என் மலர்
பெரம்பலூர்
- சாலை விபத்தில் தற்காலிக மின் ஊழியா் உயிரிழந்தாா்
- துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது விபத்து
பெரம்பலூா்:
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் காந்தி நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் அங்கமுத்து (40). இவா், பெரம்பலூா் மாவட்ட மின் வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், நேற்று மாலை தனது மாமனாரின் உடலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்துவிட்டு, கை.களத்தூா் பாலம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத காா் அங்கமுத்து மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்."
- சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்கள் நாளை நடக்கிறது.
- 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள் விவரம் வருமாறு:-பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு எளம்பலூர், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு தொண்டமாந்துறை (கிழக்கு), குன்னம் வட்டாரத்திற்கு புதுவேட்டக்குடி, ஆலத்தூர் வட்டாரத்திற்கு மேலமாத்தூர் ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.
கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சினிமா பாடலுக்கு பெண் அதிகாரி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
- பார்வையாளா்களை வெகுவாக கவர்ந்தது.
பெரம்பலூர்
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் 'மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா' பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் சார்பில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த விழாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே... என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடினார்.
அவரது நடனம் பார்வையாளா்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது பார்வையாளர்கள் அடித்த விசில் சத்தம் காதை கிழித்தது. மேலும் டாக்டர் கீதாராணியின் அந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது நடன வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே டாக்டர் கீதாராணி அரியலூர் மாவட்டத்தில் நடந்த நூற்றாண்டு விழாவிலும் இதே பாடலுக்கு நடனமாடினார். மேலும் அவர் அந்த விழாவில் கரகத்தை தலையில் சுமந்தும், சிலம்பம் சுற்றியவாறும் சினிமா பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூரை சேர்ந்த டாக்டர் கீதாராணி ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது."
- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டத்தின் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் குன்னம் ராஜேந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஊர்வலம் வெங்கடேசபுரம் வழியாக சென்று ரோவர் வளைவில் நிறைவடைந்தது. முன்னதாக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது."
- அவரது நடனம் பார்வையாளா்களை வெகுவாக கவர்ந்தது.
- பார்வையாளர்கள் அடித்த விசில் சத்தம் காதை கிழித்தது.
பெரம்பலூர் :
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் 'மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா' பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த விழாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே... என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடினார்.
அவரது நடனம் பார்வையாளா்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது பார்வையாளர்கள் அடித்த விசில் சத்தம் காதை கிழித்தது. மேலும் டாக்டர் கீதாராணியின் அந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ரோந்து போலீசார் பேருந்தை ரத்தி சென்று ரூ.1.35 லட்சம் ரொக்கம், உடமைகளை மீட்டு ஒப்படைத்தனர்
- டீ சாப்பிட இறங்கிய முதியவரை தவிக்க விட்டு சென்ற பஸ்
பெரம்பலூர்
சிவகங்கை மாவட்டத்திலிருந்து சென்னை செல்வதற்காக அரசு பஸ்சில் முதியவர் ஒருவர் பயணித்தார். பேருந்து பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் பயணிகளை இறக்குவதற்காக சற்று நேரம் நின்று கொண்டிருந்தது. அப்போது முதியவர் டீ சாப்பிட கீழே இறங்கியுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது தான் வந்த பஸ்சை காணவில்லை எனவும், தன்னுடைய உடைமைகள் அனைத்தும் அந்த பஸ்சில் இருப்பதாகவும், எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் ரோந்து பணியிலிருந்த சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமியிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து எண்1 - ல் பணியிலிருந்து போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், போலீசார் சக்திவேல், அரவிந்தன் ஆகியோர்கள் திருமாந்துறை டோல் பிளாசா பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த அரசு பஸ்சை நிறுத்தி , முதியவரின் பணப்பை மற்றும் உடைமைகள் அடங்கிய பையை எடுத்து பையை பறிக்கொடுத்த முதியவரை வரவழைத்து அவரது உடைகள் மற்றும் அதிலிருந்த பணம் ரூபாய் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஆகியவற்றை ஒப்படைத்தும் முதியவரை மீண்டும் சென்னை செல்வதற்கு வேறொரு பஸ்சில் ஏற்றி விட்டனர். முதியவர் தவறவிட்ட ஒரு மணிநேரத்தில் உடைமைகள் மற்றும் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து எண்-1 காவல்துறையினரை எஸ்பி மணி பாராட்டி வாழ்த்தினார்.
- பெருமாள் கோயிலில் கார்திகை தீப திருவிழா நடைபெற்றது
- சுடலை கொளுத்தப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு கார்த்திகை தீப திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று இரவு 7 மணியளவில் பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் இருந்து புறப்பாடு நடந்தது. மூலவர், தாயார். ஆண்டாள் ஆகியோர் சன்னதி சொர்க்கவாசல் ராஜகோபுரம் மற்றும் அனைத்து கோபுரங்களிலும் தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சீவிராயன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கபனையை பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் சொல்லி பெருமாள் முன்னிலையில் சுடலை கொளுத்தப்பட்டது. சுவாமி பெருமாள் சுற்றி பக்தர்கள் நின்று கோவிந்தா, கோவிந்த என முழக்கமிட்டனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜதிலகம் ஏற்பாடு செய்திருந்தார்.
- மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்தார்
- வேலியை அகற்ற முயன்றபோது சம்பவம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஆருகேயுள்ள குரும்பலூர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவர் அே பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சின்ன வெங்காம் சாகுபடி செய்துள்ளார். இப்பயிர்களை மான், காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வந்ததால் வயலை சுற்றி மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை அகற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி தொடங்கியது
- அரைவைப் பணி வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2022-23-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவையை தொடங்குவதற்கு எந்திரங்களை தயார்படுத்துவதற்கான இளஞ்சூடேற்றும் நிகழ்ச்சி ஆலையின் தலைமை நிர்வாகி தலைமையில் நடைபெற்றது. நடப்பு பருவத்தில் 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 3,60,000 டன் கரும்பை பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரைப்பதற்கு திடடமிடப்பட்டுள்ளது. கரும்பு அரைவைப் பணி வரும் 17-ந் தேதி தொடங்க உள்ளது. அரைவைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஆலையில் பழுதடைந்த இணை மின் உற்பத்தி நிலையத்தின் ரோட்டார் எந்திரம் உள்ளிட்ட சில எந்திரங்கள் பழுது நீக்கப்பட்டு, சில எந்திரங்கள் புதுப்பிக்கப்பட்டும் உள்ளன.
- ஓடும் பேருந்தில் நகையை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
- திருட முயன்றவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பெரம்பலூர்:
திருச்சி மலைக்கோட்டை மகலா நேரு நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது29). இவர், திருச்சியிலிருந்து உளுந்தூர் பேட்டையில் உள்ள அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பார்தது வருவதற்காக அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பேருந்து சிறுவாச்சூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மணிகண்டன் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் மணிகண்டன் சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் ெசயினை திருட முயன்றார். அப்போது. சுதாரித்துக்கொண்ட மணிகண்டன் நகையை திருட முயன்றவரை பிடித்து பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் நகையை பறிக்க முயன்றவர் சென்னை சோழிங்க நல்லூர், காந்தி தெருவை சேர்ந்த சரவணன்(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர் மன்ற விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று நேரு யுவகேந்திரா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
- மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம் காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருது பெற தகுதியான இளைஞர்கள் மன்றங்கள் விண்ணப்பிக்க நேருயுவகேந்திரா அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திராவுடன் இணைந்து மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளையோர் மன்றத்திற்கு "மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மன்ற விருது" வழங்கப்பட உள்ளது.
இளையோர் மன்றங்களின் மூலமாக குடும்ப நலம் மற்றும் நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு. கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இளையோர்களுக்கு திறன்வளர்ச்சி பயிற்சிகள் அளித்தல், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுகாதார விழிப்புணர்வு பணிகளை செய்து வரும் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விருது பெற தகுதி உள்ளவையாக கருதப்படும்.
மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் சங்கங்களின் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 2021 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2022 மார்ச் 31-ந்தேதிக்குள் தங்கள் பகுதிகளில் சேவை செய்தமைக்கான போட்டோ ஆதராங்கள், பாராட்டு சான்றிதழ்கள், அழைப்பிதழ்கள், பத்திரிக்கை செய்திகள் மற்றும் பயனாளிகள் பெயர் பட்டியல் மட்டும் தகுதி உள்ளவையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம் காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் இளைஞர், மகளிர் மன்றத்திற்கு முறையே முதலாவதாக ரூ.75 ஆயிரமும், இரண்டாவதாக ரூ.50 ஆயிரமும், மூன்றாவதாக ரூ.25 ஆயிரமும் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.3 லட்சமும். இரண்டாம் பரிசாக ரூ. ஒரு லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் உள்ளது.
இதற்தான விண்ணப்பத்தை பெரம்பலூர், நான்கு ரோடு, நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நேரில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் வரும் 12-ந்தேதி மாலை 5 மணிக்குள் அளிக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேரி எண்: 04328 - 296213 மற்றும் 7810982528, 9443707581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது
- மாலை 6 மணியளவில் பிரம்மரிஷி மலை உச்சியில் 5 அடி உயர செப்பு கொப்பரையில், 2 ஆயிரத்து 100 மீட்டர் திரி கொண்டு தீபம் ஏற்றப்பட்டது
பெரம்பலூர்:
மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
இதன்படி 40-வது ஆண்டாக நேற்று கார்த்திகை தீபதிருநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று காலை கோமாதா பூஜையும், கஜ, அஸ்வ பூஜையும் நடந்தது.
தொடர்ந்து பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வர் கோவிலில் மகா தீப செப்பு க்கொப்பரை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு எளம்பலூர் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பூஜை செய்து பின்னர் பிரம்மரிஷி மலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
மாலை 6 மணியளவில் பிரம்மரிஷி மலை உச்சியில் 5 அடி உயர செப்பு கொப்பரையில், 2 ஆயிரத்து 100 மீட்டர் திரி கொண்டு, ஆயிரத்து 8 லிட்டர் பசு நெய், செக்கு நல்லெண்ணை ஆகிய 5 வகையான கலவை எண்ணைகளுடன், 108 கிலோ கற்பூரம் கொண்டு வானவேடிக்கையுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஸ்ரீ நாராயண தீர்த்த மகாசுவாமிகள் தீபத்தை ஏற்றி வைத்தார்.
விழாவில் மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் மாதாஜி ரோகிணி, தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில் மனித உரிமைகள் கழக பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணன், சென்னை ஜெகத் ராம்ஜி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், பா.ஜ.க. விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் ராஜேஷ், திட்டக்குடி ராஜன், அரசு வக்கீல் சுந்தரராஜன், டாக்டர் ராஜா சிதம்பரம்,
வக்கீல் சீனிவாச மூர்த்தி, ஓய்வுபெற்ற இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நாள்முழுவதும் அன்னதானம் நடந்தது.






