என் மலர்
நீலகிரி
- 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது
- உரங்களின் சேமிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தகவல்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் அருணா பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வேளாண்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவை யான மரநாற்றுகள் குறித்து விவசாயிகள் கோரிக்கைக்கு இணங்க கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும்.
அங்கக வேளாண்மை மூலம் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீலகிரி கூட்டுறவு வணிக சங்கம் மூலம் உரங்களை சிறியளவில் சில்லரை விற்பனை மூலம் சிறு,குறு விவசாயிகளுக்கு 5 முதல் 10 கிலோ வரையிலான உரங்களை வழங்குமாறு கோரிய விவசாயிகளின் கோரிக்ைக குறித்து ஆய்வு செய்யப்படும்.
மேலும் என்.சி.எம்.எஸ் மூலம் உரங்களிடம் சேமிப்பிடம் அமைப்பதற் கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. உழவர் கடன் அட்டைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப் பட்டு வருகிறது.
விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்க லைத்துறை இணை இயக்கு நர் ஷிபிலாமேரி, இணை இயக்குநர் (மருத்துவபணி கள்) பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்தனர்
- காலாவதியான இறைச்சி பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்
அருவங்காடு,
குன்னூர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமை யிலான அதிகாரிகள் குன்னூரில் உள்ள பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, பெட்போர்டு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல், பாஸ்ட்புட் கடை, ஷவர்மா கடைகளில் ஆய்வு நடத்தினர்.
இதில் கலப்பட தேயிலை தூள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள், கெட்டுப் போன மீன், கோழி இறைச்சி, தடை செய்யபட்ட பாலிதீன் பைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதித்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். இச்சம்பவம் குன்னூர் மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது
- சிம்ஸ்பூங்காவில் தொடங்கிய ஊர்வலம் லாஸ் நீர்வீழ்ச்சியில் முடிந்தது
- விநாயகர் சிலை ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அலகு குத்தி பறவைக்காவடியாக வாகனத்தில் வந்தார்
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல்வேறு இடங்களில் இந்துமுன்னணி சார்பில் 108 விநாயகர் சிலைகள் கடந்த 18-ந்ம்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த நிலையில் விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் குன்னூரில் நேற்று நடைபெற்றது. சிம்ஸ்பூங்காவில் தொடங்கிய ஊர்வலம்பெட்போர்டு, மவுண்ட்ரோடு, பஸ்நிலையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாஸ் நீர்வீழ்ச்சியில் முடிந்தது. அங்கு 108 சிலைகளும் கரைக்கப்பட்டன.
முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அலகு குத்தி பறவைக்காவடியாக வாகனத்தில் வந்தது பொது மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குன்னூரில் விநாயகர்விசர்ஜன விழாவையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்
- மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைசெயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான வாஷிம்ராஜாவை சந்தித்தார்.
அருவங்காடு,
நீலகிரி மாவட்ட தி.மு.க மகளிர் அணி துணை அமைப்பாளராக பிரபாவதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் குன்னூர் நகரசெயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைசெயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைசெயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான வாஷிம்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா மற்றும் நகரமன்ற தலைவர் சீலாகேத்ரின், நகர அவைதலைவர் தாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
- ஊட்டியில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் ரெயில்வே பாலத்தின் கீழ் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கியது.
- ஊட்டியை போன்று மஞ்சூர், எமரால்டு பாலாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
நேற்று மதியம் முதல் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது.
மதியம் 12 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணியை தாண்டியும் நீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
ஊட்டிக்கு சுற்றுலா வந்தவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்களும் இந்த மழை காரணமாக கடும் அவதிப்பட்டனர்.
விவசாய நிலங்களிலும் மழை நீர் தேங்கியதால் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
ஊட்டியில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் ரெயில்வே பாலத்தின் கீழ் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கியது. இதன் காரணமாக அந்த வழியாக வந்த 2 கார்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தன.
கார்களை மீண்டும் இயக்க முடியாமல் தவித்தனர். அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் கார் உரிமையாளர்கள் காரை ஓரமாக தள்ளி சென்று நிறுத்தினர். சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது.
தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க ஆங்காங்கே இருந்த குடைகளின் கீழ் நின்றனர். நீண்ட நேரம் மழை பெய்ததால் தங்கும் விடுதிகளுக்கு தஞ்சம் அடைந்தனர்.
ஊட்டியை போன்று மஞ்சூர், எமரால்டு பாலாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
- கடந்த 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு
- ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோத்தகிரி,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 18-ந்தேதி முதல் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.
தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டது.
அப்போது இந்து முன்னணி சார்பில் 81 சிலைகளும், அனுமன்சேனா சார்பில் 32 சிலைகளும் கோத்தகிரியின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் உடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம் காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், கடைவீதி, ராம்சந்த் வழியாக உயிலட்டி நீர்வீழ்ச்சியை வந்தடைந்தது. பின்னர் அவை நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- குடியிருப்பு பகுதிகள் வனமாக மாற்றப்பட்டுள்ள தகவல் அச்சம் தருவதாக வேதனை
- நிலங்களை மறுஅளவீடு செய்து பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டுகோள்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட காந்தி நகா் மற்றும் பல்வேறு பகுதிகளில் 3 தலைமுறைக்கும் மேலாக வசிக்கும் மக்கள் பேரூராட்சிக்கு வீட்டு வரி செலுத்தி வருகின்றனா்.
இவ்வாறு பல ஆண்டுகளாக மக்கள் வசிக்குமிடங்கள் வனப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக பொதுமக்களிடம் வனத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
இந்நிலையில் காந்தி நகா் விவசாயிகள் சங்கத்தினா் பேரூராட்சி செயல் அலுவலா் ஹரிதாஸிடம் மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:- இப்பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருப்பதோடு முறைப்படி வரியும் செலுத்தி வருகிறோம். இப்பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில் குடியிருப்புப் பகுதிகள் வனமாக மாற்றப்பட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றப்பட்டுள்ள நிலங்களை மறுஅளவீடு செய்து பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.
- விவசாயிகள் விண்ணப்ப மனுவுடன் பட்டா, சிட்டா நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வனத்துறை அறிவுறுத்தல்
- தேயிலை விவசாயிகளுக்கு சில்வர் ஓக் மரங்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்க ஏற்பாடு
அருவங்காடு,
நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். அங்கு தேயிலைக்கு இடையே ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் தேயிலை விவசாயிகளுக்கு சில்வர் ஓக் மரங்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்கிறது. எனவே அவர்கள் தோட்டக்கலை மற்றும் வனத்துறை சார்பில் இலவசமாக வழங்கப்படும் சில்வர் ஓக் நாற்றுகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் குன்னூர் வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகளை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் சில்வர் ஓக் மரக்கன்றுகள் மற்றும் தனியார் பட்டாநிலங்களில் ஒரு ஏக்கருக்கு 100 நாற்றுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது.
விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்ப மனுவுடன் பட்டா, சிட்டா நகல்கள் மற்றும் பாஸ் போர்ட் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் முருகன் (செல்போன் எண்: 90471 43198), கோபாலகி ருஷ்ணன்: 94420 07872, ராஜ்குமார்: 94422 93969 மற்றும் வனக்காப்பாளர் ஞானசேகர்: 96299 80058 ஆகிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.
- காட்டெருமைகள் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
- 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமைகள், அருகேயுள்ள வனப்பகுதிக்குள் திரும்பி சென்றன.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
அவை உணவு மற்றும் தண்ணீர் தேடி, குடியிருப்பு பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. அப்படி உலா வரும் காட்டெருமைகள் சில நேரங்களில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகிறார்கள்.
குன்னூரில் இருந்து கரோலினா கிராமத்திற்கு ஒரு சாலை செல்கிறது. அந்த சாலையில் நேற்று மாலை வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது வனத்தை விட்டு வெளியேறி 3 காட்டெருமைகள் ஊருக்குள் வந்தன. சாலையின் நடுவே நடந்து சென்ற காட்டெருமைகள் திடீரென ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.
2 மணி நேரத்திற்கும் மேலாக காட்டெருமைகள் அங்கிருந்து நகராமல் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டன. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதியடைந்தனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சாலையில் நின்று சண்டையிட்ட காட்டெருமைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அவை தங்களுக்குள் ஆக்ரோஷமாக சண்டையிடுவதை நிறுத்தாமல் அங்கேயே நின்றன. மேலும் வனத்துறையினரின் வாகனத்தையும், அங்கு நின்றிருந்தவர்களையும் நோக்கி ஒரு காட்டெருமை ஓடி வந்து துரத்தியது.
இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஒடி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமைகள், அருகேயுள்ள வனப்பகுதிக்குள் திரும்பி சென்றன. அதன்பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து இயல்புநிலைக்கு வந்தது.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து கரோலினா கிராமத்துக்கு பஸ் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் நடந்தே சென்று வருகின்றனர். கரோலினா கிராமத்துக்கு மீண்டும் பஸ்களை இயக்குவதுடன், காட்டெருமைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி உள்ளுர் வாகனஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ரோஜா பூங்கா. இதனை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அரசு ரோஜா பூங்கா நுழைவாயில் பகுதியில் இன்டர்லாக் கற்களால் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது கற்கள் முழுவதும் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது.
எனவே பழுதடைந்த இடத்தை கடக்கும்போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படுகிறது. மேலும் சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி உள்ளுர் வாகனஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே ரோஜா பூங்கா நுழைவாயில் இன்டர்லாக் சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- முதுமலை வனப்பகுதிக்கு தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
- அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தரவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழகம், கேரளா, கர்நாடக எல்லைகளின் சந்திப்பில் முதுமலை காட்டுயிர் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்து உள்ளது.
இது நீலகிரி வனத்துறை சரகத்துக்கு உட்பட்ட பகுதி ஆகும். தமிழக சுற்றுலாத்துறையில் முதுமலை சரணாலயம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு காணப்படும் வித்தியாசமான உயிரினங்கள், வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் தரும்.
முதுமலை சரணாலயத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று தெப்பக்காடு யானைகள் முகாம். இது மாயாற்றின் கரையில் அமைந்து உள்ளது. முதுமலை தேசிய பூங்காவில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது, இது ஆசியாவில் மிகவும் பழமையான யானைகள் முகாம் ஆகும்.
கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு தற்போது 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு யானைகளுக்கு பயிற்சிகள் தரப்பட்டு வருகின்றன. மறுவாழ்வு மையமாகவும் செயல்படுகிறது. முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்குள் மரம் எடுத்து செல்லுதல் போன்ற வனப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இத்தனை சிறப்புகள் மிக்க முதுமலை வனப்பகுதிக்கு தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் இங்கு அவர்களுக்கான அடிப்படைவசதிகள் போதியஅளவில் இல்லை என சுற்றுலாபயணிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக போதிய கழிவறை வசதிகள் இல்லை. ஒருசில கழிப்பிடங்களும் பெரும்பாலான நேரங்களில் திறக்கபடாமல் உள்ளது . எனவே வனத்துறை உடனடியாக முதுமலை சரணாலயத்தில் அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தரவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் இந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
- மகளிர் மற்றும் மாணவிகளுக்காக இயக்கப்படும் இந்த பேருந்து முறையாக இயக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டத்தில் நகர பேருந்துகள் மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலான மகளிர் தமிழக அரசு சார்பாக இயக்கப்படும் இலவச நகர பேருந்துகளில் சென்று வருகின்றனர்.
ஆனால் குன்னூர் பகுதிகளில் 4 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பேருந்துகள் குன்னூர் மவுண்ட் பேஸன்ட் பிளாக் பிரிட்ஜ், சிம்ஸ்பார்க், பெட் போர்டு வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் இந்த பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அந்த வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும், அதற்கு பதிலாக சில பேருந்துகளை வேறு பகுதிக்கு இயக்கப்படுவதால் குறிப்பிட்ட நேரங்களில இந்த பகுதியில் மகளிர் பயணம் செய்ய முடிவதில்லை என்றும், ஒரே நேரத்தில் 3 பேருந்துகளும் வரிசையாக நிறுத்தப்பட்டும், ஒரே நேரத்தில் அனைத்தும் இயக்கப்படுவதால் நீண்ட நேரம் மகளிர் பேருந்துகளுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே மகளிர் மற்றும் மாணவிகளுக்காக இயக்கப்படும் இந்த பேருந்து முறையாக இயக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






