என் மலர்
நீலகிரி
- அத்திப்பழம் சீசன் தொடங்கி உள்ளதால் மரங்களில் அத்திப்பழங்கள் அதிகம் காய்த்து உள்ளன.
- பயணிகள் மகிழ்ச்சி அடைந்து பறவைகளை போட்டோ எடுத்தும் ரசித்தும் செல்கின்றனர்.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக, அங்கு தற்போது மிதமான காலநிலை நிலவுகிறது. எனவே அங்கு உள்ள மலைப்பாதையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள மரங்களில் பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன.
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள கே.என்.ஆர் பகுதியில் அத்திப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் அங்கு உள்ள மரங்களில் அத்திப்பழங்கள் அதிகம் காய்த்து உள்ளன.
எனவே அரிய வகை பறவை இனங்களில் ஒன்றாக திகழும் இருவாச்சி பறவைகள் அத்திப்பழம்சுவைப்பதற்காக படையெடுத்து வந்த வண்ணம் உள்ளன. அவை தனது நீண்ட அலகால் அத்திப்பழங்களை கொத்தி தின்று வருகின்றன.
குன்னூர் பகுதியில் இருவாச்சி பறவைகள் முகாமிட்டு உள்ளதால் அந்த வழியாக செல்லும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவற்றை போட்டோ எடுத்தும் ரசித்தும் செல்கின்றனர்.
- பா.ஜ.க நிர்வாகிகள் வெளியிட்டனர்
- நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வரவேற்பு பாடலை இன்னிசையுடன் பாடிய பாடகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்
அரவேணு,
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நீலகிரி மாவட்டத்திற்கு பாதயாத்திரை வர உள்ளார்.
இந்த நிலையில் அவரை வரவேற்கும் வகையில்படுகா மொழியில் சிறப்பு பாடல் எழுதப்பட்டு உள்ளது.அதனை நீலகிரி பா.ஜ.க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் வெளியிட்டார்.
மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி பத்மநாதன் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக கலை கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் வசந்த் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அண்ணாமலை வரவேற்பு பாடலை இன்னிசையுடன் பாடிய பாடகர்கள் கோபால், பிரகாஷ், மகேஷ், சந்தியா, தேவராஜ், காளிதாஸ், சந்திரபாபு, ரவி, ஜெயக்குமார், செல்வம், இருப்புகல் சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
- சிகிச்சைக்கு வந்திருந்தவர்களுக்கு சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிவகாமி எஸ்டேட் நிறுவனம், கோவை குமரன் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
அப்போது கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, எஸ்.கைகாட்டி, சோலூர்மட்டம், ஓம்நகர், நெடுகுளா, சுள்ளிகூடு, கஸ்தூரிபாய்நகர், சுண்டட்டி, கோடநாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில்குழந்தைகள் , பெண்கள், முதியவர்கள் உள்பட 900-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் சிகிச்சைக்கு வந்திருந்தவர்களுக்கு சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
- நாடுகாணியில் ஆயுதம் ஏந்திய ஜீப் மூலம் சென்று ரோந்து பணி மேற்ெகாள்ளப்பட்டது
- முதுமலை வன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா அறிவுரையின்பே ரில் வனத்துறை அதிகாரி கள் முக்குருத்தி தேசிய பூங்கா வனச்சரகத்துக்கு உட்பட்ட முக்குருத்தி, தெப்பக்காடு மற்றும் நிலாக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிரடியாக ரோந்து சென்றனர்.
நாடுகாணி, கொலாரிப்பேட்டை, வெஸ்டன் கேட்ச்மென்ட், முக்குருத்தி உச்சிமுனை ஆகிய 4 வழித்தடங்களில் ஆயுதம் ஏந்திய ஜீப் மூலம் சென்று ரோந்து பணிகள் மேற்கொள்ள ப்பட்டன.
தமிழகம்-கேரளா எல்லை பகுதியில் உள்ள நாடு காணி, முக்குருத்தி தேசிய பூங்கா வனக்கோ ட்டத்துக்கு உட்பட்ட கொலாரிபேட்டை ஆகிய 2 வழித்தடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் அந்நியர்கள் பிரவேசம் உள்ளதா என்பவை தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் தினந்தோறும் சிறப்பு தணிக்கை நடத்தி தெப்பக்காடு புலிகள் கண்காணிப்பு மைய அலுவலகத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஊட்டி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குருத்தி வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், வனப்பகுதியில் அந்நியர்கள் அத்துமீறி பிரவேசிக்கக்கூடாது.
அப்படி நுழைந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்ப டுமென எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- சின்னக்குன்னூா் பகுதியில் கடந்த 19-ந்தேதி 4 புலிக்குட்டிகள் பட்டினியால் இறந்தன.
- நீலகிரி மாவட்டத்தில் கடந்த 33 நாட்களில் மட்டும் இதுவரை 11 புலிகள் பலியாகி உள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக புலிகள் சாவு தொடர்கதையாக உள்ளது. அங்கு கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி சீகூரில் 2 புலிக்குட்டிகள் பட்டினியால் இறந்தன. இதற்கு அடுத்த நாள் நடுவட்டத்தில் ஒரு புலி செத்து கிடந்தது.
முதுமலையில் ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி ஒரு புலியும், அவலாஞ்சி பகுதியில் செப்டம்பா் 9-ந்தேதி ஒரு புலியும் விஷம் வைத்து கொல்லப்பட்டன. சின்னக்குன்னூா் பகுதியில் கடந்த 19-ந்தேதி 4 புலிக்குட்டிகள் பட்டினியால் இறந்தன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 33 நாட்களில் மட்டும் இதுவரை 11 புலிகள் பலியாகி உள்ளன. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் தேசிய புலிகள் காப்பக ஆணைய ஐ.ஜி. முரளி தலைமையில் அதிகாரிகள், இன்று காலை முதுமலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் புலிகள் இறந்து கிடந்த பகுதிகள் மற்றும் சாவுக்கான காரணம் ஆகியவை குறித்து தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.
முதுமலையில் 2 நாட்கள் தங்கியிருக்கும் தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 11 புலிகள் பலியானதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
அதன்பிறகு இறுதிகட்ட விசாரணை அறிக்கை, தேசிய புலிகள் காப்பக ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- சிறந்த சுற்றுலா கிராம போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கி வைத்தார்.
- விருதை பெறுவதற்காக உல்லாடா கிராம தலைவர் மாதன் தலைமையிலான குழுவினர் டெல்லிக்கு சென்று உள்ளனர்.
ஊட்டி:
தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களை தேடும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி சிறந்த சுற்றுலா கிராம போட்டியை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கி வைத்தார்.
உள்ளூரின் கலை, கலாசாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களை கவுரவிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இதற்காக தனி இணையதளமும் தொடங்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள அனைத்து தரப்பினரையும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார்.
இதையடுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 795 விண்ணப்பங்கள் மத்திய சுற்றுலா அமைச்சகத்திற்கு வந்தது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த சுற்றுலா கிராமமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பள்ளத்தாக்கில் உள்ள உல்லாடா கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான விருதை பெறுவதற்காக உல்லாடா கிராம தலைவர் மாதன் தலைமையிலான குழுவினர் டெல்லிக்கு சென்று உள்ளனர். இவர்களுக்கான பயண செலவு, உணவு செலவு, தங்குமிடம் ஆகியவற்றை மாநில சுற்றுலாத்துறை ஏற்றுள்ளது. வருகிற 27-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.
- மேளதாளங்களுடன் சீர்வரிசை எடுத்து வந்தனர்
- கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்
ஊட்டி,
ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கி ழமை தோறும் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை கள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒருபகுதியாக புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்துவது என கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தம்பதி சமேதராய் அருள்பாலித்த சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்-வழிபாடுகள் நடத்தப்பட்டன. முன்னதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திருக்கல் யாண வைபவத்துக்காக மேளதாளத்துடன் சீர்வரிசை தட்டுகள் எடுத்து வந்திருந்தனர்.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க இறைவனுக்கு திருக்கல்யா ணம் நடைபெற்றது. அப்போது கோவிந்தா... கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் மனமு ருக வழிபட்டனர். தொடர்ந்து சீனிவாச பெரு மாள் தம்பதி சமேதராக பக்தர்களுக்கு அருள்பா லித்தனர்.
ஊட்டி பெருமாள் கோவில் திருக்கல்யாணத்தில் சுற்றுவட்டார பகுதிக ளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசா தம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சீனி வாசபெருமாளின் திருவீதி உலா, கோலாகலத்துடன் தொடங்கியது. கோவில் முன்பு தொடங்கிய சுவாமிகள் ஊர்வலம் மார்க்கெட், லோயர்பஜார், பஸ் நிலையம், மெயின்ப ஜார், காபிஹவுஸ் சந்திப்பு வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர் கள் திரண்டு வந்து சுவாமி களை மனமுருக பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
- ஸ்ரீனிவாச அறக்கட்டளை புனரமைத்து உள்ளது
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெலாகோட்டை ஊராட்சி, சோலாடி பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது.
இதனை தற்போது ஸ்ரீனிவாச அறக்கட்டளை புனரமைத்து உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.அப்போது கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவி கீர்த்தனா, நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர் மிலா, ஸ்ரீனிவாச அறக்கட்டளை செயலாளர் சுந்தர்ரா ஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி ஆகியோர் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் சோலடி பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- யூனியன் தலைவர் ராம்குமார் தொடங்கி வைத்தார்
- ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஊட்டி,
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொணவக்கரை ஊராட்சி அட்டடி கிராமத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனைப்படி சாலைப்பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இந்த பணியை கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி தலைவர் முருகன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயராமன், முருகன், குராக்கரை சுப்பிரமணி, இளைஞரணியை சேர்ந்த சிவனேசன், அட்டடி வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தாயை பற்றி தவறாக பேசியதால் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம்
- கொலை பற்றி மனைவியிடம் உளறியதால் போலீசில் சிக்கினார்
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்த கிரி பொன்னூர் கிராமத்தின் அருகே உள்ள ஈளாடாவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது46). கூலித்தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. சிவக்குமாரின் மனைவி மற்றும் இளைய மகள் ஆகியோர் அன்னூரில் வசித்து வருகின்றனர்.
சிவக்குமார் தனது தாயுடன் ஈளாடாவில் வசித்து வந்தார்.கடந்த 18-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிவக்கு மார் மாலை வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரின் தாய் சிவக்குமாரின் மகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் தனது தாயுடன் ஈளாடாவிற்கு விரைந்து வந்து, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதையடுத்து அவர் சம்ப வம் குறித்து சோலூர்மட்டம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிவக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிவக்குமாரின் மகளுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், உனது தந்தையை எனது கணவர் கொன்று பொன்னூர் பகுதியில் புதைத்து விட்டதாக கூறுகிறார் என்ற தகவலை தெரிவித்தார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர் உடனடியாக சோலூர்மட்டம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். அதன்பேரில் குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொன்னூர் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த பெண் கூறிய சாலையோரம் இருந்த வனப்பகுதியை யொட்டிய நிலத்தை தோண்டி பார்த்த போது, சிவக்குமார் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரின் உடலை வெளியில் எடுத்தனர்.பின்னர் சிவக்குமாரின் மகளை தொடர்பு கொண்டு பேசிய பெண் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காரைக்குடியை சேர்ந்தவர் என்பதும், அவரது கணவரான விஷ்ணு என்பவர் தான் சிவக்குமாரை கொன்று புதைத்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் காரைக்குடிக்கு விரைந்து சென்று, அங்கு மனைவி வீட்டில் பதுங்கி இருந்த விஷ்ணுவை கைது செய்த னர்.பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியி ருப்பதாவது:-
நான் கேரடாமட்டம் பிரியா காலனியில் வசித்து வருகிறேன். நான் எனது நண்பர் தங்கபாண்டி மற்றும் சிவக்குமார் 3 பேரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தோம்.வார விடுமுறை நாட்கள் மற்றும் சில நேரங்களில் ஒன்றாக சேர்ந்து மது அருந்த செல்வது வழக்கம். கடந்த 18-ந் தேதி வேலை முடிந்த பின்னர் 3 பேரும் மது அருந்த முடிவு செய்தோம்.
அதன்படி நாங்கள் வேலை முடிந்தவுடன் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி கொண்டு, பொன்னூர் பகுதியையொட்டிய வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். மது அருந்திய சில நிமிடங்களில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, சிவக்குமார் எனது தாயை பற்றி தவறாக பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நான் அவரிடம் அப்படி பேசாதே என்று சொல்லியும் கேட்காமல் அவர் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனது நண்பர் தங்கபாண்டியுடன் சேர்ந்து அங்கிருந்த கல்லை எடுத்து சிவக்குமாரின் தலையில் தாக்கினேன். இதில் அவர் சிறிது நேரத்தில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்து விட்டார். பின்னர் நாங்கள் 2 பேரும் சேர்ந்து அவரது உடலை அங்கேயே குழி தோண்டி புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல் சென்று விட்டோம்.
அங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்ப தால், நான் கோத்தகிரியில் இருந்து காரைக்குடியில் உள்ள எனது மனைவி வீட்டிற்கு சென்றேன். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட நான், இப்போது தான் ஒருவரை கொலை செய்து விட்டு புதைத்து வருகிறேன். அதே போன்று உன்னையும் கொன்று புதைத்து விடுவேன் என கூறினேன். அவர் என்னிடம் துருவி விசாரித்து தகவலை போலீசாருக்கு தெரிவித்த தால் நான் போலீசில் சிக்கி கொண்டேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விஷ்ணு கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பரான தங்கபாண்டியனையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவ டிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இன்று காலை இறந்த சிவக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கூலித்தொழிலாளி அடித்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் கோத்தகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமெரிக்காவின் துணை அட்மிரல் விவேக் எச்.மூர்த்தி குடும்பத்துடன் ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகாசுவாமிகளிடம் ஆசிபெற வந்தனர்
- இந்திய கலாசாரத்தை போற்று செயல்பாடுகளை பார்வையிட்டு மகிழ்ச்சி
ஊட்டி,
அமெரிக்கா மேரிலாண்டில் உள்ள ெஜ.எஸ்.எஸ். ஆன்மீக மிஷனுக்கு அமெரிக்காவின் ஜெனரல் சர்ஜன் மற்றும் துணை அட்மிரல் டாக்டர் விவேக் எச்.மூர்த்தி மற்றும் அவரது பெற்றோரான டாக்டர் எல்.என்.மூர்த்தி, ஸ்ரீமதி மைத்ரேயி மூர்த்தியும் ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகளின் ஆசீர்வாதத்திற்காக வருகை புரிந்தனர்.
மிஷனில் உள்ள கோவிலுக்கு சென்று பூஜையில் பங்கேற்றனர். அப்போது இந்திய கலாசாரத்தை போற்றச் செய்யும் செயல்பாடுகளை பார்வையிட்டு அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஸ்ரீசுத்தூர் மடம் மற்றும் ஜே.எஸ்.எஸ். மகா வித்யாபீடம் செய்து வரும் சேவைப்பணிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
அதே சந்தர்ப்பத்தில் அவர் தனது அடுத்த இந்திய பயணத்தின் போது ஜெ.எஸ்.எஸ். நிறுவனங்களை பார்வையிட அழைக்கப்பட்டார். நிகழ்ச்சியின் போது பல்வேறு விருந்தினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் நடக்கிறது
- அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை
கோத்தகிரி,
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் உள்ள சிறிய நடைபாதையை அங்கு உள்ள பொதுமக்கள், பள்ளிகுழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையில் உள்ள சாக்கடைக்குழி திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சாம்சந்த் பகுதியில் பெரியளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






