மாலைமலர் செய்தி எதிரொளி: கோத்தகிரி தும்பூர் சாலை சீரமைப்பு

இருசக்கர வாகனங்கள், பஸ்கள், அவசர ஊர்திகள் ஆகியவை தட்டுத்தடுமாறி செல்ல வேண்டி இருந்தது. சீரமைப்பு பணிகள் நடந்து வருவது பொது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாலைமலர் செய்தி எதிரொளி: கோத்தகிரி தும்பூர் சாலை சீரமைப்பு
Published on

அரவேணு,

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி பிரதான சாலை பிரிவில் இருந்து தும்பூர் வரை செல்லும் வகையில் ரோடு உள்ளது. இந்த சாலையின் பெரும்பாலான இடங்களில் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பஸ்கள், அவசர ஊர்திகள் ஆகியவை தட்டுத்தடுமாறி செல்ல வேண்டி இருந்தது.

தும்பூர் பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பான செய்தி மாலைமலர் பத்திரிகையிலும் வெளியானது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி பிரதான சாலையின் பிரிவில் இருந்து தும்பூர் வரையிலான போக்குவரத்து ரோட்டில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இது அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com