என் மலர்
உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தால் நடவடிக்கை
- நாடுகாணியில் ஆயுதம் ஏந்திய ஜீப் மூலம் சென்று ரோந்து பணி மேற்ெகாள்ளப்பட்டது
- முதுமலை வன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா அறிவுரையின்பே ரில் வனத்துறை அதிகாரி கள் முக்குருத்தி தேசிய பூங்கா வனச்சரகத்துக்கு உட்பட்ட முக்குருத்தி, தெப்பக்காடு மற்றும் நிலாக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிரடியாக ரோந்து சென்றனர்.
நாடுகாணி, கொலாரிப்பேட்டை, வெஸ்டன் கேட்ச்மென்ட், முக்குருத்தி உச்சிமுனை ஆகிய 4 வழித்தடங்களில் ஆயுதம் ஏந்திய ஜீப் மூலம் சென்று ரோந்து பணிகள் மேற்கொள்ள ப்பட்டன.
தமிழகம்-கேரளா எல்லை பகுதியில் உள்ள நாடு காணி, முக்குருத்தி தேசிய பூங்கா வனக்கோ ட்டத்துக்கு உட்பட்ட கொலாரிபேட்டை ஆகிய 2 வழித்தடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் அந்நியர்கள் பிரவேசம் உள்ளதா என்பவை தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் தினந்தோறும் சிறப்பு தணிக்கை நடத்தி தெப்பக்காடு புலிகள் கண்காணிப்பு மைய அலுவலகத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஊட்டி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குருத்தி வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், வனப்பகுதியில் அந்நியர்கள் அத்துமீறி பிரவேசிக்கக்கூடாது.
அப்படி நுழைந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்ப டுமென எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.






