search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர் மன்ற விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
    X

    இளைஞர் மன்ற விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

    • பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர் மன்ற விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று நேரு யுவகேந்திரா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது
    • மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம் காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருது பெற தகுதியான இளைஞர்கள் மன்றங்கள் விண்ணப்பிக்க நேருயுவகேந்திரா அழைப்பு விடுத்துள்ளது.

    இதுகுறித்து நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திராவுடன் இணைந்து மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளையோர் மன்றத்திற்கு "மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மன்ற விருது" வழங்கப்பட உள்ளது.

    இளையோர் மன்றங்களின் மூலமாக குடும்ப நலம் மற்றும் நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு. கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இளையோர்களுக்கு திறன்வளர்ச்சி பயிற்சிகள் அளித்தல், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுகாதார விழிப்புணர்வு பணிகளை செய்து வரும் இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விருது பெற தகுதி உள்ளவையாக கருதப்படும்.

    மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் சங்கங்களின் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 2021 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2022 மார்ச் 31-ந்தேதிக்குள் தங்கள் பகுதிகளில் சேவை செய்தமைக்கான போட்டோ ஆதராங்கள், பாராட்டு சான்றிதழ்கள், அழைப்பிதழ்கள், பத்திரிக்கை செய்திகள் மற்றும் பயனாளிகள் பெயர் பட்டியல் மட்டும் தகுதி உள்ளவையாக ஏற்றுக்கொள்ளப்படும்.

    மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்றமாக தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு ரூ.25 ஆயிரம் காசோலையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும். மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் இளைஞர், மகளிர் மன்றத்திற்கு முறையே முதலாவதாக ரூ.75 ஆயிரமும், இரண்டாவதாக ரூ.50 ஆயிரமும், மூன்றாவதாக ரூ.25 ஆயிரமும் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    தேசிய அளவில் முதல் பரிசாக ரூ.3 லட்சமும். இரண்டாம் பரிசாக ரூ. ஒரு லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் உள்ளது.

    இதற்தான விண்ணப்பத்தை பெரம்பலூர், நான்கு ரோடு, நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் நேரில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் வரும் 12-ந்தேதி மாலை 5 மணிக்குள் அளிக்கவேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேரி எண்: 04328 - 296213 மற்றும் 7810982528, 9443707581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×