என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நேற்று மதியம்வெயிலின் தாக்கம் குறைந்து திடீரென கனமழை பெய்தது.
    • சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது.

    ஊட்டி,

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் அங்கு நேற்று மதியம்வெயிலின் தாக்கம் குறைந்து திடீரென கனமழை பெய்தது. அது சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது.

    இதனால் ஊட்டி, சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டியில் திடீரனெ பெய்த கனமழையால் அங்கு உள்ள விவசாயிகள், தோட்டத் தொழிலாளா்கள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்தனா்.

    • 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • முதல், 3வது இடம்பிடித்த கீர்த்திகா, விஷ்ணுவர்தினிக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கல்வித்துறை சார்பில் மண்டல அளவில் பெண்களுக்கான தடகளப் போட்டிகள், ஊட்டி கார்டன் சாலையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதன் ஒருபகுதியாக வட்டெறிதல் போட்டியில் நஞ்சநாடு, கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி கீர்த்திகா மண்டல் அளவில் முதலிடத்தையும், விஷ்ணுவர்தினி 3வது இடமும் பெற்றனர். குண்டு எறிதல் போட்டியில் கீர்த்திகா மீண்டும் முதலி டம் பிடித்தார். தடகள போட்டிகளில் முதல், 3வது இடம் பிடித்த கீர்த்திகா, விஷ்ணுவர்தினி ஆகியோருக்கு பரிசு, சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா கனகராஜ், பள்ளி முதல்வர் ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனையட்டி கோவிலில் நாகராஜருக்கு சிறப்பு அலங்காரம்
    • டானிங்டன் கருமாரியம்மன் கோவிலிலும் நாக பஞ்சமி பூஜை நடைபெற்றது

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ் அனையட்டி கிராமத்தில் உள்ள நாகராஜர் கோவிலில் ஆடிமாத நாக பஞ்சமியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.

    இந்த நாளில் நாக தேவதைகள், கருடாழ்வாரை வழிபட்டால் அனைத்து விதமான சர்ப்ப தோஷம், பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆடிமாத நாக பஞ்சமியை முன்னிட்டு காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நாகராஜருக்கு அபிஷேக பூஜை, மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை அலங்கார பூஜை நடந்தது.

    மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனையட்டி கோவிலில் நாகராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போல கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலிலும் நாக பஞ்சமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்

    • நகராட்சி மன்ற துணை தலைவர் பா.மு.வாசிம்ராஜா பார்வையிட்டார்
    • குடிநீர்தேக்கதொட்டி தூர்வாரப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அரவேணு,

    குன்னூர் நகராட்சி வண்ணராப்பேட்டை ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள குடிநீர்தேக்கதொட்டி தூர்வாரப்பட்டு, அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

    இதனை மாநில தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், நகராட்சி மன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம்ராஜா பார்வையிட்டார். அப்போது அவருடன்அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் சாந்தா சந்திரன், மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் சிக்கந்தர் மற்றும் நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    • பகல் நேரங்களில் அங்கு உள்ள பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்து வருகிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே நொண்டி மேடு பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒரு சிறுத்தை நடமாடி வருகிறது. அது பகல் நேரங்களில் அங்கு உள்ள பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்து வருகிறது.

    குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வருவது கிராம மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர்.

    ஊட்டி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சிறுத்தை நடமாட்டம் தொடரும் பட்சத்தில் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    • அரசு, தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் நூலகர்களுக்கு விருது வழங்கப்பட்டது
    • பார்மசி கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் வாழ்த்து கூறினார்.

    ஊட்டி,

    சென்னை நூலகர் சங்கம் சார்பில் நூலக தந்தை எஸ்.ஆர். அரங்கநாதன் 126வது பிறந்தநாள் விழாநடைபெற்றது. இதில் நூலக உறுப்பினர்கள், புரவலர் சேர்க்கை, வாசகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில், 50-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளியில் வேலை பார்க்கும் நூலகர்களுக்கு சிறந்த நூலகர் விருது வழங்கப்பட்டது.

    இதன்ஒருபகுதியாக நீலகிரிமாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி நூலகர் சைலேந்திரகுமார், சிறந்த இளம் நூலகர் விருது பெற்று உள்ளார். அவருக்கு ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால், துணைமுதல்வர் கே.பி.அருண், முதன்மை அலுவலர் பசவன்னா மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    • சுற்றுலா அமைச்சர் நேரில் ஆய்வு
    • படகு இல்லத்தை சுற்றிலும் தொங்கு பாலம், ஜிப் சைக்கிளிங், பங்கீ ஜம்பிங், ரோலா் கோஸ்டா்போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன

    ஊட்டி, 

    ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக சுற்றுலா அமைச்சா் ராமசந்திரன் நேரடியாக ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலாத் தலமாக விளங்குவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே இங்குள்ள சுற்றுலாத் தலங்களை பயணிகள் மேலும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு வளா்ச்சிப் பணிகளை மேம்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    இதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில், பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடமாக படகு இல்லம் உள்ளது. எனவே அங்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் பல்வேறு பொழுதுபோக்கு சாகச சுற்றுலாவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக தற்போது படகு இல்லத்தை சுற்றி உள்ள பகுதியில் மாபெரும் ஊஞ்சல், தொங்கு பாலம், ஜிப் சைக்கிளிங், பங்கீ ஜம்பிங், ரோலா் கோஸ்டா், குடில்கள், மர வீடு, வாகன நிறுத்தம் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் குணேஸ்வரன், உதவி செயற்பொறியாளா் குணசேகரன், ஊட்டி படகு இல்ல மேலாளா் சாம்சன் கனகராஜ், உதவி சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ் உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல அச்சப்பட்டு வருகின்றனா்.
    • யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவா்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பகல் நேரத்திலும் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது.

    அது குடியிருப்புகளை சுற்றி வருவதுடன் அங்கு உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அங்கு உள்ள பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல அச்சப்பட்டு வருகின்றனா்.

    அந்த யானையை வனத்துறை ஊழியர்கள் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுகின்றனர். ஆனாலும் அது மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கே வந்துவிடுகிறது. எனவே அந்த யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாக ராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

    • இருசக்கர வாகனங்கள், பஸ்கள், அவசர ஊர்திகள் ஆகியவை தட்டுத்தடுமாறி செல்ல வேண்டி இருந்தது.
    • சீரமைப்பு பணிகள் நடந்து வருவது பொது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி பிரதான சாலை பிரிவில் இருந்து தும்பூர் வரை செல்லும் வகையில் ரோடு உள்ளது. இந்த சாலையின் பெரும்பாலான இடங்களில் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பஸ்கள், அவசர ஊர்திகள் ஆகியவை தட்டுத்தடுமாறி செல்ல வேண்டி இருந்தது.

    தும்பூர் பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பான செய்தி மாலைமலர் பத்திரிகையிலும் வெளியானது.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி பிரதான சாலையின் பிரிவில் இருந்து தும்பூர் வரையிலான போக்குவரத்து ரோட்டில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இது அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வருவாய் துறை அதிகாரிகள் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு உள்ள கோவில்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள் மற்றும் நெகிழி தட்டுகள் பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இருந்தபோதிலும் நீலகிரியில் ஒருசில வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக வருவாய்த்துறைக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் ஊட்டி ஆர்.டி.ஓ., துரைசாமி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு உள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த கடைக்கு அதிகாரிகள் உடனடியாக சீல் வைத்தனர். ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது, பிளாஸ்டிக் 'பேக்கிங்' உள்ளிட்ட பயன்பாடுகளும் தடை விதிக்கப்பட்டு உள்ளன. எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கோத்தகிரி புனித லூக்கா ஆலயத்தில் அமைதி பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
    • சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    மணிப்பூரில் வன்முறை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து வருகிறது. எனவே அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டி பேரணி நடத்துவது என்று கிறிஸ்தவ அமைப்புகள் முடிவு செய்தன. அதன்படி கோத்தகிரி புனித லூக்கா ஆலயத்தில் அமைதி பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    முன்னதாக கிறிஸ்துவ அமைப்புகளின் குருமார்கள் மற்றும் ஆயர்கள் முன்னிலையில் கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் கோத்தகிரி பகுதியில் உள்ள திருச்சபை பாதிரியார்கள், சபை உறுப்பினர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

    அதன்பிறகு மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும், அங்கு நடக்கும் வன்முறை தாக்குதலில் இருந்து பெண்கள், பழங்குடி மக்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி, ஜெப பிரார்த்தனைகளுடன் அமைதி பேரணி நடத்தப்பட்டது.

    இந்த ஊர்வலத்தில் கோத்தகிரி அனைத்து திருச்சபை ஐக்கியம் குருமார்கள் பிரபு சந்திரமோகன், சற்குணம் சிகாமணி, அமிர்தராஜ், டேணியல் மணி,மோசஸ், ரவீந்திரன், சிஎஸ்ஐ சபைகளின் கமிட்டி மற்றும் ஆர்.சி சபைகள் மற்றும் பெந்தே கோஸ்தே சபைகளின் அங்கத்தினர்கள் உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×