என் மலர்
நீலகிரி
- கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
- பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
கொடநாடு கொலை, கொள்ள தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில், சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, பிஜின் குட்டி, ஆகிய 10 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தவிர, வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்பட 316 பேரிடம் மறு விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதரிடம் மனு தாக்கல் செய்தனர்.
அதில், இந்த வழக்கில் தொடர்புடைய விபத்தில் இறந்த கனகராஜ் மற்றும் சகோதரர் தனபால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து, 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏற்கனவே கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த போன்களை விசாரணைக்காக தங்களிடம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
அந்த செல்போன்கள் சி.பி.சி.ஐ.டி வசம் வந்ததும், போன்களில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்யும் வகையில், கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி, அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.
- சுமார் 35 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பனை மரங்கள் உள்ளன.
கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனையில் ஏராளமான உடலுக்கு பயன் அளிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது பனை மரம்.
ரசாயனம், உரம் போன்ற எந்த வேதிப்பொருளும் சேர்க்காமல் பயன் தரக்கூடிய பனை மரம் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் மென்மையானது என்பதால் தாய்ப்பாலுக்கு இணையான பானம் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு பனை மரத்தில் இருந்தும் நன்மை பயக்கக்கூடிய ஏராளமான உணவுப் பொருட்களும் உள்ளன. பனை மரத்தில் இருந்து கள், பதனீர், பனை வெல்லம், பனம் பழம், பனக்கிழங்கு, விசிறி, நுங்கு ஆகியவை கிடைக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 01.01.1987-ம் ஆண்டு முதல் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 35 ஆண்டு காலமாக கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
மேலும் கள் இயக்கம் சார்பில் கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி வழங்கப்படும் என்றும் பரிசு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் கள் இறக்குவதற்கான ஆதரவு குரல்கள் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி கள் இறக்க அனுமதி வழங்குவது குறித்து குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கள் இறக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு கள் இயக்க ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
'கள்' தமிழ் மண்ணின் அடையாளம். சங்க காலத்தில் அரசர்களும், புலவர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், ஆண்களும், பெண்களும் உடன் அமர்ந்து உண்ட உணவின் ஒரு பகுதி கள். அதியமான், அவ்வையார் ஆகியோரும் கள் குடித்ததற்கான சான்று புறநானூற்று பாடலில் உள்ளது. அதியமான் இறந்த பின்பு அவரது நடுக்கல்லுக்கு கள் படையல் வைத்து வழிபட்டுள்ளனர். இதன் மூலம் கள் உணவுப் பொருளாகவும், படையல் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
பாரி வள்ளல் பரம்பு மலை மீது புலவர்களுக்கு அதிக அளவில் கள் கொடுத்துள்ளார். அந்த கள் பரம்பு மலை பாறைகள் மீது வழிந்தோடியதாக கூறப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டப்படி கள் இறக்குவதும், பருகுவதும் உணவு தேடும் உரிமையாகும். 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இதில் 47-வது பிரிவு மது விலக்கு மற்றும் மது கொள்கையில் கள்ளுக்கு தடை விதிக்கக் கூடாது, அரு மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் 01.01.1987-ம் ஆண்டு கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரே கள் ஆதரவாளர்தான். அவர் எழுதிய புத்தகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட நோயிலிருந்து தப்பிக்க கள் பருகினேன். இதனால் அந்த நோயிலிருந்து மீண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி நாங்கள் போராடி வருகிறோம். கள் உணவின் ஒரு பகுதி. கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி தருவதாக கூறினோம். ஆனால் யாரும் எங்களிடம் விவாதம் செய்ய வரவில்லை.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு 50 கோடி பனை மரங்கள் இருந்ததாக ஆங்கிலேயர் காலத்து புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கள் தடை காரணமாக தற்போது பனை மரங்கள் எண்ணிக்கை 5 கோடியாக குறைந்து விட்டது. 45 கோடி பனை மரங்கள் செங்கல் சூளைக்கும் சுண்ணாம்பு காலவாய்க்கும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு விட்டது.
தென்னை மரத்தை 3 முதல் 4 ஆண்டுகளில் வளர்த்து விடலாம். ஆனால் பனை மரத்தை நினைத்த உடன் உருவாக்க முடியாது. பனை மரம் வளர 13 முதல் 14 ஆண்டுகள் ஆகும். கள்ளில் உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் உள்ளன. கள் தாய்ப்பாலுக்கு நிகரானது. தாய்ப்பாலில் உள்ள லோரிக் ஆக்சிட் கள்ளில் அதிக அளவில் உள்ளன.
கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால் 10 லட்சம் பனை தொழிலாளர்கள் குடும்பங்களும், 50 லட்சம் விவசாய குடும்பங்களும் பயன் அடைவார்கள். மேலும் 8 கோடி மக்களுக்கும் சத்தான இயற்கையான மென்பானம் கிடைக்கும். பனை மரத்தில் கள் இறக்குவதற்கு மின்சாரம் தேவையில்லை. சுற்றுச்சூழலும் பாதிக்காது. படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து பன்னாட்டு விமான நிலையங்கள், நட்சத்திர விடுதிகள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவாய் ஈட்டலாம்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பனை மரங்கள் உள்ளன. கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினாலே தமிழகம் தலை நிமிரும். முதன்மை மாநிலமாக மாறும்.
மேலும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் கள்ளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்கினால் 60 லட்சம் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்.
கள் இறக்குவதற்கான தடையை அரசு நீக்கினால் வரவேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மொத்தம் ரூ.96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
- கேத்தி பேரூராட்சியில் புனரமைக்கப்பட் வளம் மீட்பு பூங்காவை திறந்து வைத்தாா்.
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சோலூா் பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் சோலூா் மற்றும் கேத்தி பேரூராட்சி பகுதிகளில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலமாக 1.11 கோடி மதிப்பில் கெரடா கெங்குந்தை சாலை அமைத்தல், நீா்கம்பை மயானத்துக்கு நடைபாதைக்கான கல்வெட்டு அமைத்தல், பழங்குடியின தோடா் காலனியில் நடைபாதை அமைத்தல், முக்கட்டியில் சாலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கிவைத்தாா்.
சிறப்பு மேம்பாட்டுத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய நியாய விலைக் கடை, பொதுக் கழிப்பிடம், சாலை பலப்ப டுத்துதல், சாலையில் வடிகால் அமைத்தல், தடுப்புச் சுவா் அமைத்தல், நீா்த்தேக்க தொட்டி அமைத்தல் என மொத்தம் ரூ.96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
மேலும், கேத்தி பேரூராட்சியில் புனரமைக்கப்பட் வளம் மீட்பு பூங்காவை திறந்து வைத்தாா். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து மண்புழு உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் திட்டமும் இப்பூங்காவில் நடைமுறை படுத்தப்பட்டது. இதனை அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித்திட்டங்களும், சோலூா் பேரூராட்சியில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் குன்னூா் கோட்டாட்சியா் பூஷண குமாா், கேத்தி பேரூராட்சி செயல் இயக்குநா் நடராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
- காட்டு யானைகள் பலாப்பழங்களை ருசிப்பதற்காக, அந்த பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.
- யானைகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முடிவுகட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரவேணு,
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் ரோட்டில் குஞ்சப்பனை, கோழிக்கரை, சுண்டப்பட்டி ஆகிய கிராமங்கள் உண்டு. இவை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளன. இங்கு அதிக அளவில் பலாமரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. தற்போது அங்கு பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது.
எனவே காட்டு யானைகள் பலாப்பழங்களை ருசிப்பதற்காக, அந்த பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இவை அங்கு உள்ள பலாமரங்களில் முன்னங்காலை வைத்து, தும்பிக்கையால் பழங்களை பறித்து தின்று பசியாறி வருகின்றன.
அதிலும் குறிப்பாக கோழிக்கரை கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. அவை கிராமங்களில் புகுந்து அங்கும் இங்குமாக நடமாட யபடி உள்ளன.
குஞ்சப்பனை, கோழிக்கரை, சுண்டப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் பெரும்பாலும் காட்டு சாலைகளையே பயன்படுத்துகின்றனர். ஆனாலும் அங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் மாலை நேரம் முதல் தொடங்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள், வீட்டுக்கு வெளியே செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே குஞ்சப்பனை, கோழிக்கரை, சுண்டப்பட்டி ஆகிய கிராமங்களில் முகாமிட்டு தங்கி உள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும். அந்த பகுதியில் யானைகளின் அச்சுறுத்தலுக்கு நிரந்தர முடிவுகட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
- ஒற்றை காட்டு எருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அரவேணு,
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் வனப்பகுதிகள் உண்டு. எனவே அங்கு கரடி, காட்டு எருமை, சிறுத்தை, போன்ற வன விலங்குகள் உள்ளன.
அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி காம்பைக்கடையை சேர்ந்த மாணவர்கள் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது ஒற்றை காட்டு எருமை ஊருக்குள் புகுந்தது. இதனை தற்செயலாக பார்த்த மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இருந்தபோதிலும் அந்த காட்டு எருமை நள்ளிரவு வரை ஊருக்குள் முகாமிட்டு சுற்றிவந்து பயமுறுத்தியது. அதன்பிறகு காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது.
கோத்தகிரி காம்பைக்கடை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு எருமையால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வனத்துறையினர் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த ஒற்றை காட்டு எருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- முதற்கட்டத்தில் சுமார் 1,10,000 குடும்ப அட்டைகளுக்கு 200 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறும் வகையில் திட்டம்.
- ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்டோ மூலம் விளம்பரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை பெற மூன்று கட்டங்களாக முகாம் நடத்தப்படவேண்டும். முகாம் நடத்துவதற்கான பள்ளிக்கட்டடம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தேர்வு செய்து உடன் சமர்பிக்க வேண்டும்.
முதற்கட்டத்தில் சுமார் 1,10,000 குடும்ப அட்டைகளுக்கு 200 முகாம்களிலும், இரண்டாம் கட்டத்தில் சுமார் 1,10,000 குடும்ப அட்டைகளுக்கு 200 முகாம்களிலும் விண்ணப்பங்கள் பெறும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். திட்ட இயக்குநர் இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்டோ மூலம் விளம்பரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அச்சடித்து வரப்பெறும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் டோக்கன்களை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அனைத்து நியாய விலைக்கடை விற்பனையாளர்களிடம் அளித்து அதனை அவர்கள் வீடுகள் ேதாறும் சென்று வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் விண்ணப்பங்களில் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் குடும்ப அட்டை எண் குறிப்பிட்டு வழங்கி, முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
மேலும், 404 ரேஷன் கடைகள் மற்றும் 34 நடமாடும் ரேஷன் கடைகள் ஆகியவற்றின் விற்பனையாளர் விவரங்களை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அளிக்க வேண்டும்.
முகாம் நடைபெறும் இடங்களில் வரும் பயனாளர்கள் அமர்வதற்கான போதிய இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். முகாமின் போது பூர்த்தி செய்யப்படாத விண்ணப் பங்கள் பெறப்பட்டால் அதனை பூர்த்தி செய்து வழங்க உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிய தர்ஷினி, கலெக்டரின் நேரடி உதவியாளர் தனப்ரியா, திட்ட இயக்குநர்கள் உமாமகேஸ்வரி (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), பாலகணேஷ் (மகளிர் திட்டம்), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், கூடலூர்வருவாய் கோட்டாட்சியர் முகம்மது குதுர துல்லா, நகராட்சி ஆணையா ளர்கள் ஏகராஜ் (ஊட்டி), கூடலூர், நெல்லியாளம் (பொ) பிரான்சிஸ் சேவியர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கர பாணி, வட்டாட்சியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதற்கட்டமாக பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டன.
- இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்காக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.
குன்னூர்,
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக 75 வகைகளில் ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைக் காண உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் 6 லட்சம் சுற்றுலா பயணிகள், சிம்ஸ் பூங்காவுக்கு வந்து மரங்களையும், மலர்களையும் பார்த்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள இரண்டாவது சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.
நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சிபிலாமேரி தலைமையில், மலர் நாற்றுகளை பூங்கா ஊழியர்கள் நடவு செய்தனர். முதற்கட்டமாக பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டன. மேலும், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட சால்வியா பெக்கோனியா, பேன்சிடேலியா, டெல்பினியம் ஜெரோனியம் உட்பட 75 வகையான நாற்றுகள் நடவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்காக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.
- பைக்காரா அருவி அருகே உள்ள 2 பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன.
- பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி- கூடலூா் சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் அங்கு பலத்த காற்று வீசியது. இதில் பைக்காரா அருவி அருகே உள்ள 2 பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன.
இதையடுத்து நெடுஞ்சாலை மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல கூடலூா் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் உள்ள சூண்டி பகுதியில் சாலையோரம் நின்ற ஒரு பெரிய மரம் ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் ஓவேலி-கூடலூா் இடையே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
கூடலூர் மண்வயல் பகுதியிலும் ரோட்டோரம் நின்ற பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அந்த சாலை துண்டிக்கப்பட்டது. எனவே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் மரத்தை அறுத்து அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.
- போக்குவரத்து பாதிப்பால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.
ஊட்டி,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பஸ்சில் சுரேஷ் என்பவர் டிரைவராகவும், மனோகரன் என்பவா் நடத்துநராக பணியில் இருந்தனர்.
ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை மணிகண்டன் என்பவா் ஓட்டி வந்தார்.
குன்னூா்-பா்லியாறு அருகே பஸ் சென்றபோது, டிப்பா் லாரியும், அரசு பஸ்சும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் யாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டதால், அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா், வாகனங்களை அப்புற ப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.
இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் சுமாா் 1 மணி நேரம் கழித்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் குறித்து குன்னூா் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
- மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
- சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் வந்தபடி உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை சீசன் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கி யுள்ளது.
இதனால், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது.கடந்த சில நாட்களாக சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
இதனால் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு நிலவக்கூடிய சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் வந்தபடி உள்ளனர்.
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
காலை முதல் மிதமான சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன், குடைகளை பிடித்தபடியும், மழையில் நனைந்தவாறும் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள புல்தரையில் அமர்ந்தும், ஆடிபாடியும், விளையாடியும் குடு ம்பத்துடன் விடுமுறையை கொண்டாடினர்.
- கடந்த ஒரு ஆண்டு காலத்தில் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
- கூட்டத்தில் 200-க்கும் அதிகமான தேசிய, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஊட்டி:
ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆண்டுதோறும் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பகுதிகளில் இந்த கூட்டமானது நடத்தப்பட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டம் ஊட்டியில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நேற்று கோவை வந்தார். நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
பின்னர் அவர் கார் மூலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சென்றார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமை தாங்கினார்.
இன்று தொடங்கிய கூட்டமானது ஒரு வார காலத்திற்கு நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், தமிழகத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள், அமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடந்த ஒரு ஆண்டு காலத்தில் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஒரு வருட காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செய்த சாதனைகள், எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்தும் நிர்வாகிகள் விவாதித்தனர்.
மேலும் இதில், அடுத்த ஒரு வருடத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்படி செயல்பட வேண்டும் மற்றும் ஒராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்தும் ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளுக்கு விளக்கமாக எடுத்து கூறினர்.
இதுதவிர அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் வருவதாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு தொடங்க உள்ளதாலும் அதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், புதிய உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, தினசரி சகாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே நேரடி தொடர்பை வலுப்படுத்துதல், அதிகளவில் பயிற்சி முகாம்களை நடத்துதல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இன்று நடந்த கூட்டத்தில் 200-க்கும் அதிகமான தேசிய, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெறுவதையொட்டி, கூட்டம் நடக்கும் பள்ளியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊட்டியில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்க அதன் தேசிய தலைவர் மோகன் பகவத்துடன், முக்கிய தலைவர்களும் வந்திருப்பதால் அவர்கள் தங்கியுள்ள பள்ளிக்கு 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
- ஏராளமான விவசாயிகள் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளை அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றனர்.
- புருக்கோலி தற்போது ரூ.100 முதல் 130 வரை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, டர்னீப், பீன்ஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
இதுதவிர ஏராளமான விவசாயிகள் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளை அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு பயிரிடப்படும் சைனீஷ் வகை காய்கறிகள், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சைனீஷ் வகை காய்கறிகளுக்கு எப்போதும் சீரான விலை கிடைத்து வருகிறது.
இதனால் அவற்றை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரியில் உற்பத்தியாகும் புருக்கோலிக்கு கடந்த சில வாரஙகளுக்கு முன்புவரை, ஒரு கிலோ ரூ.80 முதல் 100 வரை கொள்முதல்விலை கிடைத்து வந்தது. தற்போது ரூ.100 முதல் 130 வரை கொள்முதல் விலை அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.






