என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் பாடந்தொரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை
    X

    கூடலூர் பாடந்தொரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை

    • பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல அச்சப்பட்டு வருகின்றனா்.
    • யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவா்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பகல் நேரத்திலும் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது.

    அது குடியிருப்புகளை சுற்றி வருவதுடன் அங்கு உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அங்கு உள்ள பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல அச்சப்பட்டு வருகின்றனா்.

    அந்த யானையை வனத்துறை ஊழியர்கள் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டுகின்றனர். ஆனாலும் அது மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கே வந்துவிடுகிறது. எனவே அந்த யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×