search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free saplings"

    • விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
    • ஒடுகத்தூர் வனத்துறை சார்பில் வழங்கப்படுகிறது

    அணைக்கட்டு:

    பசுமை தமிழகம் திட்டம் மூலம் ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்த ஆண்டுக்கான இலவச மரக்கன்றுகள் பெறுவதற்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதுகுறித்து வனச்சரக அலுவலர் இந்து வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது:-

    ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க நெல்லி, கொய்யா, மூங்கில், புளி, மாமரம், நாவல், நீர் மருது, புங்கன், செங்கருங்காலி, சவுக்கு, எலுமிச்சை, வேம்பு, இலுப்பை உள்ளிட்டவைகளில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் உள்ளது.

    இவை ஒரு ஏக்கருக்கு 200 முதல் 250 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே, விருப்பமுள்ளவர்கள் கம்ப்யூட்டர் பட்டா, ஆதார் அட்டை நகல், புகைபடம், வங்கி கணக்கு புத்தக நகல் போன்ற ஆவணங்களை ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து பதிவு செய்து கொள்ள கொண்டு தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை எடுத்து செல்லாலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் விண்ணப்ப மனுவுடன் பட்டா, சிட்டா நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வனத்துறை அறிவுறுத்தல்
    • தேயிலை விவசாயிகளுக்கு சில்வர் ஓக் மரங்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்க ஏற்பாடு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். அங்கு தேயிலைக்கு இடையே ஊடுபயிராக சில்வர் ஓக் மரங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் தேயிலை விவசாயிகளுக்கு சில்வர் ஓக் மரங்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்கிறது. எனவே அவர்கள் தோட்டக்கலை மற்றும் வனத்துறை சார்பில் இலவசமாக வழங்கப்படும் சில்வர் ஓக் நாற்றுகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் குன்னூர் வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகளை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் சில்வர் ஓக் மரக்கன்றுகள் மற்றும் தனியார் பட்டாநிலங்களில் ஒரு ஏக்கருக்கு 100 நாற்றுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது.

    விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்ப மனுவுடன் பட்டா, சிட்டா நகல்கள் மற்றும் பாஸ் போர்ட் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் முருகன் (செல்போன் எண்: 90471 43198), கோபாலகி ருஷ்ணன்: 94420 07872, ராஜ்குமார்: 94422 93969 மற்றும் வனக்காப்பாளர் ஞானசேகர்: 96299 80058 ஆகிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது.

    • பசுமைப் போா்வை திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
    • விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வெள்ளக்கோவில் வேளாண் விரிவாக்கம் மையம் தெரிவித்துள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் பசுமைப் போா்வை திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.

    தங்களுடைய சொந்த நிலங்களில் மரங்களை வளா்க்க விரும்பும் விவசாயிகள் செல்போனில் உழவன் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும், வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் அணுகியும் பதிவு செய்து கொள்ளலாம்.தற்போது, தேக்கு மரக்கன்றுகள் வந்துள்ளதால் தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வெள்ளக்கோவில் வேளாண் விரிவாக்கம் மையம் தெரிவித்துள்ளது. 

    • விவசாயிகள் பயனடையலாம் என இணை இயக்குனர் பேச்சு
    • 49 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியம் கும்மிடிகாம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலக முன்பு நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.கோடீஸ்வரன் தலைமை வகித்தார், அனைவரையும் துணைத் தலைவர் இந்திராணி கோவிந்தராஜ் வரவேற்றார், முகாமை வேளாண்மை துறை இணை இயக்குனர் பாலா தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பயிர் உரம், நுண்ணுயிர் கலவை, உளுந்து விதை, 350, தென்னங்கன்றுகளை வழங்கி பேசியதாவது:-

    தமிழக அரசு வேளாண்மை துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது விவசாயிகளுக்கு பசுமை காடு வளர்ப்பு திட்டங்கில் இலவசமாக வேங்கை, ஈட்டி மசோங்கி, ரோஸ்வுட், நாட்டு தேக்கு, காட்டு மரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை வழங்குகிறோம் பத்தாண்டுகள் வளர்ந்த பிறகு இதனை விற்று விவசாயிகள் பயனடையலாம் இதே போன்று மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு விவசாய பொருட்கள் மீது மதிப்பு கூட்டு வரி செய்து பொருட்களை விற்பனை செய்ய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

    விவசாயிகள் பண்ணை குட்டைகளை அமைத்து பயன்பெற வேண்டும், மேலும் பொறியியல் துறை சார்பில் மானியத்தில் சூரிய சக்தி இயங்கும் பம்பு செட்டுகள் வேளாண்இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆத்மா தலைவர் முருகேசன், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் மோகன்குமார், வேளாண் உதவி இயக்குனர் ராகினி, பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி பொறியா ளர்கள் மகேந்திரவர்மன், மீன் வளர்ச்சித்துறை கால்நடை துறை தோட்டக்கலை துறை, வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    இறுதியில் வேளாண்மை அலுவலர் ஜேயசுதா நன்றி கூறினர்.

    இதே போன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 இடங்களில் சிறப்பு முகாம் நடை பெற்றது.

    குமிள், வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    கம்பம், டிச.10-

    தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் மற்றும் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் 2022-23ம் ஆண்டுக்கான குமிள், வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே ஆதார் காடு, வங்கி கணக்கு புத்தகம், நிலத்தின் சிட்டா நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் விவசாயிகள் கம்பம் வட்டார வேளாண்மைதுறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை பெறலாம் என உதவி வட்டார வேளாண்ைம உதவி இயக்குனர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
    • விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் தற்போது, முதற்கட்டமாக தேக்கு, மகாகனி, செம்மரம், வேங்கை, ஈட்டி போன்ற மரக்கன்றுகள் 11,000 எண்கள் தனியார் நாற்றங்கால்களிலிருந்து பெறப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நாமக்கல் வட்டார அட்மா தலைவர் பழனிவேல் தலைமையில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பேபிகலா, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலையில் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. வேளாண்மை அலுவலர் ரசிகப்ரியா உடனிருந்தார். உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபிநாத், சதீஸ்குமார், திலீப்குமார், மற்றும் மாலதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இது தொடர்பாக நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் தற்போது, முதற்கட்டமாக தேக்கு, மகாகனி, செம்மரம், வேங்கை, ஈட்டி போன்ற மரக்கன்றுகள் 11,000 எண்கள் தனியார் நாற்றங்கால்களிலிருந்து பெறப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. விவசாயி நிலங்களின் வரப்புகளில் குறைந்த செலவில் வேளாண்மை பயிர்களின் மகசூல் பாதிக்காமல் நடவு மேற்கொள்ளவேண்டும். இத்திட்டத்தில் தேக்கு, ஈட்டி, மகோகனி, செம்மரம், வேங்கை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21 வழங்கப்படுகின்றது. அதிகப்பட்சம் அனும திக்கப்படும் மானியம் ஏக்கருக்கு ரூ1,400 மரக்கன்றுகள் நடவு பணி டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்ற முயற்சி
    • சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்ற 100 பேருக்கு இலவசமாக மரகன்றுகள் வழங்கப்பட்டது.

    அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் முதன்மையான ஊராட்சியாக மாற்ற பல்வேறு விதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒன்றான பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்றுவதாகும்.

    இதற்காக நேற்று கர்ப்பிணி பெண்கள், அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோருக்கு சுமார் 100 மரக்கன்றுகாளை ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி வழங்கினார்.

    இதில் ஊர் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் கீரை வகை சார்ந்த மரங்கள், பழம் வகையை சார்ந்த மரங்கள், போன்றவைகள் வழங்கப்பட்டது.

    மேலும் இதனையடுத்து அவர் கூறுகையில்:-

    மாதம்தோறும் இலவசமாக வீட்டிற்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அதனை யார் பாதுகாப்பாக பராமரித்து வளர்த்து வருகின்றார்கள் என பார்வையிட்டு அதில் சிறந்தவர்கள் யார் என்பதை பார்த்து அவர்களுக்கு தகுந்த பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

    • விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நடவு செய்ய இலவச மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
    • விவசாயிகள் மரக்கன்று தேவைப்பட்டால் நிலத்தின் சிட்டா, உரிமையாளரின் ஆதார் நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    பொள்ளாச்சி:

    வனத்துறை சார்பில் தேக்கு, ஈட்டி, சவுக்கு, செம்மரம், நாவல் மற்றும் பல்வேறு வகையான நாற்றுக்கள் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டுள்ளன.

    இந்த நாற்றுக்களை விவசாயிகள், தன்னார்வலர்கள் மற்றும் வீடுகளில் வளர்க்க விரும்புபவர்கள் வனத்துறையினரிடம் சென்று விண்ணப்பித்தால் இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

    வரும் ஆகஸ்ட் மாத இறுதி முதல் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. விவசாயிகள் மரக்கன்று தேவைப்பட்டால் நிலத்தின் சிட்டா, உரிமையாளரின் ஆதார் நகல், ஒரு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    அதேபோல், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் நாற்றுகள் நடவு செய்ய விரும்பினால் அந்த இடத்தின் சிட்டா, கல்வி நிறுவனங்களின் லெட்டர் பேடில் கோரிக்கை கடிதம், உரிமையாளர் புகைப்படம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    தன்னார்வலர்கள் என்றால் பொது இடங்களில் நடவு செய்ய வேண்டுமென்றால் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள் ஊராட்சி தலைவர்கள் அல்லது பேரூராட்சி தலைவர்களின் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு கோவை வனவியல் விரிவாக்க கோட்டம் 9791661116 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    ×