என் மலர்
நீலகிரி
- அமைச்சர் ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.
- அமைச்சர் ராமச்சந்திரன் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஏற்கனவே 63 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளிகளுடன் சேர்த்து மொத்தம் 290 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் தொடக்க விழா இன்று காலை குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெட்டட்டி சுங்கம் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
குழந்தைகளுக்கும் அவர் உணவு ஊட்டி விட்டார். இதனால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியுடன் காலை உணவை சாப்பிட்டனர்.
இதுபற்றி அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி காலை உணவுதிட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட ஜெகதளா பேரூராட்சி பெட்டட்டி சுங்கம் அரசு பள்ளியில் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கூடலூர் வட்டத்தில் உள்ள 187 ஊராட்சி பள்ளிகளிலும், 80 பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளிலும், 23 நகரசபைக்கு உட்பட்ட பள்ளிகளிலும் என மொத்தம் 290 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காட்டுக்குள் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.
- வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. அங்கு கரடி, சிறுத்தை, மான் உள்பட பல்வேறு விலங்குள் வாழ்கின்றன.
நீலகிரியில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. எனவே காட்டில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன.
எனவே காட்டுக்குள் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அப்போது அவை குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று அங்கு உள்ள விளை நிலங்களை நாசப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றன.
இந்த நிலையில்கூடலூா் வனச்சரகத்தில் குடிநீா் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்காக 2022-23ம் ஆண்டு நபாா்டு திட்டத்தின் கீழ், வன விலங்குகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தடுப்பணைகள் மற்றும் கசிவுநீா் குட்டைகள் ஆகியவற்றை அமைக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் யானை, புலி போன்ற வன விலங்குகளின் நீா்த்தேவைகளை பூா்த்தி செய்ய முடியும். மேலும் காட்டு விலங்குள் ஊருக்குள் வருவதும் கட்டுப்படுத்தபடும்என்று வனத்துறையினா் தெரிவித்து உள்ளனா்.
- 8 பகுதிகளில் உள்ள 35 ரெயில்களை ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
- விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
ஊட்டி,
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணிக்க அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இது மேட்டுப்பாளையம்-குன்னுாா் இடையே, 'மீட்டா் கேஜ்' பாதையில் 15 கி.மீ. வேகத்துக்கும் குறைவாக 'எக்ஸ் கிளாஸ்' இன்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
மலை ரெயிலில் பயணிப்போா் இயற்கை காட்சிகளை கண்குளிர ரசித்து செல்ல முடியும். இது டீசல், பா்னஸ் ஆயில் எரிபொருட்கள் உதவியுடன் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 8 பகுதிகளில் உள்ள 35 ரெயில்களை ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன்ஒருபதியாக ஊட்டி - மேட்டுப்பாளையம், டாா்ஜ்லிங் -இமாச்சல பிரதேசம் உள்பட 8 பாரம்பரிய ரெயில்களை, பசுமை ரெயில் திட்டத்தின் கீழ் இயக்குவது என்று மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
அதன்படி நீலகிரி மலைப்பாதையில் ரூ.80 கோடி மதிப்பில் ஹைட்ரஜனில் இயங்கும் இன்ஜினை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதற்கான பணிகள் விரைவில் முடிந்து, மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீலகிரி மலை ரெயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள நெடுகுளா, கெனவக்கரை, குஞ்சுப்பானை ஆகிய 3 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ரூ.2.71 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை, தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அப்போது கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார், கோத்தகிரி ஒன்றியம் நெல்லை கண்ணன், கீழ்கோத்தகிரி ஒன்றியம் காவிநோரை பீமன், செயற்குழு உறுப்பினர் கே.எம். ராஜு, ஆர்.டி.ஓ பூஷணகுமார், தாசில்தார் கோமதி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
- சரிபார்த்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக, புதிய செயலி உருவாக்கம்.
- நிகழ்ச்சியில் 69 பேர் கலந்து கொண்டனர்.
அரவேணு,
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வருகிற செப்டம்பர் முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரேஷன்கார்டுதாரர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அப்படி சரிபார்த்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக, தமிழக அரசின் முகமை இயக்ககம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற பெயரில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது.அந்த செயலியை எப்படி செயல்படுத்துவது? என்பது தொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி வட்டார தாசில்தார் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை எப்படி சரிபார்த்து செயலியில் பதிவேற்றம் செய்வது என்பது குறித்த பயிற்சி முகாம், குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தலைமையில் நடந்தது.
முகாமில் அலுவலர்கள் பேசும்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட செயலியில் ஊழியர்கள் செல்போன் எண், கடவுச்சொல்லை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். கணினியில் புதிய படிவம், சமர்ப்பிக்கப்பட்ட படிவம் என 2 பிரிவுகள் இருக்கும்.
அங்கு புதிய படிவத்தை தேர்வு செய்து, அதில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, ஆதார் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து சமர்ப் பிக்க வேண்டும். சமர்ப்பிக் கப்பட்ட விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியும் வகையில் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
எனவே ஊழியர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து செயலியில் பதிவேற்ற வேண்டும் என்று கூறினர்.
இதனை தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத ்தொகை திட்ட செயலியை எப்படி பதிவிறக்கம் செய்வது, எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோத்தகிரி தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் 11 ஊராட்சி செயலர்கள் உள்பட மொத்தம் 69 பேர் கலந்து கொண்டனர்.
- சாலையோரங்களில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
- சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் செர்ரி பூ பிளாசம் மலர்கள் தற்போது பூக்க தொடங்கி உள்ளன.
இது வசந்த காலத்தில் மலரும் ஒரு வகை பூக்கள் ஆகும். செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் அனைத்து இலைகளும் உதிர்ந்து, மரம் முற்றிலும் பூவாக காட்சி அளிக்கும்.
வெள்ளை மற்றும் பிங்க் நிறத்தில் இருக்கும் மலர்களை சக்குரா பூக்கள் என்று தமிழகத்தில் அழைக்கின்றனர்.
ஆனால் இது ஜப்பான் நாட்டின் தேசிய மலர் ஆகும். இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குளிர்காலத்தில் அதிகமாக பூத்து வருகிறது. இந்த பூக்கள் மருத்துவ குணம் உடையது.
சுமார் 30 அடி உயரம் வரை மரங்களில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை தேடி தேனீக்கள், சிட்டுக்குருவிகள், அணில்கள் போன்றவை வரும். அங்கு மலர்ந்து உள்ள பூக்களை தின்று பசியாறும்.
செர்ரி பூக்களில் இருந்து ஷாம்பு, சென்ட் போன்ற வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. அட்லாண்டாவில் ஆண்டு தோறும் செர்ரிப்பூவுக்காக திருவிழா ஒன்றே நடத்தப்படுகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக வனத்துறை ஊழியர்கள் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் சாலையோரம் செர்ரி மரக்கன்றுகளை நடவுசெய்து வளர்த்து வருகின்றனர். அவை தற்போது அழகாக மலர்ந்து ரம்மியமாய் காட்சி அளிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமின்றி செர்ரி மரங்களின் முன்பாக நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியம், கோடமலை-ஒசட்டி பகுதியில் முதலமைச்சர் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்தன. இதனை சுற்றுலாதுறை அமைச்சர்ராமசந்திரன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெ.பிரேம்குமார், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுனிதா நேரு, பர்லியார் ஊராட்சி தலைவர் சுசிலா, துணைதலைவர் தீனதயாளன், ஒன்றிய குழு உறுப்பினர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கா.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ட்ரோன் கேமரா மூலம் சேரம்பாடி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
- போலீசார் பல்வேறு இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டக் கழகம் பகுதியில் ஒரு சிறுத்தை பதுங்கி உள்ளது. இது கடந்த சில நாட்களாக அங்கு திரியும் ஆடுகள் மற்றும் நாய்களை அடித்து கொன்று வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறைக்கு புகாா் தெவித்தனா்.
புகாரின்பேரில் மாவட்ட வனஅலுவலா் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில், உதவி வனப்பாதுகாவலா் கருப்பையா மற்றும் ஊழியர்கள் சேரம்பாடிக்கு விரைந்து வந்து ஊருக்குள் பதுங்கி உள்ள சிறுத்தையை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக ட்ரோன் கேமரா மூலம் சேரம்பாடி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதுதவிர போலீசார் பல்வேறு இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
- கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
- வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்தனா்.
ஊட்டி,
குன்னூா் அருகே சேலாஸ் மற்றும் மேல்பாரதிநகா் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. அது குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்தது.
எனவே அந்த கரடியைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனா். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனா்.
இதனை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் கரடி நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டு வைத்து கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.இந்நிலையில் ஊருக்குள் பதுங்கி இருந்த கரடி ஒருவழியாக கூண்டில் சிக்கியது.
பின்னா் பிடிபட்ட கரடியை வனத்துறையினா் முதுமலை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா். வனத்துறை போலீசாருக்கு கடந்த 15 நாட்களாக போக்கு காட்டி வந்த கரடி பிடிபட்டதால், அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனா்.
- தற்போது தட்டப்பள்ளம், முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளன.
- தேயிலை தொழிலாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்து வருகின்றன.
அவை தற்போது தட்டப்பள்ளம், முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் புகுந்து விடுகிறது. சிலநேரங்களில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உலா வருகிறது.
இதனால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே தட்டப்பள்ளம் பகுதியில் தற்போது முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.
- ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா பார்வையிட்டார்.
ஊட்டி,
கூடலூர் அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குண்டூர் பகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.
இதனை ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா பார்வையிட்டார். பின்னர் ஸ்ரீமதுரை அடுத்த கொறவயல் பழங்குடியினர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின்கீழ் நடைபெற்று வரும் சாலை பணி மற்றும் வீடு கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கே. கங்காதரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3, 6 மாதங்களில் 60 லட்ச மதிப்பிலான 180 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர்.
- சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போன் மூலம் வலைவீசி வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீஸ் எஸ்.பி பிரபாகர் கலந்து கொண்டு போலீசார் மீட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படை த்தார்.
இதனை தொடர்ந்து போலீஸ் எஸ்.பி பிரபாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3, 6 மாதங்களில் 60 லட்ச மதிப்பிலான 180 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர். இதே போல் ஒரு கோடியே 23 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது அதன் ஒரு பகுதியாக இன்று 80 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து உள்ளோம்.
சைபர் கிரைம் குற்றவாளிகள் செல்போன் மூலம் வலைவீசி வருகின்றனர். அவர்கள் அதிக வட்டி தருவதாகவும், பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்ப தாகவும் ஆசைவார்த்தைகள் கூறி வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் யாரும் சைபர்கிரைம் குற்றவாளிகளிடம் ஏமாறவேண்டாம். சைபர் கிரைம் சார்ந்த கு்ற்றங்களில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






