ஸ்ரீமதுரை ஊராட்சியில் சாலைப்பணிகள்

ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா பார்வையிட்டார்.
ஸ்ரீமதுரை ஊராட்சியில் சாலைப்பணிகள்
Published on

 ஊட்டி,

கூடலூர் அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குண்டூர் பகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.

இதனை ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா பார்வையிட்டார். பின்னர் ஸ்ரீமதுரை அடுத்த கொறவயல் பழங்குடியினர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியின்கீழ் நடைபெற்று வரும் சாலை பணி மற்றும் வீடு கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அப்போது ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கே. கங்காதரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com