துங்கபுரம் மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம்

துங்கபுரம் மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.உதவி செயற்பொறியாளர் தகவல்
துங்கபுரம் மின் பிரிவு அலுவலகம் இடமாற்றம்
Published on

பெரம்பலூர்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட துங்கபுரம் பிரிவு அலுவலகம் செந்துறை ரோடு, துங்கபுரத்தில் உள்ள கதவு எண் 2/331 என்ற கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது துங்கபுரம் பிரிவு அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக செந்துறை ரோடு, துங்கபுரம் ஸ்ரீ கல்பனா கோவில் நிலத்தின் முன்புறம் அமைந்துள்ள கதவு எண் 2/66 பி என்ற கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு நாளை (திங்கட்கிழமை) முதல் செயல்பட உள்ளது என்று குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்."

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com