என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு
- ரேசன் கடை பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது
- 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில், கூட்டுறதுறை கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள், 2 கட்டுநர்கள் என மொத்தம் 58 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள், கடந்த நவம்பர் 14-ம் தேதி வரை பெறப்பட்டது. தகுதியானோருக்கு நேர்மு கத்தேர்வு, பெரம்பலூர் துறையூர் சலையில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி (தமிழ் வழிக்கல்வி) வளாகத்தில் எதிர்வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், மேற்கூறிய பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு தொடர்பாக வரிசை எண்.14-ன் இதர வழிகாட்டு நெறிமுறைகள் வரிசை எண்.26-ல் கீழ்கண்ட திருத்தங்கள் வெளியிடப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைக் கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம் , தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி, தகவலை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களது அறிவுறுத்தலின் அடிப்ப டையில் பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துக்கொள்கிறார்.






