search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    பொது இடங்களில் 68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்- கலெக்டர் தகவல்

    பொது இடங்களில் 68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இங்கு வாழும் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. எனினும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலி குடிநீர் பாட்டில்களை வனப்பகுதியில் வீசும் நிலை இருந்தது. இதனால் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையில் நாளை(திங்கட்கிழமை) முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பொது இடங்களில் 68 குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து வகையான குடிநீர் பாட்டில்களை(5 லிட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள குடிநீர் பாட்டில்கள் தவிர) விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்த்து, குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வேண்டும். நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×