என் மலர்
நீங்கள் தேடியது "விவசாய சங்க மாவட்ட குழு கூட்டம்"
- விவசாய சங்க மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வேலை அறிக்கை வாசித்தார். மாநில துணை தலைவர் ஸ்டாலின்மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் வரும் 26ம்தேதி சென்னை கவர்னர் மாளிகையின் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது, டிசம்பர் 7ம்தேதி மாலை 3 மணி அளவில் பெரம்பலூரில் தொடங்கும் அகில இந்திய ஜோதி பயணம் குழுவினருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது. பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்கயாம், நெல் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்க பயிர்காப்பீடு தொகை வழங்கவேண்டும் என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பொறுப்பாளர்கள் மகாதேவன், விநாயகம், கனகராஜ், ராஜா, சத்தியசீலன், செந்தில்குமார், செல்லதுரை, சின்னசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.






