்பலூர்:

    பழமையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் அனைத்தும் ஆய்வு பணிகளுக்கு கிடைக்கும் வகையில் தனியார் நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும் அவற்றை சேகரித்து பாதுகாப்பாக வைத்திட தமிழ்நாடு ஆவணங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் ஆணையர், அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் தமிழ்நாடு ஆவண காப்பகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இக்குழு வினால் புணர மைக்கப்பட்டு டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நகல் எடுத்து வைக்க நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். மேலும் இத்தகைய பதிவுகள் கால வெள்ளத்தாலும் மனித அலட்சியத்தாலும் நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் தடயங்களை அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்படும்.

    அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் மூலமாக கிராமங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் உரிமையாளரின் பெயர்கள், தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் போன்றவற்றின் விவரங்கள் தமிழ்நாடு ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தனிப்பட்ட பழமையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இருப்பின் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது சென்னை தமிழ்நாடு ஆவண காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு ஆணையரிடம் ஒப்படைக்கலாம்.

    பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாற்று ஆவண சேகரிப்பு மற்றும் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய செய்தியை பரப்புவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவி த்துள்ளார்.

    • எல்.ஐ.சி முகவர்கள் கோரிக்கை மனு
    • கலெக்டரிடம் அளித்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    பெரம்பலூர் கிளை எல்ஐசி முகவர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமையில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், எல்ஐசி முகவருக்கான கமிஷன் தொகையை குறைக்க கூடாது, பாலிசிதாரர்கள் பெரும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கக் கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

    மனு அளிப்பின்போது, கோட்ட இணை செயலாளர் முருகானந்தம், சங்க தலைவர் சுத்தாங்காத்து, செயலாளர் செந்தில்குமார், பொரு ளாளர் கருப்பை யா, துணைத்தலைவர் ஆசைதம்பி, ஆலோ சனைக்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • பெண் குழந்தைகள் விருதிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த தகுதிகளுடைய பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருது வழங்கப்படவுள்ளது.

    பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேரு எதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் என சேவைகளை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தகுதியுடையவர்கள் உரிய விபரங்களுடன் வரும் 30ம்தேதி மாலை 5.30 மணிக்குள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

    • சுங்கச்சாவடி ஊழியர்கள் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்
    • 42-வது நாளான நேற்று போராட்டம் தொடர்ந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த திருமாந்துறைறறறறயில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் 28 பேரை பணியிடை நீக்கம் செய்த தனியார் ஒப்பந்த நிர்வாத்தை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 42-வது நாளான நேற்று போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மண்டியிட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து, எங்களது கஷ்டங்கள் எப்போது தீரும் என்று கேட்பதுபோல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • கன மழைக்கு 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன
    • பெண்கள் உட்பட 6 பேர் பள்ளியில் தங்க வைப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசனே தெரியாதபடிக்கு வங்கக் கடலில் ஏற்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, கீழடுக்கு சுழற்சி காரணாமாகவும், வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாகவும் வருண பகவான மழையை வாரிக் கொட்டுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில் 17 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

    இந்நிலையில் நேற்று வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அதிகாலை 1 மணி முதல் இனறு காலை வரை மழை பெய்து கொண்டே இருந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது. கன மழையால் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சியில் வசிக்கும் வையாபுரி மகன் பழனிச்சாமி,

    காளிமுத்து மனைவி பாப்பா ஆகியோரது குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதனை அறிந்த வருவாய் ஆய்வாளர் அமிர்தலிங்கம், விஏஓ சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று பழனிச்சாமி, பாப்பா மற்றும் ஆபத்தனா நிலையில் குடிசை வீடுகளில் வசிக்கும் பழனிச்சாமி மனைவி செல்வி, நடேசன் மனைவி பாப்பாத்தி, உலகநாதன் மனைவி தஞ்சாயி, சரவணன் பொட்டுக் கண்ணு என 4 குடும்பங்களை சேர்ந்த 1 ஆண், 5 பெண் உட்பட 6 பேரை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைத்தனர்.

    மாவட்ட அளவில் கலெக்டர் வெங்கடபிரியா உத்தரவின் பேரில், மழையால் பாதுக்கப்படுவோரை தங்க வைக்க பள்ளிகள், சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கத.

    • மாடியில் இருந்து தவறி விழுந்த திருடன் படுகாயம் அடைந்தார்.
    • தப்பி ஓட முயன்றபோது போது சம்பவம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் எம்.எம். நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 43). நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவரின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த கணேசன் எழுந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது அங்கு மர்ம ஆசாமி ஒருவர் கதவு திறந்து உள்ளே வந்து நின்று கொண்டிருந்ததார்.

    இதனை கண்ட கணேசன் இதுகுறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த ஆசாமியை பிடிக்க அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இதனை கண்ட அந்த மர்ம ஆசாமி கணேசன் வீட்டின் மாடியில் ஏறி, அருகே உள்ள வீட்டின் மாடிக்கு தாவி குதித்து தப்பிக்க முயன்றான். அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்த மர்ம ஆசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதையடுத்து அக்கம், பக்கத்தினர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ஆசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டன. இதையடுத்து அவர் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    விசாரணையில், அவர் குன்னம் தாலுகா, மழவராயநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த சக்திவேல் (46) என்பது தெரியவந்தது. அவர் கணேசன் வீட்டில் திருடுவதற்தாக வந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ×