search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sims Park"

    • முதற்கட்டமாக பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டன.
    • இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்காக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

    குன்னூர்,

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக 75 வகைகளில் ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைக் காண உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.

    கடந்த ஆண்டு மட்டும் 6 லட்சம் சுற்றுலா பயணிகள், சிம்ஸ் பூங்காவுக்கு வந்து மரங்களையும், மலர்களையும் பார்த்து சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள இரண்டாவது சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

    நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சிபிலாமேரி தலைமையில், மலர் நாற்றுகளை பூங்கா ஊழியர்கள் நடவு செய்தனர். முதற்கட்டமாக பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டன. மேலும், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட சால்வியா பெக்கோனியா, பேன்சிடேலியா, டெல்பினியம் ஜெரோனியம் உட்பட 75 வகையான நாற்றுகள் நடவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்காக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

    வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிம்ஸ் பூங்காவில் படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 6 சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டிக்கு அடுத்தபடியாக குன்னூர் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் ஊட்டி, கூடலூருக்கு செல்ல குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை பிரதானமாக இருக்கிறது.

    இங்கு சிம்ஸ் பூங்கா முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த பூங்கா காப்புக்காடு அருகில் உள்ளதால், வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கிறது. குறிப்பாக காட்டெருமைகள் அடிக்கடி புகுந்து, மலர் நாற்றுகளை மிதித்து நாசம் செய்கின்றன. மேலும் சுற்றுலா பயணிகளையும் தாக்குகின்றன. எனவே பூங்காவுக்குள் இரவு நேரத்தில் வனவிலங்குகள் புகுவதை தடுக்க சோலார் மின்விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலவில் படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 6 சோலார் மின்விளக்குகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 
    ×