என் மலர்
நீங்கள் தேடியது "SPECIAL CAMP FOR REVISION OF VOTER LIST"
- வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது
- இரண்டாவது நாளாக நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நேற்று இரண்டாவது நாளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 652 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதன்படி பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மரியஅந்தோனியம்மாளிடம் பெயர் சேர்த்தலுக்கான படிவம் - 6ஐ வழங்கி பெயர் சேர்க்க கோரினர். இப்பணியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, உதவி ஆசிரியர் அருட்செல்வி மற்றும் தன்னார்வலர் குமார்அய்யாவு ஆகியோர் ஈடுபட்டனர்.






