என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடமலை-ஒசட்டி பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள்
சுற்றுலா அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியம், கோடமலை-ஒசட்டி பகுதியில் முதலமைச்சர் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்தன. இதனை சுற்றுலாதுறை அமைச்சர்ராமசந்திரன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெ.பிரேம்குமார், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுனிதா நேரு, பர்லியார் ஊராட்சி தலைவர் சுசிலா, துணைதலைவர் தீனதயாளன், ஒன்றிய குழு உறுப்பினர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கா.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






