என் மலர்
நீங்கள் தேடியது "யோகா பயிற்சி. YOGA PRACTICE"
- பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி நடை பெற்றது.
- மன்ற பேராசிரியர் சுந்தர் மற்றும் நிஷா ஆகியோர் யோகா பயிற்சி மற்றும் தியான பயிற்சி குறித்து விளக்கம் அளித்து செய்முறை பயிற்சி அளித்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் பெரம்பலூரில் உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளியில் யோகா பயிற்சி நடந்தது.
பயிற்சி தொடக்க நிகழ்ச்சி பள்ளி தலைவர் பூமப்பிரியா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் ராஜேந்திரன் யோகா பயிற்சியை தொடங்கிவைத்து பேசினார்.
மன்ற பேராசிரியர் சுந்தர் மற்றும் நிஷா ஆகியோர் யோகா பயிற்சி மற்றும் தியான பயிற்சி குறித்து விளக்கம் அளித்து செய்முறை பயிற்சி அளித்தனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






