என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A buffalo"

    • உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.
    • ஒற்றை காட்டு எருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் வனப்பகுதிகள் உண்டு. எனவே அங்கு கரடி, காட்டு எருமை, சிறுத்தை, போன்ற வன விலங்குகள் உள்ளன.

    அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி காம்பைக்கடையை சேர்ந்த மாணவர்கள் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது ஒற்றை காட்டு எருமை ஊருக்குள் புகுந்தது. இதனை தற்செயலாக பார்த்த மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இருந்தபோதிலும் அந்த காட்டு எருமை நள்ளிரவு வரை ஊருக்குள் முகாமிட்டு சுற்றிவந்து பயமுறுத்தியது. அதன்பிறகு காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது.

    கோத்தகிரி காம்பைக்கடை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு எருமையால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வனத்துறையினர் இந்த விஷயத்தில் தலையிட்டு அந்த ஒற்றை காட்டு எருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×