என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் உட்பட சிலரிடமிருந்து நடப்பாண்டு ரூ.3 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநில அளவில் அதிக நிதி திரட்டிய நூலகங்களில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு முதலிடம் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3-ந் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்துக்கு மாநில அளவில் முதலிடம் பெற்றதற்கான கேடயத்தையும், பெரம்பலூர் மாவட்ட மைய நூலகருக்கும் 2022-ம் ஆண்டுக்கு நல் நூல்கர் விருதான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதையும் வழங்கி பாராட்டினார்.

    • சிறப்பு குறைதீர் முகாம்களில் 57 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று நடந்தன. இதில் பெரம்பலூர் தாலுகாவில் எளம்பலூரிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் தொண்டமாந்துறையிலும் (கிழக்கு), குன்னம் தாலுகாவில் புதுவேட்டக்குடியிலும், ஆலத்தூர் தாலுகாவில் மேலமாத்தூரிலும் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்தன. முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 57 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • துங்கபுரம் மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • உதவி செயற்பொறியாளர் தகவல்

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட துங்கபுரம் பிரிவு அலுவலகம் செந்துறை ரோடு, துங்கபுரத்தில் உள்ள கதவு எண் 2/331 என்ற கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது துங்கபுரம் பிரிவு அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக செந்துறை ரோடு, துங்கபுரம் ஸ்ரீ கல்பனா கோவில் நிலத்தின் முன்புறம் அமைந்துள்ள கதவு எண் 2/66 பி என்ற கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு நாளை (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளது என்று குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்."

    • வாகன விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர்
    • டிரைவரை போலீசார் கைது செய்தனர்

    பெரம்பலூர்

    சென்னையை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது46). இவரும், இவரது மகள் யாமஸ்ரீ (9) ஆகியோரும் ஒரு காரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த காரை சென்னையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (50) ஓட்டி வந்தார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே டிப்பர் லாரி ஒன்று சமிக்ஞை செய்யாமல் திடீரென வலது புறத்திலிருந்து இடது புறத்துக்கு திரும்பிய போது அதை பின் தொடர்ந்து வந்த கார், லாரி மீது மோதியது. இதில் கார் ஓட்டுநர் சுந்தர்ராஜ், காரில் பயணம் செய்த பாக்கியராஜ், யாமஸ்ரீ ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த அருண் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
    • கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்

    தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வையார் விருது பெறுபவருக்கு 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்திற்கான காசோலை சான்று, சால்வை ஆகியவை வழங்கப்படும்.

    இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 16-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தையும், 04328-296209 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

    • காரை கிராமத்தில் கோயில் நிலம் மீட்க்கப்பட்டது
    • பேனர் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள வெங்கடாஜலதி கோயிலுக்கு சொந்தமான 90 சென்ட் நிலமும், ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ஒரு சென்ட் நிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரவிந்தன், தனி தாசில்தார் பிரகாசம் ஆகியோர் மேற்பார்வையில் விஏஓ, சர்வேயர் ஆகியோருடன் சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஒரு ஏக்கர் 90 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுவாதீனம் எடுக்கப்பட்டது. மேலும் அந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடமாகும், இந்த நிலத்தில் தனிநபர் எவரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, மீறி ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேனர் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    • ரேசன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது
    • 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில், கூட்டுறதுறை கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள், 2 கட்டுநர்கள் என மொத்தம் 58 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

    இதற்கான விண்ணப்பங்கள், கடந்த நவம்பர் 14-ம் தேதி வரை பெறப்பட்டது. தகுதியானோருக்கு நேர்மு கத்தேர்வு, பெரம்பலூர் துறையூர் சலையில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி (தமிழ் வழிக்கல்வி) வளாகத்தில் எதிர்வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மேற்கூறிய பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பாக வரிசை எண்.14-ன் இதர வழிகாட்டு நெறிமுறைகள் வரிசை எண்.26-ல் கீழ்கண்ட திருத்தங்கள் வெளியிடப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைக் கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம் , தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    மேற்படி, தகவலை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களது அறிவுறுத்தலின் அடிப்ப டையில் பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துக்கொள்கிறார்.

    • கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து விரைவில் சாலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
    • வயல்களுக்கு செல்லும் வகையில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூரில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டிலான ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டுமான பணிகளையும், கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பணிகளையும், கொளத்துாரில் பகுதிநேர நியாயவிலைக் கடையினையும், புதுக்குறிச்சியில் முழுநேர நியாயவிலைக்க டையினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

    குன்னம் சட்டமன்றத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து வயல்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைத்துதர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கைகள் எதற்கும் கடந்தகால அரசு செவிசாய்க்க வில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    அரசுப்பேருந்துகளில் கட்டண உயர்வு என்ற பேச்சுக்க இடமில்லை. டீசல் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சூழல்கள் இருக்கும்போதும், மக்களின் மீது அந்த சுமையை வைக்காமல், அரசே அந்த சுமையினை ஏற்றுக்கொள்ளும், பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது மக்களின் நலன் காக்கும் அரசு, மக்களுக்கான அரசு எனவே, அரசுப்பேருந்துகளின் கட்டணம் உயர்வு என்ற பொய்யான செய்தியினை யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • வேப்பூர் யூனியன் வட்டத்திற்குட்பட்ட

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    புதுவேட்டக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் தலைவர் செல்வி தர்மலிங்கம், துணை தலைவர் ராஜ்குமார், ஊராட்சி செயலாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஒகளூர் ஊராட்சியில் மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு, துணைத் தலைவர் அண்ணாதுரை உட்பட பலர்கலந்து கொண்டனர்.

    அகரம்சீகூர் ஊராட்சியில் தலைவர் முத்தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் இந்துமதி தர்மராஜ் , ஊராட்சி செயலர் சுமதி செல்வம் ஆகியோர் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது . கீழப்புலியூர் ஊராட்சியில் தலைவர் சாந்தி செல்வராஜ், துணைத்தலைவர் ரேவதி சரவணன், ஊராட்சி செயலர் பழனிவேல் தலைமையிலும், திருமாந்துறை ஊராட்சி மன்ற தலைவர் வேளாங்கண்ணி , துணைத் தலைவர் சக்திவேல், ஊராட்சி செயலர் முருகதாஸ் தலைமையிலும் வடக்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் கணேசன், ஊராட்சி செயலர் மல்லிகா ஆகியோர் முன்னிலையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது .

    இதேபோல் கீழப்பெரம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ், துணைத்தலைவர் செல்வராணி, ஊராட்சி செயலர் சட்டநாதன் தலைமையிலும், வயலப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் உமா பரமசிவம், துணைத்தலைவர் செந்தில் , ஊராட்சி செயலர் சீனிவாசன் தலைமையிலும்

    துங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி அழகுதுரை, துணைத்தலைவர் பார்வதி, ஊராட்சி செயலர் ரமேஷ் தலைமையிலும், கொளப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் அன்பரசு, ஊராட்சி செயலர் ராஜேந்திரன் தலைமையிலும்,

    அத்தியூர் ஊராட்சியில் தலைவர் பாலசுந்தரம், கிளர்க் முருகதாஸ் முன்னிலையில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    பெண்ணகோணம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஊராட்சி செயலர் சுதா தலைமையிலும், பெருமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஊராட்சி செயலர் சுகந்திரா தலைமையிலும் நடைபெற்றது.

    • அம்பேத்கர் சிலை அமைக்க விசிக கோரிக்கை மனு அளித்தனர்
    • வேப்பூர் யூனியன் அலுவலகம் முன்பு கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தொல். திருமாவளவன் ஆணைக்கிணங்க ஒன்றிய அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கவும். ஒன்றிய அலுவலகம் முன்பு அம்பேத்கர் முழு உருவ சிலையை அமைத்திடவும். வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளையிடம், கோரிக்கை மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றிய செயலாளர் வரதராசன் வழங்கினார்.

    • குரும்பலூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே குரும்பலூரில் பேரூர் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பேரூர் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அவைத்தலைவர் புஷ்பராஜ், முன்னாள் செயலாளர் செல்வராஜ். பழனிமுருகேசன், துணை செயலாளர் தமிழ்செல்வி, ரெங்கநாயகி, பொருளாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜாராம், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், நகர செயலாளர் ராஜபூபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    சிறப்பு விருந்தினராக கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாசலம் கலந்துகொண்டு தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்றவை கண்டித்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக துணை செயலாளர் ராமையா வரவேற்றார். முடிவில் மாவட்ட பிரதிநிதி குமரேசன் நன்றி கூறினார்.

    • மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மன்ற விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 12-ந்தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளையோர் மன்றத்திற்கு மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மன்ற விருது வழங்கப்பட உள்ளது.

    இளையோர் மன்றங்களின் மூலமாக குடும்ப நலம் மற்றும் நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு, கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இளையோர்களுக்கு திறன்வளர்ச்சி பயிற்சிகள் அளித்தல், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுகாதார விழிப்புணர்வு பணிகளை செய்து வரும் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விருது பெற தகுதியானவை. மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த 1.4.2021 முதல் 31.3.2022-ந் தேதிக்குள் தங்களது பகுதிகளில் சேவை செய்தமைக்கான புகைப்பட ஆதாரங்கள், பாராட்டு சான்றிதழ்கள், அழைப்பிதழ்கள், பத்திரிகை செய்திகள் மற்றும் பயனாளிகள் பெயர் பட்டியல் மட்டும் தகுதியுள்ளவையாக ஏற்றுக்கொள்ளப்படும். மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்துக்கு ரூ.25 ஆயிரம் காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். மாநில அளவில் முதல் 3 இடங்களை பெறும் இளைஞர், மகளிர் மன்றத்துக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளன. தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.3 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.1 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

    இதற்கான விண்ணப்பத்தை பெரம்பலூர், நான்கு சாலை, நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகிற 12-ந்தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296213 என்ற தொலைபேசி எண்ணையும், 7810982528, 9443707581 என்ற செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என நேரு யுவகேந்திரா பெரம்பலூர் மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

    ×