என் மலர்
நீலகிரி
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 15 இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் குன்னூரில் இருந்துமேட்டுப்பாளையம் வரை செல்லும் சாலையானது மலைகளை குடைந்து அமைக்கப்பட்டது ஆகும். மழைக்காலத்தில் மலையில் உச்சியில் இருந்து புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி மேற்கண்ட சாலையில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் பகுதி வழியாக தண்ணீர் பாய்ந்தோடுகின்றன. இந்த தண்ணீரானது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கலந்து, பவானிசாகர் அணையை அடைகிறது.
ஆனால் கோடை காலத்தில் அந்த நீர்வீழ்ச்சிகள் வறண்டு விடுகின்றன. மழைக்காலத்தில் நீர்வீழ்ச்சிகள் புத்துயிர் பெறுகின்றன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். அதன்படி தற்போது வடகிழக்கு பருவமழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 15 இடங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. லாஸ் நீர்வீழ்ச்சி, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் மலை உச்சியில் இருந்து ரெயில் பாலம் வழியாக பாய்ந்தோடும் தண்ணீரை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் நின்று பார்த்தால் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று காலையும் மழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது.
ஊட்டி:
கொரோனா பொதுமுடக்கத்தால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதுமலையை தவிர அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன. 8 மாதங்களாக முடங்கியிருந்த பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்துக்கு படையெடுத்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிங்கார, கரன்சி, அடர்லி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மாஸ் மற்றும் சமூக இடைவெளியுடன் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதுதவிர தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், கேன்ஹில் மலைப்பாதை, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டியது.
இதனால் அனைத்து ஓட்டல், தங்கும் விடுதி, வணிக நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். நேற்று காலை ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் விடிய விடிய பரவலாக கனமழை பெய்தது. காலையும் தொடர்ந்து அடர்ந்த மேகமூட்டம், கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை காட்சி முனையில் இருந்து கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அடர்ந்த மேகமூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.
தொடர் மழையால் ஊட்டி கூடலூர் சாலை பட்பயர் என்ற இடத்தில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனையடுத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
இதேபோன்று குன்னூர் சித்தி விநாயகர் கோவில் அருகே ஜெகதீஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் அவரது உறவினர் ஜீவிதா தனது மகனுடன் வசித்து வருகிறார். மழை பெய்தபோது வீட்டில் இருந்தார். அப்போது வீட்டில் கல் விழுவதுபோல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவிதா தனது மகனுடன் வெளியே ஓடினார். அவர்கள் வெளியேறிய சில வினாடிகளில் வீடு முற்றிலும் விழுந்து தரைமட்டமானது.
அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வீடும் மழைம் இடிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இன்று காலையும் தொடர்ந்து ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது.

கூடுதல் கட்டணம், பணிப்பெண்கள் சேவையுடன் செல்லும் ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. அதற்கு ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக, மலைப்பாதையில் இந்த ரெயில் செல்லும்போது இயற்கை காட்சிகளை கண்டு மகிழலாம். வளைந்து நெளிந்து செல்லும் இந்த பாதையில் மொத்தம் 208 வளைவுகளும், ஏராளமான பாலங்களும் உள்ளன. அத்துடன் 16 குகைகளும் உள்ளது.
இந்த மலை ரெயிலில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்தனர். முன்பதிவு வசதியுடன் உள்ள இந்த ரெயிலில் பயணிக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பு கட்டணமாக ரூ.600-ம், குன்னூருக்கு ரூ.445-ம், 2-ம் வகுப்பு கட்டணமாக ஊட்டிக்கு ரூ.295-ம், குன்னூருக்கு ரூ.190-ம், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க ஊட்டிக்கு ரூ.175-ம், குன்னூருக்கு ரூ.110- வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர சில நேரங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் சிறப்பு ரெயிலும் இயக்கப்படும். அந்த ரெயிலில் பயணிக்க முதல் வகுப்பு கட்டணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு ரூ.1,210-ம், ஊட்டிக்கு ரூ.1,575-ம், 2-ம் வகுப்பில் குன்னூருக்கு ரூ.815-ம், ஊட்டிக்கு ரூ.1,065-ம் வசூலிக்கப்படும். இந்த ரெயிலில் செல்லும் பயணிகளுக்கு உணவு மற்றும் டீ, காபி மற்றும் நொறுக்கு தீனிகளும் வழங்கப்படும்.
இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மலை ரெயில் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வருவதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதனால் பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே ஊட்டி மலை ரெயிலையும் இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் டி.என்.43 என்ற தனியார் நிறுவனம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.
இதனால் மலை ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியின் முன்பக்கம் ஆரஞ்சு நிறத்தில் டி.என்.43 என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது. அத்துடன் பக்கவாட்டில் உள்ள ரெயில் பெட்டிகளில் ஆரஞ்சு நிறத்தில் கோடுகளும் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் இறுதிவரை இந்த தனியார் நிறுவனம் சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சாதாரணமாக மலை ரெயிலில் செல்ல இருந்த கட்டணத்தை விட சிறப்பு ரெயிலில் செல்ல பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதால், சாதாரண பொதுமக்கள் இந்த ரெயிலில் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்து உள்ளதுடன், இந்த ரெயில் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் மலை ரெயிலை தனியாருக்கு விடப்பட்டு உள்ளதாக கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இது தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளன.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயிலை தனியாரிடம் கொடுக்கவில்லை. இந்த சிறப்பு ரெயிலை யார் வேண்டும் என்றாலும் வாடகைக்கு எடுத்து இயக்கலாம். மேலும் பல முறை தனியார் நிறுவனங்கள் பணம் செலுத்தி சினிமா சூட்டிங்குக்கு எடுத்து உள்ளனர். அதுபோன்று வெளிநாட்டு தேனிலவு தம்பதிகளும் வாடகைக்கு எடுத்து உள்ளனர். இதற்காக ரெயில்வே நிர்வாகத்துக்கு ஒரு நாளுக்கு ரூ.4 லட்சத்து 93 ஆயிரத்து 500 வாடகையாக செலுத்த வேண்டும்.
அவ்வாறு செல்லும் சிறப்பு ரெயிலில் 160 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேல் பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது சிறப்பு மலை ரெயில் கடந்த 5-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி வரை மட்டுமே 13 டிரிப் இயக்கிக் கொள்ள தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மலை ரெயிலில் 4 பெட்டிகள் இருக்கும். ஒரு பெட்டிக்கு 40 பேர் வீதம் 160 பேர் தான் பயணம் செய்ய முடியும். வாடகைக்கு எடுப்பவர் கள் அதிகம் பேரை ஏற்றக்கூடாது என்பதற்காக ரெயில்வே துறை சார்பில் பரிசோதகர்கள் மற்றும் பணியாளர்களும் அந்த ரெயிலில் செல்வார்கள். ரெயிலை இயக்குவதும் அரசுத்துறை டிரைவர்கள் தான்.
தற்போது கொரோனா ஊரடங்கால் மலை ரெயில் இயக்கப்படவில்லை. ஆனால் தற்போது தனியார் மூலம் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கொரோனா பீதி குறைந்து வழக்கம் போல அனைத்து ரெயில்களும் இயக்கப்படும் போது ஊட்டி மலை ரெயிலும் இயக்கப்படும். இது தவிர தனியார் மூலம் இயக்கப்படும் சேவைக்காக மற்றொரு ரெயில் உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மூலம் மலை ரெயில் இயக்கப்படுவதால் சாதாரண மக்கள் அதில் பயணம் செய்ய முடியாது என்று பொது மக்கள் கவலைப்பட வேண்டாம்.
எனவே வழக்கமான ரெயில் சேவை தொடர்ந்து நடத்தப்படும். இதே போல மலை ரெயிலின் பெயரும் மாற்றப்படவில்லை. ஆனால் மலை ரெயிலில் வைக்கப்பட்ட தனியார் நிறுவன போர்டை அகற்ற சொல்லி உள்ளோம். இனி அந்த போர்டு இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பு மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து உள்ள ஊட்டியை சேர்ந்த முஜீப் கூறுகையில், சுற்றுலாவை மேம்படுத்தவே இந்த சிறப்பு மலை ரெயிலை இயக்குகிறோம். இதில் ஒரு கண்காணிப்பாளர் உட்பட 6 பெண்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பயணிகளுக்கு குடிநீர் பாட்டில், கட்லட், சமோசா மற்றும் எங்களது நிறுவன தயாரிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரெயிலில் பயணிகள் அமர்வதற்கு வசதியாக சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்ய சிறப்பு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம், நட்சத்திர விடுதியில் தங்க ரூ.5 ஆயிரம், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ரூ.2 ஆயிரம், திரும்பி செல்லும்போது கோவை விமான நிலையத்தில் கொண்டு விட ரூ.2 ஆயிரம் என்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றார்.

8 மாதங்களுக்கு பிறகு கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலில், சுற்றுலா பயணிகளின் கண்களை கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்கள் உள்ளன. அதிலும், நகரின் மையப்பகுதியில் நட்சத்திர வடிவில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி சுற்றுலா பயணிகளின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். அங்கு படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், கொடைக்கானல் நகராட்சி மற்றும் தனியார் சார்பில் நட்சத்திர ஏரியில் படகுகள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, கடந்த மார்ச் மாத இறுதியில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் கொடைக்கானல் நகர் மற்றும் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டன. இதனை பார்வையிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் அலைமோதுகிறது. அதேநேரத்தில், முக்கிய பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்த படகு சவாரியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நேற்று முதல் தொடங்கப்படும் என்று சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் அறிவித்தார். இதையடுத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான 9 படகுகள் நேற்று முதல் இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
அதேநேரத்தில் நகராட்சிக்கு சொந்தமான படகுகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, உரிய உத்தரவு கிடைத்தவுடன் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்றனர். 8 மாதங்களுக்கு பிறகு நட்சத்திர ஏரியில் படகு சவாரி தொடங்கப்பட்டதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே படகு சவாரி தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் பலத்த காற்று வீசியது. கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மாலை நேரத்தில் காற்று மற்றும் மழை குறைந்ததால் மீண்டும் படகு சவாரி தொடங்கியது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரெயில் பயணக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
நீலகிரி:
மிகவும் பிரபலமான மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான நீராவியால் இயங்கும் மலை ரெயில் சேவை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக சமூகவலைதளத்தில் செய்திகள் பரவின.
இதில், ஊட்டி மலை ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே தனியார் நிறுவனத்திடம் குத்தகைக்கு விட்டுவிட்டதாவும் மலைரெயில் டி.எண் 43 என பெயரிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
மேலும், சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த மலை ரெயில் கட்டணம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து தற்போது நபர் ஒருவருக்கு 2,500 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனால், சுற்றுலா பயணிகளும், ஏழை, எளிய மக்களும் மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ளமுடியாத சூழல் உருவாகியுளதாக தகவல்கள் வெளியானது. மேலும், தனியார் மயமானதால் ஊட்டி மலை ரெயிலில் தனியார் நிறுவன பணிப்பெண்கள் காவி வண்ணத்திலான உடை அணிந்திருப்பது போன்ற புகைபடங்களும் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், ஊட்டி மலைரெயில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி முற்றிலும் தவறானது என விளக்கமளித்த தெற்கு ரெயில்வே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதேபோல் மலை ரெயில் கட்டணமும் உயர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு தனியார் நிறுவனம் ஊட்டி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து திட்டமிடப்பட்ட (Chartered Trip) பயணம் சென்றது. சாதாரண பயணத்தை காட்டிலும் இது போன்று மொத்த வாடகைக்கு எடுக்கப்பட்டு இயக்கப்படும் ரெயிலின் கட்டணம்ம் கூடுதலாக இருக்கும்.
மேலும், ரெயில் பணிப்பெண்கள் காவியுடையில் இருப்பது மற்றும் ரெயின் பெயர் மாற்றப்பட்டது என வெளியான புகைப்படங்கள் தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெற்கு ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மலை ரெயில் தற்போதுவரை தெற்கு ரெயில்வேயின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வேயின் விளக்கத்தையடுத்து, ஊட்டி மலைரெயில் தனியார்மயமாகிவிட்டது என பரவிவந்த தகவல்கள் தவறானவை என தெரியவந்துள்ளது மட்டுமல்லாமல் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவில் இருந்து பாதுகாக்க தேயிலை செடிகளை விவசாயிகள் கவாத்து செய்கின்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. எனினும் கடந்த பல ஆண்டுகளாக பச்சைத் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் மழை வெள்ள சேதம் காரணமாக தேயிலை சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் நீலகிரி தேயிலைத்தூளுக்கு சந்தையில் வரவேற்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ரூ.10 முதல் ரூ.13-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பச்சை தேயிலை விலை, அதிகபட்சமாக ரூ.30 வரை கொள்முதல் செய்யப்பட்டது. எனவே தேயிலை பயிரிட்டு இருந்த விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்தது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மீண்டும் அசாம் மாநிலத்தில் தேயிலைத்தூள் உற்பத்தி தொடங்கியதால், நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கொள்முதல் விலை சற்று வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்த மாதத்தில் பச்சை தேயிலை விலை கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.23-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பனிக்காலம் தொடங்கியதால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் கொழுந்துகள் கருக தொடங்கிவிட்டன. இதனால் பச்சை தேயிலை சாகுபடி பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு பனிப்பொழிவின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாப்பதற்காக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளுக்கு கவாத்து செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் தேயிலை தோட்டத்தில் மேல் கவாத்தும், பிற விவசாயிகள் அடிக்கவாத்தும் செய்கின்றனர். கவாத்து செய்து அகற்றிய இலைகளை, இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக தேயிலைச்செடிகளின் வேர்கள் உள்ள பகுதியில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்.
இதுகுறித்து கோத்தகிரி தேயிலை விவசாயிகள் கூறியதாவது:-
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேயிலை செடிகளுக்கு அடிக்கவாத்து செய்வது மிகவும் சிறந்தது. பனிக்காலங்களில் மேல் காவாத்து செய்தால், தரமான தேயிலை கொழுந்துகள் வளரும். கோத்தகிரி பகுதியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே தேயிலை தோட்டங்களில் கவாத்து செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம். கவாத்து பணி முடிந்த பிறகு தேயிலை தோட்டத்தை சுத்தம் செய்து தேயிலை செடிகளுக்கு அமோனியம் சல்பேட் மற்றும் யூரியா பேஸ் உரங்களை இட்டு முறையாக பராமரித்து வந்தால் மார்ச் மாதத்திற்குள் தரமான தேயிலை கொழுந்துகள் வளர்வதுடன், தேயிலை சாகுபடியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகிறார்கள். இந்த பச்சை தேயிலைதான் தேயிலைத்தூள் தயாரிக்க மூலப்பொருளாக உள்ளது. குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனையாகும் தேயிலைத்தூளின் சராசரிவிலையை கருத்தில் கொண்டே சிறு விவசாயிகள் வினியோகிக்கும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதனால் தேயிலைத்தூளின் விற்பனை விலையின் ஏற்ற-இறக்கம் பச்சை தேயிலை விலை நிர்ணயத்தில் நேரடியாக பங்கு பெறுகிறது. குன்னூரில் தேயிலை வர்த்தகர் அமைப்பின் மூலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடத்தப்படுகிறது.
ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு தேயிலைத்தூளை வாங்குகிறார்கள். அங்கு விற்பனை எண் 49-க்கான ஏலம் கடந்த 3, 4-ந் தேதிகளில் நடைபெற்றது. ஏலத்திற்கு மொத்தம் 21 லட்சத்து 17 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 16 லட்சத்து 57 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 60 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 88 சதவிகித தேயிலைத்தூள் விற்பனையானது. விற்பனையான தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.21 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
இதில் மொத்தம் 18 லட்சத்து 45 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் ரொக்க மதிப்பு 20 கோடியே 16 லட்ச ரூபாய் ஆகும். சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு 308 ரூபாயாகவும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு 241 ரூபாயாகவும் விற்பனையானது. சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண விலை கிலோவுக்கு 81 ரூபாயில் இருந்து 90 ரூபாய் வரையில் ஏலம் சென்றது. உயர் வகை தேயிலைத்தூள் கிலோவுக்கு 132 ரூபாய் முதல் 166 ரூபாய் வரை ஏலம் போனது.
டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோவுக்கு 108 ரூபாய் முதல் 113 ரூபாய் வரையிலும், உயர் வகை தேயிலைத்தூள் கிலோவுக்கு 167 ரூபாயில் இருந்து 206 ரூபாய் வரையும் விற்பனையானது. விற்பனை எண் 50-க்கான ஏலம் வருகிற 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த ஏலத்திற்கு மொத்தம் 20 லட்சத்து 98 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வர உள்ளது.

தமிழகத்தில் ‘யார் கட்சி தொடங்கினாலும் தி.மு.க.வின் வெற்றியை பாதிக்காது’ என்று ஊட்டியில் கனிமொழி எம்.பி. கூறினார்.
ஊட்டி:
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை மேற்கொண்டு வரும் தி.மு.க. மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி., குன்னூருக்கு வந்தார். தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது, நீலகிரியில் என்ஜினீயரிங் கல்லூரி இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அரக்காட்டில் தேயிலை தோட்ட தொழிலாளர்களையும், காளான் உற்பத்தியாளர்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் கனிமொழி எம்.பி. பேசும்போது, ஊட்டியில் வீடுகள், கடைகள், கட்டிடங்களை முறைப்படுத்த முடியாமல் உள்ளது. காய்கறிகள், பழங்கள், தேயிலை உள்ளிட்டவைகளின் விலை பிரச்சினைகளால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு வியாபாரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் விவசாயிகள், வியாபாரிகளிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-தமிழகத்தில் தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த 10 ஆண்டு காலமாக படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாமல் உள்ளனர். விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை தீர்வு காணப்படாமல் உள்ளது. நீலகிரியில் பச்சை தேயிலைக்கு நல்ல விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும், அது வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை நிச்சயம் பாதிக்காது. அரசியலுக்கு வராத ஒருவரை பற்றி விமர்சனம் செய்வது சரியாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டிக்கு வந்த கனிமொழி எம்.பி.யை தோடர், கோத்தர், பனியர் ஆகிய பழங்குடியின பெண்கள் பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர். பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். முன்னதாக குன்னூரில் கனிமொழி எம்.பி. பேசிக்கொண்டு இருந்தபோது அம்மா மருந்தகம் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே பேச்சை சீக்கிரம் முடியுங்கள் என்று ஒருவர் கூச்சலிட்டார். உடனே தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மதுக்கடை திறந்து இருக்கிறது அல்லவா?, அதனால் அப்படிதான் இருக்கும் என்று கனிமொழி எம்.பி., தி.மு.க. தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
பொது இடங்களில் 68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இங்கு வாழும் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. எனினும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலி குடிநீர் பாட்டில்களை வனப்பகுதியில் வீசும் நிலை இருந்தது. இதனால் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் நாளை(திங்கட்கிழமை) முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பொது இடங்களில் 68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து வகையான குடிநீர் பாட்டில்களை(5 லிட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள குடிநீர் பாட்டில்கள் தவிர) விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்த்து, குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வேண்டும். நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெகமம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெகமம்:
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோழித்துறை பகுதியை சேர்ந்தவர் ரம்யா (வயது 25), இவர் அதே பகுதியில் அட்டாடி ஊரைச்சேர்ந்த மூர்த்தி என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
ரம்யா நடத்தையில் மூர்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அத்துடன் ரம்யாவை மூர்த்தி அடித்து துன்புறுத்தியும் வந்ததாக தெரிகிறது. இதனால் ரம்யா, கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் இருந்தார்.
அப்போது அதேப்பகுதியை சேர்ந்த தர்மராஜ் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு ரம்யா, 2-வதாக தர்மராஜை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் தனது 2 குழந்தைகளுடன் தர்மராஜூடன் வசித்து வந்தார்.
பின்னர் அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள மெட்டுவாவிக்கு வந்தனர். அங்குள்ள கரையாம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கி இருந்து கணவன்-மனைவியும் சேர்ந்து கூலி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரம்யாவுக்கு திடீரென்று நெஞ்சுவலி (மாரடைப்பு) ஏற்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து தர்மராஜ் அதிர்ச்சி அடைந்தார். தனது கண்முன்பே மனைவி ரம்யா, நெஞ்சுவலியில் இறந்துபோனதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
உடனே அவர் இரவில் தனது மாமியாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நெஞ்சுவலியில் ரம்யா இறந்ததை தெரிவித்தார். பின்னர், ரம்யா இல்லாமல் என்னால் வாழ முடியாது. எனவே அவர் சென்ற இடத்துக்கே நானும் செல்கிறேன், குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
பின்னர் அவர் வீட்டில் ரம்யாவின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ரம்யாவின் தாயார், தர்மராஜின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர் உறவினர்களுடன் மெட்டுவாவி வந்து பார்த்தபோது ரம்யா இறந்து கிடந்த இடத்தின் அருகிலேயே தர்மராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நெகமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கணவன்-மனைவி 2 பேரின் உடலை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நெகமம் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல், கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டம் பணிக்கு செல்லும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலோ அல்லது சுயமாக தொழில் புரிபவராகவோ இருத்தல் வேண்டும்.
பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருசக்கர ஓட்டுனர் உரிமம் பெற்று இருத்தல் வேண்டும். பயனாளிகள் வாங்கும் இருசக்கர வாகனங்கள் 1.1.2018-ந் தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும். 125 சி.சி. திறனுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். இந்திய வாகன சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வாகனமாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு சான்று, இருப்பிட சான்று, ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, பணிபுரிவது மற்றும் சுய தொழில் புரிவதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்வி சான்று(குறைந்தபட்ச தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விதவை, ஆதரவற்ற மகளிர், 35 வயதுக்கு மேல் திருமணம் ஆகாத பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கான சான்றிதழ், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்), மாற்றுத்திறனாளிகள் சான்று, இருசக்கர வாகனத்திற்கான விலை புள்ளி அல்லது விலை பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள பெண்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அம்மா இருசக்கர வாகனம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.