என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து கோத்தகிரியில் கிறிஸ்தவர்கள் அமைதி பேரணி
- கோத்தகிரி புனித லூக்கா ஆலயத்தில் அமைதி பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
- சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
மணிப்பூரில் வன்முறை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து வருகிறது. எனவே அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டி பேரணி நடத்துவது என்று கிறிஸ்தவ அமைப்புகள் முடிவு செய்தன. அதன்படி கோத்தகிரி புனித லூக்கா ஆலயத்தில் அமைதி பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
முன்னதாக கிறிஸ்துவ அமைப்புகளின் குருமார்கள் மற்றும் ஆயர்கள் முன்னிலையில் கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் கோத்தகிரி பகுதியில் உள்ள திருச்சபை பாதிரியார்கள், சபை உறுப்பினர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
அதன்பிறகு மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும், அங்கு நடக்கும் வன்முறை தாக்குதலில் இருந்து பெண்கள், பழங்குடி மக்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி, ஜெப பிரார்த்தனைகளுடன் அமைதி பேரணி நடத்தப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் கோத்தகிரி அனைத்து திருச்சபை ஐக்கியம் குருமார்கள் பிரபு சந்திரமோகன், சற்குணம் சிகாமணி, அமிர்தராஜ், டேணியல் மணி,மோசஸ், ரவீந்திரன், சிஎஸ்ஐ சபைகளின் கமிட்டி மற்றும் ஆர்.சி சபைகள் மற்றும் பெந்தே கோஸ்தே சபைகளின் அங்கத்தினர்கள் உள்பட சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






