என் மலர்
செய்திகள்

தேயிலை தோட்டத்தில் செடிகள் கவாத்து செய்யப்பட்டு உள்ளதை காணலாம்
தேயிலை செடிகளை கவாத்து செய்யும் விவசாயிகள்
பனிப்பொழிவில் இருந்து பாதுகாக்க தேயிலை செடிகளை விவசாயிகள் கவாத்து செய்கின்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. எனினும் கடந்த பல ஆண்டுகளாக பச்சைத் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் மழை வெள்ள சேதம் காரணமாக தேயிலை சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் நீலகிரி தேயிலைத்தூளுக்கு சந்தையில் வரவேற்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ரூ.10 முதல் ரூ.13-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பச்சை தேயிலை விலை, அதிகபட்சமாக ரூ.30 வரை கொள்முதல் செய்யப்பட்டது. எனவே தேயிலை பயிரிட்டு இருந்த விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்தது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மீண்டும் அசாம் மாநிலத்தில் தேயிலைத்தூள் உற்பத்தி தொடங்கியதால், நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை கொள்முதல் விலை சற்று வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்த மாதத்தில் பச்சை தேயிலை விலை கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.23-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பனிக்காலம் தொடங்கியதால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் கொழுந்துகள் கருக தொடங்கிவிட்டன. இதனால் பச்சை தேயிலை சாகுபடி பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு பனிப்பொழிவின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாப்பதற்காக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளுக்கு கவாத்து செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் தேயிலை தோட்டத்தில் மேல் கவாத்தும், பிற விவசாயிகள் அடிக்கவாத்தும் செய்கின்றனர். கவாத்து செய்து அகற்றிய இலைகளை, இயற்கை உரமாக பயன்படுத்துவதற்காக தேயிலைச்செடிகளின் வேர்கள் உள்ள பகுதியில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்.
இதுகுறித்து கோத்தகிரி தேயிலை விவசாயிகள் கூறியதாவது:-
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேயிலை செடிகளுக்கு அடிக்கவாத்து செய்வது மிகவும் சிறந்தது. பனிக்காலங்களில் மேல் காவாத்து செய்தால், தரமான தேயிலை கொழுந்துகள் வளரும். கோத்தகிரி பகுதியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே தேயிலை தோட்டங்களில் கவாத்து செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம். கவாத்து பணி முடிந்த பிறகு தேயிலை தோட்டத்தை சுத்தம் செய்து தேயிலை செடிகளுக்கு அமோனியம் சல்பேட் மற்றும் யூரியா பேஸ் உரங்களை இட்டு முறையாக பராமரித்து வந்தால் மார்ச் மாதத்திற்குள் தரமான தேயிலை கொழுந்துகள் வளர்வதுடன், தேயிலை சாகுபடியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story